அத்தியாயம்: 2, பாடம்: 01, ஹதீஸ் எண்: 328

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ بْنُ هِلَالٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ ‏ ‏قَالَ ‏:‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الطُّهُورُ ‏ ‏شَطْرُ ‏ ‏الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ ‏ ‏أَوْ تَمْلَأُ ‏ ‏مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالصَّلَاةُ نُورٌ وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ كُلُّ النَّاسِ ‏ ‏يَغْدُو ‏ ‏فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ ‏ ‏مُوبِقُهَا ‏

“தூய்மை என்பது இறைநம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்'(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று துதிப்)பது, (நன்மை-தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். ‘சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி'(அல்லாஹ் தூயவன்; எல்லாப்புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள்-பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக் கூடிய (அளவிற்கு நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை என்பது (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் என்பது சான்றாகும். பொறுமை என்பது வெளிச்சமாகும். குர்ஆன் என்பது உனக்குத் தவிர்க்க முடியாத (ஏவல்) தேவையாகும்; அல்லது எதிரான (விலக்கல்) சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மைத் தாமே விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மையே அழித்துக் கொள்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல்-அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 96, ஹதீஸ் எண்: 327

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْعَبْسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ :‏ ‏‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏يَا ‏ ‏آدَمُ ‏ ‏فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ قَالَ يَقُولُ أَخْرِجْ ‏ ‏بَعْثَ ‏ ‏النَّارِ قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ قَالَ فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ [‏وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ‏]

‏قَالَ فَاشْتَدَّ عَلَيْهِمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ فَقَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْ ‏ ‏يَأْجُوجَ ‏ ‏وَمَأْجُوجَ ‏ ‏أَلْفًا وَمِنْكُمْ رَجُلٌ قَالَ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ‏ ‏شَطْرَ ‏ ‏أَهْلِ الْجَنَّةِ إِنَّ مَثَلَكُمْ فِي الْأُمَمِ كَمَثَلِ الشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ ‏ ‏كَالرَّقْمَةِ ‏ ‏فِي ذِرَاعِ الْحِمَارِ ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُمَا ‏ ‏قَالَا ‏ ‏مَا أَنْتُمْ يَوْمَئِذٍ فِي النَّاسِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي الثَّوْرِ الْأَبْيَضِ وَلَمْ يَذْكُرَا أَوْ ‏ ‏كَالرَّقْمَةِ ‏ ‏فِي ذِرَاعِ الْحِمَارِ

“வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (மறுமை நாளில்), ‘ஆதமே!’ என்றழைப்பான். அதற்கு ஆதம் (அலை), ‘(இறைவா, கட்டளையிடு!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்’ என்று கூறுவார்கள். அப்போது இறைவன், ‘நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களைத் தனியாகப் பிரித்தெடுங்கள்’ என்று கட்டளையிடுவான். அதற்கு அவர்கள், ‘எத்தனை நரகவாசிகளை?’ என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், ‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது பேரை’ என்று பதிலளிப்பான். சிறுவனும் நரைத்து (கிழவனாகி) விடுகின்ற(தைப் போன்ற) நேரமது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, “கருவுற்ற ஒவ்வொரு பெண்ணும் தன் கருவை (அரைகுறையாகப்) பிரசவித்துவிடும் நேரமது. மக்கள் (மதுவால்) போதை கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் (அங்குக்) காண்பீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்” என்று (22:2 இறைவசனத்தையும்) சொன்னார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியது, மக்களுக்குக் கடுமையானதாகத் தோன்றியது. எனவே மக்கள், “(எஞ்சுகின்ற) அந்த ஒருவர் எங்களுள் யார்?’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நற்செய்தி பெறுங்கள்! யஃஜூஜ்-மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (தனியாகப் பிரிக்கப்படுவோரில்) இருப்பார்” என்று கூறிவிட்டுப் பின்னர், “என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மகிழ்ச்சியடைந்து) அல்லாஹ்வைப் புகழ்ந்தோம்; “அல்லாஹ் மிகப் பெரியவன்” (அல்லாஹு அக்பர்) என்று முழங்கினோம். பின்னர், “என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன்” என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று முழக்கமிட்டோம். பின்னர், “என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன். மற்றச் சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் (எண்ணிக்கையின்) நிலை, கறுப்புக்காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றது – அல்லது – கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று (தனித்துவமாய் இருக்கும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “அன்றைய தினம் மனிதர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக்காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்று – அல்லது – வெள்ளைக்காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவீர்கள்)” என்ற உவமையுடன் இடம்பெற்றுள்ளது. “கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று” என்ற உவமை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 95, ஹதீஸ் எண்: 326

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكٌ وَهُوَ ابْنُ مِغْوَلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏ ‏

