அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2601

‏و حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏مَعْبَدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏ ‏قُلْتُ لَهُ سَمِعْتَهُ مِنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ نَعَمْ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا فَإِنَّمَا هُوَ الْقَدَرُ ‏


و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏وَبَهْزٌ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ سِيرِينَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمْ عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فِي ‏ ‏الْعَزْلِ ‏ ‏لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ‏ ‏ذَاكُمْ فَإِنَّمَا هُوَ الْقَدَرُ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏بَهْزٍ ‏ ‏قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏قُلْتُ لَهُ سَمِعْتَهُ مِنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ نَعَمْ

“நீங்கள் (அஸ்லுச்) செய்யாவிட்டால் உங்கள்மீது பழியேதுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் (கருத்தரிப்பது / தரிக்காமல் போவது) விதியாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்புகள் :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அனஸ் பின் ஸீரீன் (ரஹ்) கூறுகின்றார்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) மஅபத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்களிடம், “இதை நீங்கள் அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்“ என்றார்கள்.

முஹம்மது பின் ஹாத்திம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவ்வாறு நீங்கள் (அஸ்லுச்) செய்யாவிட்டால் உங்கள்மீது பழியேதுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் விதியாகும்” என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

பஹ்ஸு பின் அஸத் (ரஹ்) வழி அறிவிப்பில் ஷுஅபா (ரஹ்), நான் அனஸ் பின் ஸீரீன் (ரஹ்) அவர்களிடம் “நீங்கள் இதை அபூஸயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள் என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2600

‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جُوَيْرِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مُحَيْرِيزٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏أَنَّهُ أَخْبَرَهُ : ‏

‏قَالَ أَصَبْنَا ‏ ‏سَبَايَا ‏ ‏فَكُنَّا ‏ ‏نَعْزِلُ ‏ ‏ثُمَّ سَأَلْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ لَنَا وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ ‏ ‏مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا هِيَ كَائِنَةٌ

நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில போர்க் கைதிகளைப் பெற்றோம். (எங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) ‘அஸ்லு’ச் செய்து கொள்ளவும் விரும்பினோம். அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள், “நீங்கள் (அஸ்லு) செய்துகொண்டுதான் இருக்கின்றீர்களா? நீங்கள் (அஸ்லு) செய்துகொண்டுதான் இருக்கின்றீர்களா? நீங்கள் (அஸ்லு) செய்துகொண்டுதான் இருக்கின்றீர்களா?” என்று கேட்டுவிட்டு, “மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2599

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏رَبِيعَةُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ مُحَيْرِيزٍ ‏ ‏أَنَّهُ قَالَ : ‏

‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَأَبُو صِرْمَةَ ‏ ‏عَلَى ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏فَسَأَلَهُ ‏ ‏أَبُو صِرْمَةَ ‏ ‏فَقَالَ يَا ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ ‏ ‏الْعَزْلَ ‏ ‏فَقَالَ نَعَمْ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَزْوَةَ ‏ ‏بَلْمُصْطَلِقِ ‏ ‏فَسَبَيْنَا كَرَائِمَ ‏ ‏الْعَرَبِ ‏ ‏فَطَالَتْ عَلَيْنَا الْعُزْبَةُ وَرَغِبْنَا فِي الْفِدَاءِ فَأَرَدْنَا أَنْ ‏ ‏نَسْتَمْتِعَ ‏ ‏وَنَعْزِلَ فَقُلْنَا نَفْعَلُ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ أَظْهُرِنَا ‏ ‏لَا نَسْأَلُهُ فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا مَا كَتَبَ اللَّهُ خَلْقَ نَسَمَةٍ هِيَ كَائِنَةٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا سَتَكُونُ ‏


حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْفَرَجِ مَوْلَى بَنِي هَاشِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الزِّبْرِقَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فِي مَعْنَى حَدِيثِ ‏ ‏رَبِيعَةَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَإِنَّ اللَّهَ كَتَبَ مَنْ هُوَ خَالِقٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ

நானும் அபூஸிர்மா (ரஹ்) அவர்களும் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபூஸிர்மா, “அபூஸயீத் அவர்களே! ‘அஸ்லு’ பற்றித் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதைச் செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஸயீத் (ரலி), “ஆம்!, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பனூ முஸ்தலிக் போரில் கலந்து கொண்டோம். அப்போது, உயர்ந்த அரபு இனப் பெண்களைப் போர்க் கைதிகளாகப் பிடித்தோம். நீண்ட காலம் நாங்கள் பெண்சுகம் கிடைக்கப் பெறாத நிலையில், போரில் பிடிபட்டுள்ள பெண் கைதிகளிடம் சுகம் பெறலாம் என ஆசைப்பட்டோம். ஆனால், உறவின்போது பெண் கைதிகள் கருவுற்றுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம்(@). ஆகையால், உடலுறவின்போது இடைமுறிப்பு(அஸ்லு)ச் செய்து கொள்ளத் தீர்மானித்தோம்.

