அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 341

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَيُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏الْحُكَيْمَ بْنَ عَبْدِ اللَّهِ الْقُرَشِيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ جُبَيْرٍ ‏ ‏وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي سَلَمَةَ ‏ ‏حَدَّثَاهُ أَنَّ ‏ ‏مُعَاذَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَهُمَا عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏ ‏عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏
‏قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ تَوَضَّأَ لِلصَّلَاةِ ‏ ‏فَأَسْبَغَ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ مَشَى إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ فَصَلَّاهَا مَعَ النَّاسِ أَوْ مَعَ الْجَمَاعَةِ أَوْ فِي الْمَسْجِدِ غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَهُ ‏

“தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன்/கூட்டுத் தொழுகையில்/பள்ளிவாசலில் தொழுபவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூற நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக ஹும்ரான் (ரஹ்).

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 340

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ وَأَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏قَالَ ‏
‏تَوَضَّأَ ‏ ‏عُثْمَانُ بْنُ عَفَّانَ ‏ ‏يَوْمًا وُضُوءًا حَسَنًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَالَ ‏ ‏مَنْ تَوَضَّأَ هَكَذَا ثُمَّ خَرَجَ إِلَى الْمَسْجِدِ لَا ‏ ‏يَنْهَزُهُ ‏ ‏إِلَّا الصَّلَاةُ غُفِرَ لَهُ مَا خَلَا مِنْ ذَنْبِهِ ‏

ஒரு நாள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்திருக்கிறேன். மேலும், ‘இவ்வாறு அங்கத் தூய்மை செய்து விட்டுத் தொழுவதற்கென்றே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்பவரது (சிறு) முன்பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக ஹும்ரான் (ரஹ்).

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 339

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏جَامِعِ بْنِ شَدَّادٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُمْرَانَ بْنَ أَبَانَ ‏ ‏يُحَدِّثُ ‏ ‏أَبَا بُرْدَةَ ‏ ‏فِي هَذَا الْمَسْجِدِ فِي إِمَارَةِ ‏ ‏بِشْرٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَتَمَّ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ تَعَالَى فَالصَّلَوَاتُ الْمَكْتُوبَاتُ كَفَّارَاتٌ لِمَا بَيْنَهُنَّ ‏
‏هَذَا حَدِيثُ ‏ ‏ابْنِ مُعَاذٍ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏غُنْدَرٍ ‏ ‏فِي إِمَارَةِ ‏ ‏بِشْرٍ ‏ ‏وَلَا ذِكْرُ الْمَكْتُوبَاتِ ‏

“அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப முழுமையாக அங்கத் தூய்மை செய்பவர் தொழுகின்ற கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).

குறிப்பு:

“பிஷ்ர் பின் மர்வான் பின் அல்ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் இந்த (பஸ்ரா) பள்ளிவாசலில் வைத்து அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம் (மேற்கண்டவாறு) அறிவிப்பதை நான் செய்வியுற்றேன்” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஜாமிஉ பின் ஷத்தாத் (ரஹ்) குறிப்பிடுகிறார். உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பிலும் இவ்வாறே குறிப்பிடப் படுகிறது. ஆனால், ஃகுந்தர் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில் “பிஷ்ர் பின் மர்வான் ஆட்சிக்காலத்தில்” என்பதும் “கடமையாக்கப்பட்ட” என்ற சொல்லும் குறுப்பிடப் படவில்லை.

