அத்தியாயம்: 18, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2729

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏يَحْيَى بْنَ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ يَسَارٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏وَابْنَ عَبَّاسٍ ‏ ‏اجْتَمَعَا عِنْدَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَهُمَا يَذْكُرَانِ الْمَرْأَةَ ‏ ‏تُنْفَسُ ‏ ‏بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏عِدَّتُهَا ‏ ‏آخِرُ الْأَجَلَيْنِ ‏ ‏وَقَالَ ‏ ‏أَبُو سَلَمَةَ ‏ ‏قَدْ ‏ ‏حَلَّتْ ‏ ‏فَجَعَلَا يَتَنَازَعَانِ ذَلِكَ قَالَ فَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَنَا مَعَ ابْنِ أَخِي ‏ ‏يَعْنِي ‏ ‏أَبَا سَلَمَةَ ‏ ‏فَبَعَثُوا ‏ ‏كُرَيْبًا ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏إِلَى ‏ ‏أُمِّ سَلَمَةَ : ‏

‏يَسْأَلُهَا عَنْ ذَلِكَ فَجَاءَهُمْ فَأَخْبَرَهُمْ أَنَّ ‏ ‏أُمَّ سَلَمَةَ ‏ ‏قَالَتْ إِنَّ ‏ ‏سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةَ ‏ ‏نُفِسَتْ ‏ ‏بَعْدَ وَفَاةِ ‏ ‏زَوْجِهَا ‏ ‏بِلَيَالٍ وَإِنَّهَا ذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَمَرَهَا أَنْ تَتَزَوَّجَ ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏اللَّيْثَ ‏ ‏قَالَ فِي حَدِيثِهِ فَأَرْسَلُوا إِلَى ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏وَلَمْ يُسَمِّ ‏ ‏كُرَيْبًا

அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்து சேர்ந்தனர். கணவன் இறந்துவிட்ட பெண் ஒரு சில இரவுகளில் பிரசவித்துவிடுவது பற்றி(யும், அவ்வாறு பிரசவித்துவிட்டால் அவளது ‘இத்தா’ அத்துடன் முடிந்துவிடுமா, இல்லையா என்பது பற்றியும்) அவர்களிருவரும் பேசிக்கொண்டனர்.

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “இரு தவணைகளில் பிந்தியதே அவளது இத்தாவாகும்” என்றார்கள். அபூஸலமா (ரஹ்), “அவள் பிரசவித்தவுடன் (மறுமணம் செய்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாள்” என்று கூறினார்கள்.

இது குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அபூஹுரைரா (ரலி), “நான் என் சகோதரர் மகன் (அபூஸலமா) உடன் (இந்த விஷயத்தில் ஒத்து) இருக்கின்றேன்” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் அது குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பணியாளர் குறைப் (ரஹ்) அவர்களை ((நபி (ஸல்) அவர்களின் மனைவி)) உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அவர் (சென்றுவிட்டுத்) திரும்பிவந்து, “ஸுபைஆ பின்த்தி அல்ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி), தம் கணவர் (ஸஅத் பின் கவ்லா) இறந்த சில இரவுகளில் குழந்தை பெற்றெடுத்தார். அவர் அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவரை (மறு)மணம் செய்துகொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டார்கள்” என்று உம்மு ஸலமா (ரலி) கூறியதாகக் குறைப் (ரஹ்) தெரிவித்தார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸுலைமான் பின் யஸார் (ரஹ்)


குறிப்பு :

லைஸ் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பில், “ … அவர்கள் (மூவரும்) உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஓர் ஆளை அனுப்பினார்கள்” எனப் பெயரின்றி இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 18, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2728

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏وَتَقَارَبَا فِي اللَّفْظِ ‏ ‏قَالَ ‏ ‏حَرْمَلَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏يُونُسُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏كَتَبَ إِلَى ‏ ‏عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ : ‏