‏خَطَبَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَسْنَدَ ظَهْرَهُ إِلَى قُبَّةِ أَدَمٍ فَقَالَ ‏ ‏أَلَا لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ اشْهَدْ أَتُحِبُّونَ أَنَّكُمْ رُبُعُ أَهْلِ الْجَنَّةِ فَقُلْنَا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَتُحِبُّونَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ مَا أَنْتُمْ فِي سِوَاكُمْ مِنْ الْأُمَمِ إِلَّا كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي الثَّوْرِ الْأَبْيَضِ أَوْ كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي الثَّوْرِ الْأَسْوَدِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது முதுகை, தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி எங்களிடையே (ஒருமுறை) உரையாற்றினார்கள். அப்போது, “அறிந்து கொள்ளுங்கள்! சொர்க்கத்தில் முஸ்லிமான ஆன்மாவைத் தவிர வேறெவரும் நுழையமுடியாது” என்று அறிவித்துவிட்டு, “இறைவா! நான் (சொல்ல வேண்டிய செய்தியைச்) சொல்லிவிட்டேனா? இறைவா (இதற்கு) நீயே சாட்சி” என்று கூறினார்கள். பின்னர், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். அடுத்து, “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். “சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கின்றேன். மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் வெள்ளைக் காளைமாட்டிலிலுள்ள கறுப்பு முடியைப் போன்று – அல்லது – கறுப்புக்காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவீர்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 95, ஹதீஸ் எண்: 325

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي قُبَّةٍ نَحْوًا مِنْ أَرْبَعِينَ رَجُلًا فَقَالَ ‏ ‏أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ قُلْنَا نَعَمْ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ فَقُلْنَا نَعَمْ فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَاكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ

நாங்கள் சுமார் நாற்பது பேர் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தில் இருந்தோம். அப்போது அவர்கள், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்” என்று சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். அதற்கும் நாங்கள் “ஆம்” என்றோம். “என் உயிர் கையிலுள்ளவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கின்றேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிம் ஆன்மாவைத் தவிர வேறெவரும் நுழையமுடியாது. இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது நீங்கள் கறுப்புக்காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று – அல்லது – சிவப்புக்காளை மாட்டின் தோலிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவீர்கள்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 95, ஹதீஸ் எண்: 324

حَدَّثَنَا ‏ ‏هَنَّادُ بْنُ السَّرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ مَيْمُونٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَا تَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَكَبَّرْنَا ثُمَّ قَالَ أَمَا تَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَكَبَّرْنَا ثُمَّ قَالَ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ وَسَأُخْبِرُكُمْ عَنْ ذَلِكَ مَا الْمُسْلِمُونَ فِي الْكُفَّارِ إِلَّا كَشَعْرَةٍ بَيْضَاءَ فِي ثَوْرٍ أَسْوَدَ أَوْ كَشَعْرَةٍ سَوْدَاءَ فِي ثَوْرٍ أَبْيَضَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மனநிறைவா?” என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள், “அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, “சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (எனது சமுதாயத்தவர்) இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கின்றேன். அதைப் பற்றி (ஓர் உவமை) உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்: இறைமறுப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கறுப்புக்காளை மாட்டி(ன் உடலி)லுள்ள வெள்ளை முடியைப் போன்று – அல்லது – வெள்ளைக்காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்று (தனித்துவமாய் காணப்படுவர்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 94, ஹதீஸ் எண்: 323