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 338

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏جَامِعِ بْنِ شَدَّادٍ أَبِي صَخْرَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏حُمْرَانَ بْنَ أَبَانَ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ أَضَعُ ‏ ‏لِعُثْمَانَ ‏ ‏طَهُورَهُ فَمَا أَتَى عَلَيْهِ يَوْمٌ إِلَّا وَهُوَ يُفِيضُ عَلَيْهِ ‏ ‏نُطْفَةً ‏ ‏وَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عِنْدَ انْصِرَافِنَا مِنْ صَلَاتِنَا هَذِهِ ‏ ‏قَالَ ‏ ‏مِسْعَرٌ ‏ ‏أُرَاهَا الْعَصْرَ ‏ ‏فَقَالَ مَا أَدْرِي أُحَدِّثُكُمْ بِشَيْءٍ أَوْ أَسْكُتُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَ خَيْرًا فَحَدِّثْنَا وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ فَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ‏ ‏مَا مِنْ مُسْلِمٍ يَتَطَهَّرُ فَيُتِمُّ الطُّهُورَ الَّذِي كَتَبَ اللَّهُ عَلَيْهِ فَيُصَلِّي هَذِهِ الصَّلَوَاتِ الْخَمْسَ إِلَّا كَانَتْ كَفَّارَاتٍ لِمَا بَيْنَهَا ‏

“உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து வைப்பவனாக நான் இருந்தேன்” என்று ஹும்ரான் பின் அபான் (ரஹ்) கூறினார். தொடர்ந்து, “அவர்கள் தினமும் சிறிதளவு நீரிலாவது குளிக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் உஸ்மான் (ரலி) கூறினார்கள்:

“நாங்கள் (ஒரு நாள்) இந்தத் தொழுகையை – அதாவது அஸ்ருத் தொழுகையை – முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லை’ என்று சொன்னார்கள். உடனே நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அது நன்மையாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள அங்கத் தூய்மையை (உளூவை) முழுமையாகச் செய்து, ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 337

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَنَسٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُثْمَانَ ‏
‏تَوَضَّأَ ‏ ‏بِالْمَقَاعِدِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَلَا ‏ ‏أُرِيكُمْ وُضُوءَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا ‏
‏وَزَادَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏وَعِنْدَهُ رِجَالٌ مِنْ ‏ ‏أَصْحَابِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

(மதீனா பள்ளிவாசலுக்கருகில் உள்ள) ‘மகாஇத்’ எனுமிடத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை முறையை உங்களுக்கு நான் காட்டட்டுமா?” என்று கூறிவிட்டு, மும்மூன்று முறை (ஒவ்வோர் உறுப்பையும் கழுவி) அங்கத் தூய்மை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

குறிப்பு:

இதே ஹதீஸ் குதைபா(ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அப்போது உஸ்மான் (ரலி) அவர்களின் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர்” என்று (அபூஅனஸ் (ரஹ்) கூறியதாக) அதிகப்படியாக வந்துள்ளது.

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 336

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ وَهُوَ الدَّرَاوَرْدِيُّ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏قَالَ ‏
‏أَتَيْتُ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ إِنَّ نَاسًا يَتَحَدَّثُونَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَادِيثَ لَا أَدْرِي مَا هِيَ إِلَّا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ ‏ ‏مَنْ تَوَضَّأَ هَكَذَا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَكَانَتْ صَلَاتُهُ وَمَشْيُهُ إِلَى الْمَسْجِدِ نَافِلَةً ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ عَبْدَةَ ‏ ‏أَتَيْتُ ‏ ‏عُثْمَانَ ‏ ‏فَتَوَضَّأَ ‏

“நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கொண்டு வந்தேன்” என்று . உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஹும்ரான் (ரஹ்) கூறிவிட்டு, தொடர்ந்து, “அவர்கள் அங்கத் தூய்மை செய்த பின்னர், “சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். ஆனால், அவற்றின் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதோ) இப்போது நான் செய்த அங்கத் தூய்மை போன்று அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு, ‘யார் இவ்வாறு அங்கத் தூய்மை செய்கின்றாரோ, அவரது முந்தைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். பிறகு அவர் தொழும் தொழுகையும் பள்ளிவாசலை நோக்கி அவர் நடப்பதும் அவருக்குக் கூடுதலா(ன வணக்கமா)க மாறிவிடும்’ என்று கூறினார்கள்” என்று அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

குறிப்பு:

இந்த ஹதீஸ், இப்னு அப்தா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள்” என்று ஹும்ரான் (ரஹ்) கூறுவதாகத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 335

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْوَلِيدِ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ كُنْتُ عِنْدَ ‏ ‏عُثْمَانَ ‏
‏فَدَعَا بِطَهُورٍ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ امْرِئٍ مُسْلِمٍ تَحْضُرُهُ صَلَاةٌ مَكْتُوبَةٌ فَيُحْسِنُ وُضُوءَهَا وَخُشُوعَهَا وَرُكُوعَهَا إِلَّا كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنْ الذُّنُوبِ مَا لَمْ يُؤْتِ كَبِيرَةً وَذَلِكَ الدَّهْرَ كُلَّهُ ‏

அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் (ஒருமுறை) உஸ்மான் (ரலி) அவர்களோடு இருந்தபோது அவர்கள் (அங்கத் தூய்மை செய்வதற்காக ஒரு பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு, “ஒரு முஸ்லிமான மனிதர் கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகை(யின் நேரம்) வந்ததும் அதற்காக அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து உள்ளச்சத்துடன் முறையோடு தொழுவாராயின், அந்தத் தொழுகை அதற்கு முந்தைய (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரம் ஆகாமலிருப்பதில்லை; அவர் பெரும் பாவம் ஏதும் செய்தால் தவிர. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 334

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَلَكِنْ ‏ ‏عُرْوَةُ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏فَلَمَّا تَوَضَّأَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏قَالَ ‏
‏وَاللَّهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا وَاللَّهِ لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمُوهُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَتَوَضَّأُ رَجُلٌ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ ‏ ‏يُصَلِّي الصَّلَاةَ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الَّتِي تَلِيهَا ‏
‏قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏الْآيَةُ ‏ ‏إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنْ الْبَيِّنَاتِ وَالْهُدَى ‏ ‏إِلَى قَوْلِهِ ‏ ‏اللَّاعِنُونَ ‏

உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, பின்னர் தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படாமலிருப்பதில்லை”.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

குறிப்பு:

உஸ்மான் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிட்டது, “தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும் நாம் அருளியதோடு, அவற்றை வேதத்தில் நாம் விளக்கிய பின்னரும் அவற்றை மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; அவர்களை சபிப்ப(தற்கு உரிய)வர்களும் சபிக்கிறார்கள்” என்ற (2:159ஆவது) வசனம்தான் என்று அறிவிப்பாளர் உர்வா பின் அஸ்ஸுபைர் கூறுகின்றார்.

அத்தியாயம்: 2, பாடம்: 04, ஹதீஸ் எண்: 333

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِقُتَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏حُمْرَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏عُثْمَانَ ‏ ‏قَالَ ‏
‏سَمِعْتُ ‏ ‏عُثْمَانَ بْنَ عَفَّانَ ‏ ‏وَهُوَ بِفِنَاءِ الْمَسْجِدِ فَجَاءَهُ الْمُؤَذِّنُ عِنْدَ الْعَصْرِ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ وَاللَّهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لَوْلَا آيَةٌ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمْ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَتَوَضَّأُ رَجُلٌ مُسْلِمٌ فَيُحْسِنُ الْوُضُوءَ فَيُصَلِّي صَلَاةً إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الَّتِي تَلِيهَا ‏
‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ ‏ ‏يُصَلِّي الْمَكْتُوبَةَ ‏

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) பள்ளிவாசலின் முற்றத்தில் அமர்ந்திருந்த ஓர் அஸ்ருத் தொழுகை நேரத்தில், அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். அவரிடம் அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப் போகிறேன். ஓர் இறைவசனம் மட்டும் இல்லையெனில் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

“ஒருவர் அழகிய முறையில் (நிறைவாக) அங்கத் தூய்மை செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

குறிப்பு:

இந்த ஹதீஸ், அபூஉஸாமா (ரஹ்) வழி அறிவிப்பில், “அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்தபின், கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின்” என இடம் பெற்றுள்ளது