‏يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى ‏ ‏سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ ‏ ‏فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَمَّا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ ‏ ‏عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏إِلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏يُخْبِرُهُ أَنَّ ‏ ‏سُبَيْعَةَ ‏ ‏أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ ‏ ‏سَعْدِ بْنِ خَوْلَةَ ‏ ‏وَهُوَ فِي ‏ ‏بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ ‏ ‏وَكَانَ مِمَّنْ شَهِدَ ‏ ‏بَدْرًا ‏ ‏فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ ‏ ‏تَنْشَبْ ‏ ‏أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا ‏ ‏تَعَلَّتْ ‏ ‏مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا ‏ ‏أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ ‏ ‏رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي عَبْدِ الدَّارِ ‏ ‏فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ مُتَجَمِّلَةً لَعَلَّكِ تَرْجِينَ النِّكَاحَ إِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ ‏ ‏سُبَيْعَةُ ‏ ‏فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ ‏ ‏فَأَفْتَانِي بِأَنِّي قَدْ ‏ ‏حَلَلْتُ ‏ ‏حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏فَلَا أَرَى بَأْسًا أَنْ تَتَزَوَّجَ حِينَ وَضَعَتْ وَإِنْ كَانَتْ فِي دَمِهَا غَيْرَ أَنْ لَا يَقْرَبُهَا زَوْجُهَا حَتَّى تَطْهُرَ

என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்), உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் ஸுபைஆ பின்த்தி அல்ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸுபைஆ மார்க்கத் தீர்ப்புக் கேட்டதைப் பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி ஸுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) (கேட்டறிந்து, என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:

ஸுபைஆ பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி), பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த ஸஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் (ரலி) பத்ருப் போரில் கலந்துகொண்டவராவார். ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஸஅத் (ரலி) இறந்துவிட்டார். அப்போது ஸுபைஆ கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் (ரலி) இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) ஸுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து ஸுபைஆ தூய்மையானபோது, பெண் கேட்க வருபவர்களுக்காகத் தன்னை அவர் அலங்கரித்துக்கொண்டார். அப்போது பனூ அப்தித்தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅகக் (ரலி) ஸுபைஆவிடம் வந்து, “திருமணம் செய்யும் ஆசையில் (பெண் கேட்க வருபவர்களுக்காக) உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய ‘இத்தா’க் காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் செய்துகொள்ள முடியாது” என்று சொன்னார்கள்.

ஸுபைஆ (ரலி) கூறுகின்றார்கள்:

இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து  மாலை நேரத்தில் நான் (வெளிச் செல்லும்) எனது உடையை உடுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, “நீ பிரசவித்துவிட்டபோதே (மணம் செய்துகொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய்” என்று தீர்ப்பு வழங்கிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்” என உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஸுபைஆ பின்த்தி அல்ஹாரிஸ் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்)


குறிப்புகள் :

“(கணவன் இறந்த) ஒரு பெண் பிரசவித்தவுடன் -பிரசவ இரத்தப்போக்கு இருக்கும் போதே- (மறு)மணம் செய்துகொள்வதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை; ஆயினும், அவள் தூய்மையடையும்வரை அவளுடைய (புதிய) கணவன் அவளை (உடலுறவுக்காக) நெருங்கக் கூடாது” என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கருத்துத் தெரிவித்துள்ளார்.

‘இத்தா‘ என்பது கரு அறியக் காத்திருக்கும் காலமாகும். கணவன் இறந்துவிட்ட, கருவுறாத பெண் நான்கு மாதம் பத்து நாள்கள் ‘இத்தா‘ இருக்கவேண்டும்.

ஒரு மாதக் கருவைச் சுமக்கும் பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் பிரசவிக்கும்வரை – ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் – ‘இத்தா‘ கடைப்பிடிக்க வேண்டும்.

ஒன்பது மாதக் கருவைச் சுமக்கும் பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் பிரசவிக்கும்வரை – ஏறத்தாழ ஒரு மாதம் – ‘இத்தா‘ இருந்தால் போதும் (அல்குர்ஆன் 65:4).

