அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 338

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏جَامِعِ بْنِ شَدَّادٍ أَبِي صَخْرَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُمْرَانَ بْنَ أَبَانَ ‏ ‏قَالَ :‏ ‏

كُنْتُ أَضَعُ ‏ ‏لِعُثْمَانَ ‏ ‏طَهُورَهُ فَمَا أَتَى عَلَيْهِ يَوْمٌ إِلَّا وَهُوَ يُفِيضُ عَلَيْهِ ‏ ‏نُطْفَةً ‏ ‏وَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ انْصِرَافِنَا مِنْ صَلَاتِنَا هَذِهِ ‏ ‏قَالَ ‏ ‏مِسْعَرٌ ‏ ‏أُرَاهَا الْعَصْرَ ‏ ‏فَقَالَ مَا أَدْرِي أُحَدِّثُكُمْ بِشَيْءٍ أَوْ أَسْكُتُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَ خَيْرًا فَحَدِّثْنَا وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ فَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ‏ ‏مَا مِنْ مُسْلِمٍ يَتَطَهَّرُ فَيُتِمُّ الطُّهُورَ الَّذِي كَتَبَ اللَّهُ عَلَيْهِ فَيُصَلِّي هَذِهِ الصَّلَوَاتِ الْخَمْسَ إِلَّا كَانَتْ كَفَّارَاتٍ لِمَا بَيْنَهَا ‏

“உஸ்மான் (ரலி) உளூச் செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து வைப்பவனாக நான் இருந்தேன்” என்று ஹும்ரான் பின் அபான் (ரஹ்) கூறினார். தொடர்ந்து, “அவர்கள் தினமும் சிறிதளவு நீரிலாவது குளிக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் உஸ்மான் (ரலி) கூறினார்கள்:

“நாங்கள் (ஒரு நாள் அஸ்ருத்) தொழுகையை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று யோசிக்கின்றேன்’ என்று சொன்னார்கள். உடனே நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அது நன்மையாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள உளூவை முழுமையாகச் செய்து, ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக அன்னாரின் பணியாள் ஹும்ரான் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 337

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَنَسٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُثْمَانَ ‏تَوَضَّأَ ‏ ‏بِالْمَقَاعِدِ ‏ ‏فَقَالَ :‏

‏ ‏أَلَا ‏ ‏أُرِيكُمْ وُضُوءَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا ‏


‏وَزَادَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏وَعِنْدَهُ رِجَالٌ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

(மதீனா பள்ளிக்கருகிலுள்ள) ‘மகாஇத்’ எனுமிடத்தில் உஸ்மான் (ரலி) உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த உளூவின் முறையை உங்களுக்கு நான் காட்டட்டுமா?” என்று கூறிவிட்டு, மும்மூன்று முறை (ஒவ்வோர் உறுப்பையும் கழுவி) உளூச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


குறிப்பு :

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அப்போது உஸ்மான் (ரலி) அவர்களின் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர்” என்று (அபூஅனஸ் (ரஹ்) கூறியதாக) அதிகப்படியாக வந்துள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 336

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ وَهُوَ الدَّرَاوَرْدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏قَالَ ‏:‏

أَتَيْتُ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ إِنَّ نَاسًا يَتَحَدَّثُونَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَادِيثَ لَا أَدْرِي مَا هِيَ إِلَّا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ ‏ ‏مَنْ تَوَضَّأَ هَكَذَا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَكَانَتْ صَلَاتُهُ وَمَشْيُهُ إِلَى الْمَسْجِدِ نَافِلَةً ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ عَبْدَةَ ‏ ‏أَتَيْتُ ‏ ‏عُثْمَانَ ‏ ‏فَتَوَضَّأَ ‏

“நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் உளூச் செய்வதற்கான தண்ணீர் கொண்டு வந்தேன்” என்று . உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஹும்ரான் (ரஹ்) கூறிவிட்டு, தொடர்ந்து, “அவர்கள் உளூச் செய்த பின்னர், ’சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். ஆனால், அவற்றின் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இதோ) இப்போது நான் செய்த உளூவைப் போன்று உளூச் செய்ததை நான் பார்த்தேன். பிறகு, ‘யார் இவ்வாறு உளூச் செய்கின்றாரோ, அவரது முந்தைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். பிறகு அவர் தொழும் தொழுகையும் பள்ளிவாசலை நோக்கி அவர் நடப்பதும் அவருக்குக் கூடுதலா(ன வணக்கமா)க மாறிவிடும்’ என்று கூறினார்கள்” என்று அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக அன்னாரின் பணியாள் ஹும்ரான் (ரஹ்)


குறிப்பு :

இப்னு அப்தா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் உளூச் செய்தார்கள்” என்று ஹும்ரான் (ரஹ்) கூறுவதாகத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 335

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْوَلِيدِ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

كُنْتُ عِنْدَ ‏ ‏عُثْمَانَ ‏فَدَعَا بِطَهُورٍ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ امْرِئٍ مُسْلِمٍ تَحْضُرُهُ صَلَاةٌ مَكْتُوبَةٌ فَيُحْسِنُ وُضُوءَهَا وَخُشُوعَهَا وَرُكُوعَهَا إِلَّا كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنْ الذُّنُوبِ مَا لَمْ يُؤْتِ كَبِيرَةً وَذَلِكَ الدَّهْرَ كُلَّهُ ‏

அம்ரு பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) (ஒருமுறை) உஸ்மான் (ரலி) அவர்களோடு இருந்தபோது அவர்கள் (உளூச் செய்வதற்காக ஒரு பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு, “ஒரு முஸ்லிம், கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகை(யின் நேரம்) வந்ததும் அதற்காக அழகிய முறையில் உளூச் செய்து உள்ளச்சத்துடன் முறையோடு தொழுவாராயின், அந்தத் தொழுகை அதற்கு முந்தைய (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரம் ஆகாமலிருப்பதில்லை; அவர் பெரும் பாவம் ஏதும் செய்தால் தவிர. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக அம்ரு பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 334

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَلَكِنْ ‏ ‏عُرْوَةُ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏فَلَمَّا تَوَضَّأَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏قَالَ :‏ ‏

وَاللَّهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا وَاللَّهِ لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمُوهُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَتَوَضَّأُ رَجُلٌ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ ‏ ‏يُصَلِّي الصَّلَاةَ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الَّتِي تَلِيهَا ‏


قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏الْآيَةُ ‏ ‏إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنْ الْبَيِّنَاتِ وَالْهُدَى ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏اللَّاعِنُونَ ‏

உஸ்மான் (ரலி) உளூச் செய்தபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்:

“ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து, பின்னர் தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படாமலிருப்பதில்லை”.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


குறிப்பு :

உஸ்மான் (ரலி) இந்த ஹதீஸில் குறிப்பிட்டது, “தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும் நாம் அருளியதோடு, அவற்றை வேதத்தில் நாம் விளக்கிய பின்னரும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கின்றான்; அவர்களை சபிப்ப(தற்கு உரிய)வர்களும் சபிக்கின்றார்கள்” என்ற (2:159ஆவது) வசனம்தான் என்று அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் கூறுகின்றார்.

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 333

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏قَالَ ‏:‏ ‏

سَمِعْتُ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏وَهُوَ بِفِنَاءِ الْمَسْجِدِ فَجَاءَهُ الْمُؤَذِّنُ عِنْدَ الْعَصْرِ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ وَاللَّهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمْ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَتَوَضَّأُ رَجُلٌ مُسْلِمٌ فَيُحْسِنُ الْوُضُوءَ فَيُصَلِّي صَلَاةً إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الَّتِي تَلِيهَا ‏


‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ ‏ ‏يُصَلِّي الْمَكْتُوبَةَ ‏

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) பள்ளிவாசலின் முற்றத்தில் அமர்ந்திருந்த ஓர் அஸ்ருத் தொழுகை நேரத்தில், அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். அவரிடம் உளூச் செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, உளூச் செய்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப் போகிறேன். ஓர் இறைவசனம் மட்டும் இல்லையெனில் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

“ஒருவர் அழகிய முறையில் (நிறைவாக) உளூச் செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக அன்னாரின் பணியாள் ஹும்ரான் (ரஹ்)


