அத்தியாயம்: 2, பாடம்: 17, ஹதீஸ் எண்: 388

و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ قَالَ ح و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَاللَّفْظُ لَهُ قَالَ قُلْتُ لِسُفْيَانَ بْنِ عُيَيْنَةَ سَمِعْتَ الزُّهْرِيَّ يَذْكُرُ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ عَنْ أَبِي أَيُّوبَ :‏

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَتَيْتُمْ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ وَلَا تَسْتَدْبِرُوهَا بِبَوْلٍ وَلَا غَائِطٍ وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا


قَالَ أَبُو أَيُّوبَ فَقَدِمْنَا الشَّامَ فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ قِبَلَ الْقِبْلَةِ فَنَنْحَرِفُ عَنْهَا وَنَسْتَغْفِرُ اللَّهَ قَالَ نَعَمْ

“நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மல, ஜலம் கழிக்கும்போது கிப்லாத் திசையை முன்-பின் நோக்கி அமர வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக் கொண்டோம்; அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்.

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் (ரலி)


குறிப்புகள் :

மதீனாவிலிருந்து கிப்லாத் திசை தெற்கில் அமைந்திருக்கும்.

“நான் ஸுஃப்யான் பின் உயைனா(ரஹ்) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸை வாசித்துக் காட்டி, இதை அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸுஹ்ரி (ரஹ்) அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு ஸுஃப்யான்(ரஹ்), ஆம் என்று பதிலளித்தார்கள் என இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 2, பாடம்: 17, ஹதீஸ் எண்: 387

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ

نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَمَسَّحَ بِعَظْمٍ أَوْ بِبَعْرٍ

(மல, ஜலம் கழித்தபின்) எலும்பாலோ, கெட்டிச் சாணத்தாலோ துடைத்துத் துப்புரவு செய்யப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 17, ஹதீஸ் எண்: 386

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ وَمَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ سَلْمَانَ قَالَ :‏

قَالَ لَنَا الْمُشْرِكُونَ إِنِّي أَرَى صَاحِبَكُمْ يُعَلِّمُكُمْ حَتَّى يُعَلِّمَكُمْ الْخِرَاءَةَ فَقَالَ أَجَلْ إِنَّهُ نَهَانَا أَنْ يَسْتَنْجِيَ أَحَدُنَا بِيَمِينِهِ أَوْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ وَنَهَى عَنْ الرَّوْثِ وَالْعِظَامِ وَقَالَ لَا يَسْتَنْجِي أَحَدُكُمْ بِدُونِ ثَلَاثَةِ أَحْجَارٍ

எங்களிடம் இணை வைப்பாளர் (சார்பாக ஒருவர்) “உங்கள் தோழர் (நபி ஸல்) உங்களுக்கு மல, ஜலம் கழிக்கும் முறையைக்கூட கற்றுத் தருவதாக நான் நினைக்கின்றேனே?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம்(உண்மை தான்); எங்களில் ஒருவர் வலக் கரத்தால் துப்புரவு செய்யக் கூடாதென்றும் (மல, ஜலம் கழிக்கும் போது) கிப்லாவை முன்னோக்கக் கூடாதென்றும் கெட்டிச் சாணம், எலும்புகள் ஆகியவற்றை(துப்புரவு செய்வதற்காக)ப் பயன்படுத்தக் கூடாதென்றும் அன்னார் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், ‘உங்களில் ஒருவர் மூன்றைவிடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாம்’ என்றும் கூறினார்கள்” என்றேன்.

அறிவிப்பாளர் : ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 17, ஹதீஸ் எண்: 385

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنْ الْأَعْمَشِ ح و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَاللَّفْظُ لَهُ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ عَنْ سَلْمَانَ قَالَ :‏

قِيلَ لَهُ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ قَالَ فَقَالَ أَجَلْ لَقَدْ نَهَانَا أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ

“மல, ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் தூதர் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கின்றாரா?” என்று ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது.

ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரலி), “ஆம்(உண்மை தான்); மல, ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மல, ஜலம் கழித்தபின்) வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும் மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும் கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸல்மான் அல்ஃபார்ஸீ (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 384

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرٌ مِنْ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الْأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الْإِبِطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ قَالَ زَكَرِيَّاءُ قَالَ مُصْعَبٌ وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ


زَادَ قُتَيْبَةُ قَالَ وَكِيعٌ انْتِقَاصُ الْمَاءِ يَعْنِي الِاسْتِنْجَاءَ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ أَبِيهِ عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ فِي هَذَا الْإِسْنَادِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ أَبُوهُ وَنَسِيتُ الْعَاشِرَةَ

“மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, இன உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல, ஜலம் கழித்தப் பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது ஆகிய பத்தும் இயற்கை மரபுவழியைச் சார்ந்தவை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) கூறச் செவியுற்ற ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்), “பத்தாவது என்ன என்பதை நான் மறந்து விட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று முஸ்அப் (ரஹ்) ஐயத்துடன் கூறினார்” எனக் குறிப்பிடுகின்றார்.

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘இன்த்திகாஸுல் மாஇ’ எனும் சொற்றொடருக்கு ‘(மல-ஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல்’ என்று பொருள்” எனக் கூடுதல் விளக்கம் இடம் பெற்றுள்ளது.

அபூ குரைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தப் பத்தாவது என்ன என்பதை மறந்து விட்டேன்” எனக் கூறியவர் தம் தந்தை அபூ ஸாயிதா (ரஹ்)தாம் என ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 383

حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ مَوْلَى الْحُرَقَةِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ

“மீசையைக் கத்தரியுங்கள்; தாடியை வளர விடுங்கள். தீவணங்கி(மஜூசி)களுக்கு மாறு செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 382

حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ حَدَّثَنَا نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى

“இணைவைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்; மீசையை நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 381

و حَدَّثَنَاه قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عُمَرَ :‏

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحْيَةِ

மீசையை நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் நபி (ஸல்) கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 380

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ح و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي جَمِيعًا عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ :‏

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى

“மீசையை நறுக்குங்கள்; தாடியை (வளர) விடுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 379

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ كِلَاهُمَا عَنْ جَعْفَرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

قَالَ أَنَسٌ وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبِطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَا نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ لَيْلَةً

மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, இன உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றின் உயரெல்லைக் காலவரையறையான நாற்பது இரவுகளுக்கு மேல் விட்டுவைக்கக் கூடாதென எங்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)