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ كُنْتُ عِنْدَ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُّكُمْ رَأَى الْكَوْكَبَ الَّذِي ‏ ‏انْقَضَّ ‏ ‏الْبَارِحَةَ قُلْتُ أَنَا ثُمَّ قُلْتُ أَمَا إِنِّي لَمْ أَكُنْ فِي صَلَاةٍ وَلَكِنِّي لُدِغْتُ قَالَ فَمَاذَا صَنَعْتَ قُلْتُ اسْتَرْقَيْتُ قَالَ فَمَا حَمَلَكَ عَلَى ذَلِكَ قُلْتُ حَدِيثٌ ‏ ‏حَدَّثَنَاهُ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏فَقَالَ وَمَا حَدَّثَكُمْ ‏ ‏الشَّعْبِيُّ ‏ ‏قُلْتُ حَدَّثَنَا ‏ ‏عَنْ ‏ ‏بُرَيْدَةَ بْنِ حُصَيْبٍ الْأَسْلَمِيِّ ‏‏أَنَّهُ قَالَ لَا رُقْيَةَ إِلَّا مِنْ ‏ ‏عَيْنٍ ‏ ‏أَوْ ‏ ‏حُمَةٍ ‏ ‏فَقَالَ قَدْ أَحْسَنَ مَنْ انْتَهَى إِلَى مَا سَمِعَ وَلَكِنْ حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏:‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَرَأَيْتُ النَّبِيَّ وَمَعَهُ ‏ ‏الرُّهَيْطُ ‏ ‏وَالنَّبِيَّ وَمَعَهُ الرَّجُلُ وَالرَّجُلَانِ وَالنَّبِيَّ لَيْسَ مَعَهُ أَحَدٌ إِذْ رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ فَظَنَنْتُ أَنَّهُمْ أُمَّتِي فَقِيلَ لِي هَذَا ‏ ‏مُوسَى ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَوْمُهُ وَلَكِنْ انْظُرْ إِلَى الْأُفُقِ فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ فَقِيلَ لِي انْظُرْ إِلَى الْأُفُقِ الْآخَرِ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ فَقِيلَ لِي هَذِهِ أُمَّتُكَ وَمَعَهُمْ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ ثُمَّ نَهَضَ فَدَخَلَ مَنْزِلَهُ ‏ ‏فَخَاضَ ‏ ‏النَّاسُ فِي أُولَئِكَ الَّذِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ فَقَالَ بَعْضُهُمْ فَلَعَلَّهُمْ الَّذِينَ صَحِبُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ بَعْضُهُمْ فَلَعَلَّهُمْ الَّذِينَ وُلِدُوا فِي الْإِسْلَامِ وَلَمْ يُشْرِكُوا بِاللَّهِ وَذَكَرُوا أَشْيَاءَ فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَا الَّذِي ‏ ‏تَخُوضُونَ ‏ ‏فِيهِ فَأَخْبَرُوهُ فَقَالَ هُمْ الَّذِينَ لَا يَرْقُونَ وَلَا ‏ ‏يَسْتَرْقُونَ ‏ ‏وَلَا ‏ ‏يَتَطَيَّرُونَ ‏ ‏وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ ‏ ‏عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ ‏ ‏فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ أَنْتَ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ آخَرُ فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ سَبَقَكَ بِهَا ‏ ‏عُكَّاشَةُ ‏


‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏وَلَمْ يَذْكُرْ أَوَّلَ حَدِيثِهِ

“எனக்குப் பல சமுதாயத்தவர் (எனது விண்ணேற்றத்தின்போது) எடுத்துக் காட்டப்பட்டனர். அங்கு, (தம்மைப் பின்பற்றிய பத்துக்குள் அடங்கும்) ஒரு சிறுகுழுவினரோடு ஓர் இறைத்தூதரையும் ஓரிருவரோடு ஓர் இறைத்தூதரையும் நான் கண்டேன். ஒருவர்கூட இல்லாத (தனியாளான) இறைத்தூதர் ஒருவரும் அங்கிருந்தார். பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தவர் என்று நான் எண்ணினேன். ஆனால், “இது (இறைத்தூதர்) மூஸாவும் அவருடைய சமுதாயமும் தான்; அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. மேலும், “மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்” என்றும் என்னிடம் கூறப்பட்டது; பார்த்தேன். அங்கு மாபெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது, “இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களுள் அடங்குவர்” என்று எனக்குச் சொல்லப்பட்டது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, தம் இல்லத்துக்குள் சென்று விட்டார்கள்.

எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யாவர் என்பது தொடர்பாக மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்” என்று கூறினர். வேறு சிலர், “இஸ்லாத்தில் பிறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காதவர்களாக இருக்கலாம்” என்றும் இன்னும் பலவற்றையும் கூறிக்கொண்டிருந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கு வந்து, “எதைப் பற்றி நீங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்), “அவர்கள் யாரெனில், யாருக்கும் மந்திரிக்க மாட்டார்கள்; யாரிடத்தும் மந்திரித்துக் கொள்ள மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; முற்றிலும் தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) எழுந்து, “அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “அவர்களுள் நீரும் ஒருவர்தாம்” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) கூறியதாவது:

ஒருநாள் நான் ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களோடு இருந்தபோது அவர்கள், “இன்றிரவு எரிநட்சத்திரம் விழுந்ததைக் கண்டவர் உங்களில் யார்?” என்று கேட்டார்கள். “நான் (கண்டேன்)” என்று பதிலளித்தேன். பிறகு, “அப்போது நான் (இரவுத்) தொழுகையில் இல்லை. மாறாக, என்னை விஷப்பூச்சித் தீண்டி விட்டது (அதனால் விழித்திருந்தேன்)” என்று கூறினேன். “(விஷக்கடிக்காக) நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று ஸயீத் (ரஹ்) கேட்டார்கள். நான், “ஓதிப் பார்த்துக் கொண்டேன்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “ஏன் அவ்வாறு செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) எமக்கு அறிவித்த நபிமொழிதான் (அதற்குக் காரணம்)” என்று கூறினேன். அவர்கள், “ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) உங்களுக்கு என்ன அறிவித்தார்கள்?” என்று கேட்க, நான், “புரைதா பின் ஹுஸைப் அல் அஸ்லமீ (ரலி) அவர்களிடமிருந்து ‘கண்ணேறு அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (குணம்) இல்லை’ என்று ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்” என்று பதிலளித்தேன். அதற்கு ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “யார் தாம் செவியுற்றபடி செயல்பட்டாரோ அவர் நன்மையே செய்தார். ஆயினும், இப்னு அப்பாஸ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு (மேற்கண்டவாறு) அறிவித்தார்கள் என்றார்கள்.