அத்தியாயம்: 18, பாடம்: 7, ஹதீஸ் எண்: 2727

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ : ‏

‏طُلِّقَتْ خَالَتِي فَأَرَادَتْ أَنْ ‏ ‏تَجُدَّ ‏ ‏نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ فَأَتَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏بَلَى ‏ ‏فَجُدِّي ‏ ‏نَخْلَكِ فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفًا

என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (‘இத்தா’வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தாவின்போது) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, வெளியே போகவேண்டிய தேவை குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்), “ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் செய்யக் கூடும்” என்று கூறி அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2726

‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ : ‏

‏قَالَ ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏أَلَمْ تَرَيْ إِلَى ‏ ‏فُلَانَةَ بِنْتِ الْحَكَمِ ‏ ‏طَلَّقَهَا ‏ ‏زَوْجُهَا ‏ ‏الْبَتَّةَ ‏ ‏فَخَرَجَتْ فَقَالَتْ بِئْسَمَا صَنَعَتْ فَقَالَ أَلَمْ تَسْمَعِي إِلَى قَوْلِ ‏ ‏فَاطِمَةَ ‏ ‏فَقَالَتْ ‏ ‏أَمَا إِنَّهُ لَا خَيْرَ لَهَا فِي ذِكْرِ ذَلِكَ

நான் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமுடைய மகளான இன்ன பெண்ணைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் இத்தா இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “அவர் செய்தது தவறு” என்றார்கள். நான், “ஃபாத்திமா பின்த்து கைஸ், (வேறு இடத்தில் ‘இத்தா’ இருந்தது பற்றிக்) கூறிக்கொண்டிருப்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி), “இந்தச் செய்தியைக் கூறிக்கொண்டிருப்பதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2725

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ : ‏

‏مَا ‏ ‏لِفَاطِمَةَ ‏ ‏خَيْرٌ أَنْ تَذْكُرَ هَذَا قَالَ تَعْنِي قَوْلَهَا لَا سُكْنَى وَلَا نَفَقَةَ

“மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடம் கிடையாது; ஜீவனாம்சமும் கிடையாது என்று கூறிக்கொண்டிருப்பதால் ஃபாத்திமா பின்த்து கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை” என ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக காஸிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2724

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏قَالَتْ : ‏

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏زَوْجِي ‏ ‏طَلَّقَنِي ثَلَاثًا وَأَخَافُ أَنْ يُقْتَحَمَ عَلَيَّ قَالَ ‏ ‏فَأَمَرَهَا فَتَحَوَّلَتْ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். நான் (என் கணவர் வீட்டில் ‘இத்தா’ இருந்தால்) அத்துமீறி யாரும் புகுந்துவிடலாம் என அஞ்சுகிறேன்” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அங்கிருந்து இடம் மாறிக்கொள்ள) எனக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் இடம் மாறி(‘இத்தா’ இருந்து) கொண்டேன்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2723

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏قَالَ : ‏

‏تَزَوَّجَ ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدِ بْنِ الْعَاصِ ‏ ‏بِنْتَ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَكَمِ ‏ ‏فَطَلَّقَهَا فَأَخْرَجَهَا مِنْ عِنْدِهِ فَعَابَ ذَلِكَ عَلَيْهِمْ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَقَالُوا إِنَّ ‏ ‏فَاطِمَةَ ‏ ‏قَدْ خَرَجَتْ قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَأَتَيْتُ ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَأَخْبَرْتُهَا بِذَلِكَ فَقَالَتْ ‏ ‏مَا ‏ ‏لِفَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏خَيْرٌ فِي أَنْ تَذْكُرَ هَذَا الْحَدِيثَ

யஹ்யா பின் ஸயீத் பின் அல்ஆஸ் (ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்களின் மகளைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் அவரை (மூன்று) தலாக் சொல்லி, தம் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். நான் அவர்களை (அவருடைய குடும்பத்தாரை) இது குறித்துக் கண்டித்தேன். அதற்கு அவர்கள், “ஃபாத்திமா பின்த்து கைஸ் (‘இத்தா’க் காலத்தில் தமது கணவரின் இல்லத்திலிருந்து) வெளியேறினாரே?” என்று கூறினார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி), “இந்த ஹதீஸைக் கூறுவதால் ஃபாத்திமா பின்த்து கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2722

