அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 128

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْحَمِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قَالَ: ‏

ذَكَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْكَبَائِرَ أَوْ سُئِلَ عَنْ الْكَبَائِرِ فَقَالَ ‏ ‏الشِّرْكُ بِاللَّهِ وَقَتْلُ النَّفْسِ ‏ ‏وَعُقُوقُ ‏ ‏الْوَالِدَيْنِ وَقَالَ أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ قَالَ قَوْلُ ‏ ‏الزُّورِ ‏ ‏أَوْ قَالَ شَهَادَةُ ‏ ‏الزُّورِ ‏


قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏وَأَكْبَرُ ظَنِّي أَنَّهُ شَهَادَةُ ‏ ‏الزُّورِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள் அல்லது பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டபோது, “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெருபாவங்களாகும்)” என்று கூறினார்கள். பிறகு “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்டு விட்டு, “பொய் பேசுவது அல்லது பொய் சாட்சி கூறுவதுதான் (அது)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெறுபவர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்), “(அது) ‘பொய் சாட்சி’ என்ற சொல்தான் என்று நான் கருதுகிறேன்” என்று குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 127

و حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ :‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْكَبَائِرِ قَالَ ‏ ‏الشِّرْكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَقَتْلُ النَّفْسِ وَقَوْلُ الزُّورِ ‏

“அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, கொலை செய்வது, பொய் பேசுவது ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும்” என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 38, ஹதீஸ் எண்: 126

حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرِ بْنِ مُحَمَّدٍ النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْجُرَيْرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏

كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ثَلَاثًا الْإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَشَهَادَةُ الزُّورِ ‏ ‏أَوْ قَوْلُ الزُّورِ ‏ ‏وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُتَّكِئًا فَجَلَسَ فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ ‏

நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், “பெரும் பாவங்களுள் மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று (மூன்று முறை) கேட்டார்கள். பின்னர், சாய்ந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்தமர்ந்து, “அவை, அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோர் மனத்தைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் சொல்வது அல்லது பொய் பேசுவது” என்று திரும்பத் திரும்ப – அவர்கள் நிறுத்த மாட்டார்களா என்று நாங்கள் எண்ணுமளவுக்கு – கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 37, ஹதீஸ் எண்: 125

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ شُرَحْبِيلَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ :‏

قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَيُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ

فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا ‏وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரிய பாவம் எது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை வைப்பதுதான் (பெரும் பாவம்)” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்டார். அவர்கள், “உன் பிள்ளை உன்னுடன் (உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது” என்று சொன்னார்கள். “பிறகு எது?” என்று அவர் கேட்க, “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இக்கூற்றை மெய்பிக்கும் வகையில், “மேலும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி வேறெந்தக் கடவுளையும் அழைக்க மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றி (அநியாயமாகக்) கொலை செய்ய மாட்டார்கள்; மேலும், விபச்சாரம் செய்ய மாட்டார்கள். யாரேனும் இப்பாவச் செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்” எனும் (25:68ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 37, ஹதீஸ் எண்: 124

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏وَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ شُرَحْبِيلَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏

سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قَالَ قُلْتُ لَهُ إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “பாவங்களில் அல்லாஹ்வின் பார்வையில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உன்னைஅல்லாஹ் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். “நிச்சயமாக அது மிகப்பெரிய பாவம்தான்” என்று நான் சொல்லி விட்டு, “பிறகு எது?” என்று அவர்களிடம் கேட்டேன். “உன் பிள்ளை உன்னுடன் (உன் உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான் “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் (மீது நம்பிக்கை கொண்டுள்ள) அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 36, ஹதீஸ் எண்: 123

حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَفْضَلُ الْأَعْمَالِ ‏ ‏أَوْ الْعَمَلِ ‏ ‏الصَّلَاةُ لِوَقْتِهَا وَبِرُّ الْوَالِدَيْنِ ‏

“நற்செயல்களில் மிகச் சிறந்தவை, உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் பெற்றோரின் நலன் நாடுவதுமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 36, ஹதீஸ் எண்: 122

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏صَاحِبُ هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ :‏

سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي ‏


حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ وَزَادَ وَأَشَارَ إِلَى دَارِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَمَا سَمَّاهُ لَنَا ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்று கூறினார்கள். நான் “பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பிறகு பெற்றோரின் நலன் நாடுவது” என்றார்கள். நான் “பிறகு எது?” என்று கேட்டபோது, “பிறகு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள்.

இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். இன்னும் அதிகமாக (நற்செயல்கள் குறித்து) நான் கேட்டிருந்தால் அவர்களும் எனக்கு அதிகமாகச் சொல்லியிருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

“இந்த வீட்டுக்காரர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) என்னிடம் கூறினார்” என்பதாக மேற்காணும் அறிவிப்பை அபூஅம்ரு அஷ்ஷைபானீ (ரஹ்) எடுத்துச் சொன்னார்.

ஷுஃபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது இல்லத்தை நோக்கி அபூஅம்ரு அஷ்ஷைபானீ (ரஹ்) சுட்டிக் காட்டினார்கள்; அன்னாரது பெயரை எங்களிடம் குறிப்பிடவில்லை” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 36, ஹதீஸ் எண்: 121

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ الْفَزَارِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو يَعْفُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ ‏ ‏أَيُّ الْأَعْمَالِ أَقْرَبُ إِلَى الْجَنَّةِ قَالَ الصَّلَاةُ عَلَى مَوَاقِيتِهَا قُلْتُ وَمَاذَا يَا نَبِيَّ اللَّهِ قَالَ بِرُّ الْوَالِدَيْنِ قُلْتُ وَمَاذَا يَا نَبِيَّ اللَّهِ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ‏

“அல்லாஹ்வின் நபியே! (நற்)செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமாக்கி வைக்கும் செயல் எது?” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்), “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்று கூறினார்கள். “அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!” என்று கேட்டேன். அதற்கு, “பெற்றோரின் நலன் நாடுவது” என்றார்கள். “அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!” என்று கேட்டபோது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 36, ஹதீஸ் எண்: 120

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ إِيَاسٍ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏قَالَ ‏:‏

سَأَلْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ الصَّلَاةُ لِوَقْتِهَا قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ‏ ‏بِرُّ ‏ ‏الْوَالِدَيْنِ قَالَ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَمَا تَرَكْتُ أَسْتَزِيدُهُ إِلَّا ‏ ‏إِرْعَاءً ‏ ‏عَلَيْهِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ” (நற்)செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்று பதிலளித்தார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “பெற்றோரின் நலன் நாடுவது” என்றார்கள். நான் “பிறகு எது?” என்று கேட்டேன். அதற்கு “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள். (நபி) அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்றெண்ணி மேற்கொண்டும் கேட்பதை விட்டு விட்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 36, ஹதீஸ் எண்: 119

حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُرَاوِحٍ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ :‏‏

قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ قَالَ الْإِيمَانُ بِاللَّهِ وَالْجِهَادُ فِي سَبِيلِهِ قَالَ قُلْتُ أَيُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ أَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا وَأَكْثَرُهَا ثَمَنًا قَالَ قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ قَالَ تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ ضَعُفْتُ عَنْ بَعْضِ الْعَمَلِ قَالَ تَكُفُّ شَرَّكَ عَنْ النَّاسِ فَإِنَّهَا صَدَقَةٌ مِنْكَ عَلَى نَفْسِكَ ‏

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُرَاوِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَتُعِينُ الصَّانِعَ أَوْ تَصْنَعُ لِأَخْرَقَ ‏

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், “விடுதலை செய்வதில் எது சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்)” என்று பதிலளித்தார்கள். “அ (த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து என்னால் இயலவில்லையென்றால்…?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்! (நற்)செயல்களில் சிலவற்றைக் கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் (நான் என்ன செய்வது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்கே செய்து கொள்ளும் ஒரு நல்லறம்தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் அல்-கிஃபாரீ (ரலி)


குறிப்பு :

உர்வா பின் அல்-ஸுபைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “தொழில் செய்பவருக்கு உதவி செய்க” என்பதற்கு பதிலாக “பலவீனருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக” என இடம் பெற்றுள்ளது.