குறிப்பு :

அபூஉஸாமா (ரஹ்) வழி அறிவிப்பில், “அழகிய முறையில் உளூச் செய்தபின், கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் …” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 03, ஹதீஸ் எண்: 332

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏عُثْمَانَ ‏:‏ ‏

دَعَا بِإِنَاءٍ فَأَفْرَغَ عَلَى كَفَّيْهِ ثَلَاثَ مِرَارٍ فَغَسَلَهُمَا ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْإِنَاءِ فَمَضْمَضَ ‏ ‏وَاسْتَنْثَرَ ‏ ‏ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏

உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (ஆரம்பமாகத்) தம்முடைய முன் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்தினுள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். மேலும், இரு (கைகளையும்) முழங்கை மூட்டுவரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக் கையால் தடவி) மஸஹு செய்தார்கள். பிறகு தம்மிரு கால்களையும் மூன்று முறை கழுவினார்கள்.

பின்னர், “யார் எனது இந்த உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவர் செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக அன்னாரின் பணியாள் ஹும்ரான் (ரஹ்)

அத்தியாயம்: 2, பாடம்: 03, ஹதீஸ் எண்: 331

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏:‏ ‏

دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ مَضْمَضَ ‏ ‏وَاسْتَنْثَرَ ‏ ‏ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى ‏ ‏الْمِرْفَقِ ‏ ‏ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ مَسَحَ رَأْسَهُ ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ غَسَلَ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَكَانَ عُلَمَاؤُنَا يَقُولُونَ هَذَا الْوُضُوءُ ‏ ‏أَسْبَغُ ‏ ‏مَا يَتَوَضَّأُ بِهِ أَحَدٌ لِلصَّلَاةِ ‏

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) உளூச் செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி உளூச் செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன்கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்து, தமது இடக்கரத்தையும் அதைப் போன்றே (மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக்கையால் தடவி) மஸஹு செய்தார்கள். பிறகு தமது வலக்காலை கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக்காலையும் அதைப் போன்றே (மூன்று முறை) கழுவினார்கள்.

பின்னர், “நான் செய்த இந்த உளூவைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உளூச் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன். மேலும், ‘யார் நான் செய்த இந்த உளூவைப் போன்று உளூச் செய்து, பின்னர் வேறு எந்த(க்கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


குறிப்பு :

“இவ்வாறு உளூச் செய்வது தான் தொழுகைக்காக ஒருவர் உளூச் செய்யும் முறைகளிலேயே நிறைவானதாகும்” என்று தம் சமகால அறிஞர்கள் கூறியதாக அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 2, பாடம்: 02, ஹதீஸ் எண்: 330

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ بْنُ هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرُ بْنُ رَاشِدٍ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏أَخِي ‏ ‏وَهْبِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏:‏ ‏

عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تُقْبَلُ صَلَاةُ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ ‏

“உங்களில் ஒருவருக்குச் சிறு துடக்கு (காற்றுப் பிரிதல்) ஏற்பட்டுவிட்டால், அவர் உளூச் செய்து கொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறித்த ஹதீஸ்களுள் மேற்காண்பதும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறினார்

அத்தியாயம்: 2, பாடம்: 02, ஹதீஸ் எண்: 329

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏قَالُوا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ ‏:‏ ‏

دَخَلَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَلَى ‏ ‏ابْنِ عَامِرٍ ‏ ‏يَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَقَالَ أَلَا تَدْعُو اللَّهَ لِي يَا ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ ‏ ‏غُلُولٍ ‏‏وَكُنْتَ عَلَى ‏ ‏الْبَصْرَةِ


 ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْرَائِيلَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكِ بْنِ حَرْبٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏

நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) சென்றபோது இப்னு ஆமிர் (ரஹ்), “இப்னு உமர் அவர்களே! எனக்காக நீங்கள் அல்லாஹ்விடம் (தொழுது) பிரார்த்திக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி), “உளூ இல்லாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்தத் தான-தர்மமும் ஏற்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறியதை நான் கேட்டிருக்கின்றேன். அப்போது நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)