இந்நிலையில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நம்முடன் இருக்கும்போது, அவர்களிடம் கேட்காமல் நாம் ‘அஸ்லு’ச் செய்வதா?” என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் (அஸ்லு  பற்றிக்) கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “அவ்வாறு நீங்கள் (அஸ்லு) செய்யாவிட்டாலும் உங்கள் மீது (குற்றம்) இல்லை. படைக்க வேண்டுமென அல்லாஹ் எழுதிவிட்ட எந்த ஓர் உயிரும் மறுமை நாள்வரை உருவாகியே தீரும்” என்று கூறினார்கள் என்று அபூஸயீத் (ரலி), விவரித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்)


குறிப்புகள் :

மூஸா பின் உக்பா (ரஹ்) வழி அறிவிப்பில், “…ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை தான் படைக்கவிருப்பவற்றை எழுதி (முடித்து)விட்டான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

($) உடலுறவின்போது இடைமுறிப்பு (அஸ்லு) என்பது அந்தக் கால அரபியர்களிடம் இயல்பாக வழக்கிலிருந்த, மருந்தில்லாக் கருத்தடை முறையாகும். உடலுறவின்போது ஆணின் விந்து, பெண்ணின் கருவறைக்குச் சென்றுவிடாமலிருக்க உடலுறவின் இடையிலேயே ஆண் விலகிக் கொள்வதற்கு ‘அஸ்லு’ என்று சொல்லப்படும்.

(@) பெண் கைதிகள் கருவுற்றுவிட்டால் அவர்களுக்கான ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு விடுதலை செய்ய முடியாது.

அத்தியாயம்: 16, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2598

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ حَمْزَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ مِنْ أَعْظَمِ الْأَمَانَةِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ ‏ ‏يُفْضِي ‏ ‏إِلَى امْرَأَتِهِ ‏ ‏وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا ‏


وَقَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏إِنَّ أَعْظَمَ

“அல்லாஹ்வின் பார்வையில் மறுமை நாளில் மாபெரும் நம்பிக்கைத் துரோகம் என்பது யாதெனில், கணவனும் மனைவியும் உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ


குறிப்பு :

“மாபெரும் நம்பிக்கைத் துரோகம் என்பது …” என்று இப்னு நுமைர் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 16, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2597

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِيِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ ‏ ‏يُفْضِي ‏ ‏إِلَى امْرَأَتِهِ ‏ ‏وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا

“கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உடலுறவில் ஈடுபட்டு, பின்னர் மனைவியைப் பற்றிய (உடலுறவு) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவன் ஆவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2596

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَلَمْ تَأْتِهِ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ

“ஒருவர் தம் மனைவியைத் தம் படுக்கைக்கு அழைத்து, அவரிடம் அவள் போகாமலிருந்து, அதனால் அவள்மீது அவர் கோபத்துடன்  இரவைக் கழிப்பாராயின், விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டே இருக்கின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2595

‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ يَعْنِي ابْنَ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏مَا مِنْ رَجُلٍ يَدْعُو امْرَأَتَهُ إِلَى فِرَاشِهَا ‏ ‏فَتَأْبَى عَلَيْهِ إِلَّا كَانَ الَّذِي فِي السَّمَاءِ سَاخِطًا عَلَيْهَا حَتَّى ‏ ‏يَرْضَى عَنْهَا

“என் உயிர் கையிலுள்ளவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான் – அவள் மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 16, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2594

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَتَادَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏زُرَارَةَ بْنِ أَوْفَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا بَاتَتْ الْمَرْأَةُ هَاجِرَةً فِرَاشَ زَوْجِهَا لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏حَتَّى تَرْجِعَ

“ஒரு பெண், தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

காலித் பின் அல் ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவள் (கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2593

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : ‏

‏أَنَّ ‏ ‏يَهُودَ ‏ ‏كَانَتْ تَقُولُ إِذَا أُتِيَتْ الْمَرْأَةُ مِنْ دُبُرِهَا فِي قُبُلِهَا ثُمَّ حَمَلَتْ كَانَ وَلَدُهَا أَحْوَلَ قَالَ فَأُنْزِلَتْ  ‏ ” نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا ‏ ‏حَرْثَكُمْ ‏ ‏أَنَّى شِئْتُمْ “‏


و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَهْبُ بْنُ جَرِيرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏النُّعْمَانَ بْنَ رَاشِدٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَلَّى بْنُ أَسَدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ وَهُوَ ابْنُ الْمُخْتَارِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ وَزَادَ فِي حَدِيثِ ‏ ‏النُّعْمَانِ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏إِنْ شَاءَ مُجَبِّيَةً وَإِنْ شَاءَ غَيْرَ مُجَبِّيَةٍ غَيْرَ أَنَّ ذَلِكَ فِي صِمَامٍ وَاحِدٍ

முதுகுப்புற வழியாகப் பெண்ணுறுப்பில் புணரப்பட்ட பெண் கருவுற்றால், அவள் (பெற்றெடுக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். அப்போதுதான் “உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்” எனும் (2:223ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நுஅமான் பின் ராஷித் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், “விரும்பினால் அவள் மல்லாந்த நிலையிலோ (கணவன் மேல்) கவிழ்ந்த நிலையிலோ, பெண் உறுப்பில் (மட்டும்) …” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2592

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُنْكَدِرِ ‏ ‏سَمِعَ ‏ ‏جَابِرًا ‏ ‏يَقُولُ :‏

كَانَتْ ‏ ‏الْيَهُودُ ‏ ‏تَقُولُ إِذَا أَتَى الرَّجُلُ امْرَأَتَهُ مِنْ دُبُرِهَا فِي قُبُلِهَا كَانَ الْوَلَدُ أَحْوَلَ فَنَزَلَتْ: نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا ‏ ‏حَرْثَكُمْ ‏ ‏أَنَّى شِئْتُمْ

ஒருவர் தம் மனைவின் பெண் உறுப்பில், முதுகுப்புறத்திலிருந்து உடலுறவு கொண்டால் (பிறக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, “உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்” எனும் (2:223ஆவது) இறை வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)