முஹம்மதிப்னு ஃபுளைல் (ரஹ்) வழி அறிவிப்பு, “எனக்குப் பல சமுதாயத்தவர் எடுத்துக் காட்டப்பட்டனர்” எனத் தொடங்கி, “உக்காஷா உம்மை முந்தி விட்டார்” என்று முடிவடைந்து விடுகிறது.

அத்தியாயம்: 1, பாடம்: 94, ஹதீஸ் எண்: 322

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا ‏ ‏أَوْ سَبْعُ مِائَةِ أَلْفٍ لَا يَدْرِي ‏ ‏أَبُو حَازِمٍ ‏ ‏أَيَّهُمَا قَالَ ‏ ‏مُتَمَاسِكُونَ آخِذٌ بَعْضُهُمْ بَعْضًا لَا يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ وُجُوهُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ

“நிச்சயமாக என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம்/ஏழுலட்சம் பேர் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் இறுதியானவர் நுழையாதவரை முதலாமவர் நுழையமாட்டார் (அனைவரும் ஒரே நேரத்தில் நுழைவர்). மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவின் முழுநிலவு வடிவிலிருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)


குறிப்புகள் :

விசாரணையின்றி சொர்க்கம் புகுவோர் எழுபதாயிரமா ஏழுஇலட்சமா என்பதில் அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு உறுதியில்லை.

ஏழு, எழுபது, ஏழாயிரம், ஏழு இலட்சம் ஆகிய எண்கள் அரபு மொழியில், “பெருவாரியான/அதிக எண்ணிக்கையிலான” என்பதன் இலக்கியக் குறியீடுகளாகும்.

அத்தியாயம்: 1, பாடம்: 94, ஹதீஸ் எண்: 321

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاجِبُ بْنُ عُمَرَ أَبُو خُشَيْنَةَ الثَّقَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَكَمُ بْنُ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ :‏ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هُمْ الَّذِينَ لَا ‏ ‏يَسْتَرْقُونَ ‏ ‏وَلَا ‏ ‏يَتَطَيَّرُونَ ‏ ‏وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று கூறினார்கள். “அவர்கள் யாவர், அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் எத்தகையவர்கள் எனில், மந்திரித்துப் பார்க்க மாட்டார்கள்; பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடு போட்டுக் கொள்ளமாட்டார்கள்; தங்கள் இறைவனை முழு நம்பிக்கையுடன் சார்ந்திருப்பர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 94, ஹதீஸ் எண்: 320

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ خَلَفٍ الْبَاهِلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ حَسَّانَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ يَعْنِي ابْنَ سِيرِينَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عِمْرَانُ ‏ ‏قَالَ ‏:‏‏

‏قَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا وَمَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هُمْ الَّذِينَ لَا يَكْتَوُونَ وَلَا ‏ ‏يَسْتَرْقُونَ ‏ ‏وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ فَقَامَ ‏ ‏عُكَّاشَةُ ‏ ‏فَقَالَ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ أَنْتَ مِنْهُمْ قَالَ فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ سَبَقَكَ بِهَا ‏ ‏عُكَّاشَةُ ‏

நபி (ஸல்), “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று கூறினார்கள். “அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று மக்கள் கேட்டனர். நபி (ஸல்), “அவர்கள் (நோய்க்காக) சூடு போட்டுக் கொள்ளமாட்டார்கள்; மந்திரித்துக் கொள்ளமாட்டார்கள்; தங்கள் இறைவனை முழு நம்பிக்கையுடன் சார்ந்திருப்பர்” என்று கூறினார்கள்.

அப்போது உக்காஷா (ரலி) எழுந்து, “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்), “அவர்களில் நீரும் ஒருவர்தாம்” என்று சொன்னார்கள். இன்னொருவர் எழுந்து, “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் நபியே!” என்று கூறினார். நபி (ஸல்), “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 94, ஹதீஸ் எண்: 319

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏حَيْوَةُ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا ‏ ‏زُمْرَةٌ ‏ ‏وَاحِدَةٌ مِنْهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ

“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் ஒரேயொரு கூட்டத்தினர் சந்திரனைப் போன்று பிரகாசிப்பர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)