و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ وَاللَّفْظُ لِابْنِ رَافِعٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ:
أَنَّ سَهْلَةَ بِنْتَ سُهَيْلِ بْنِ عَمْرٍو جَاءَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ سَالِمًا لِسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ مَعَنَا فِي بَيْتِنَا وَقَدْ بَلَغَ مَا يَبْلُغُ الرِّجَالُ وَعَلِمَ مَا يَعْلَمُ الرِّجَالُ قَالَ أَرْضِعِيهِ تَحْرُمِي عَلَيْهِ
قَالَ فَمَكَثْتُ سَنَةً أَوْ قَرِيبًا مِنْهَا لَا أُحَدِّثُ بِهِ وَهِبْتُهُ ثُمَّ لَقِيتُ الْقَاسِمَ فَقُلْتُ لَهُ لَقَدْ حَدَّثْتَنِي حَدِيثًا مَا حَدَّثْتُهُ بَعْدُ قَالَ فَمَا هُوَ فَأَخْبَرْتُهُ قَالَ فَحَدِّثْهُ عَنِّي أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْنِيهِ
நபி (ஸல்) அவர்களிடம் ஸஹ்லா பின்த்தி ஸுஹைல் பின் அம்ரு (ரலி) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஸாலிம் (ரலி) எங்களுடன் எங்கள் வீட்டில்தான் வசிக்கின்றார். அவர் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அவர் ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார்; மற்ற ஆண்கள் அறிகின்றவற்றை அவரும் அறிகின்றார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு அதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு அபீமுலைக்கா (ரஹ்) கூறுவதாவது:
ஓராண்டு அல்லது சுமார் ஓராண்டு காலமாக இந்த ஹதீஸை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை. இதை அறிவிக்க நான் அஞ்சினேன். பின்னர் (ஒரு முறை) காஸிம் பின் முஹம்மது (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது நான் அவர்களிடம், “நீங்கள் என்னிடம் ஒரு ஹதீஸை அறிவித்தீர்கள். அதை இதுவரை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை” என்று கூறினேன். காஸிம் (ரஹ்), “அந்த ஹதீஸ் எது?” என்று (என்னிடம்) கேட்க, நான் இந்த ஹதீஸைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “ஆயிஷா (ரலி) என்னிடம் இதை அறிவித்திருக்கின்றார்கள். எனவே, நான் கூறியதாக நீங்கள் இதை (தாராளமாக) அறிவிக்கலாம்” என்று கூறினார்.