‏و حَدَّثَنِي ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ آدَمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَسَنُ بْنُ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏السُّدِّيِّ ‏ ‏عَنْ ‏ ‏الْبَهِيِّ ‏ ‏عَنْ ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏قَالَتْ : ‏

‏طَلَّقَنِي زَوْجِي ثَلَاثًا فَلَمْ يَجْعَلْ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُكْنَى وَلَا نَفَقَةً

என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), எனக்கு (என் கணவர் மூலம் ‘இத்தா’க் காலத்தில்) உறைவிடத்தையோ ஜீவனாம்சத்தையோ ஏற்படுத்தவில்லை.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி)

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2721

‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏تَقُولُ : ‏

‏أَرْسَلَ إِلَيَّ زَوْجِي ‏ ‏أَبُو عَمْرِو بْنُ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ ‏ ‏بِطَلَاقِي وَأَرْسَلَ مَعَهُ بِخَمْسَةِ ‏ ‏آصُعِ ‏ ‏تَمْرٍ وَخَمْسَةِ ‏ ‏آصُعِ ‏ ‏شَعِيرٍ فَقُلْتُ أَمَا لِي نَفَقَةٌ إِلَّا هَذَا وَلَا أَعْتَدُّ فِي مَنْزِلِكُمْ قَالَ لَا قَالَتْ فَشَدَدْتُ عَلَيَّ ثِيَابِي وَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏كَمْ طَلَّقَكِ قُلْتُ ثَلَاثًا قَالَ صَدَقَ لَيْسَ لَكِ نَفَقَةٌ اعْتَدِّي فِي بَيْتِ ابْنِ عَمِّكِ ‏ ‏ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏ ‏فَإِنَّهُ ‏ ‏ضَرِيرُ ‏ ‏الْبَصَرِ تُلْقِي ثَوْبَكِ عِنْدَهُ فَإِذَا انْقَضَتْ عِدَّتُكِ ‏ ‏فَآذِنِينِي ‏ ‏قَالَتْ فَخَطَبَنِي خُطَّابٌ مِنْهُمْ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏وَأَبُو الْجَهْمِ ‏ ‏فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏تَرِبٌ خَفِيفُ الْحَالِ ‏ ‏وَأَبُو الْجَهْمِ ‏ ‏مِنْهُ شِدَّةٌ عَلَى النِّسَاءِ ‏ ‏أَوْ يَضْرِبُ النِّسَاءَ أَوْ نَحْوَ هَذَا ‏ ‏وَلَكِنْ عَلَيْكِ ‏ ‏بِأُسَامَةَ بْنِ زَيْدٍ ‏


‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ الثَّوْرِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي الْجَهْمِ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏فَسَأَلْنَاهَا فَقَالَتْ كُنْتُ عِنْدَ ‏ ‏أَبِي عَمْرِو بْنِ حَفْصِ بْنِ الْمُغِيرَةِ ‏ ‏فَخَرَجَ فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏نَجْرَانَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ مَهْدِيٍّ ‏ ‏وَزَادَ قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَشَرَّفَنِي اللَّهُ ‏ ‏بِأَبِي زَيْدٍ ‏ ‏وَكَرَّمَنِي ‏ ‏اللَّهُ ‏ ‏بِأَبِي زَيْدٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْتُ أَنَا ‏ ‏وَأَبُو سَلَمَةَ ‏ ‏عَلَى ‏ ‏فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ ‏ ‏زَمَنَ ‏ ‏ابْنِ الزُّبَيْرِ ‏ ‏فَحَدَّثَتْنَا أَنَّ زَوْجَهَا طَلَّقَهَا طَلَاقًا بَاتًّا ‏ ‏بِنَحْوِ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

என் கணவர் அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல்முஃகீரா, அய்யாஷ் பின் அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து ‘ஸாஉ’ பேரீச்சம் பழமும் ஐந்து ‘ஸாஉ’ தொலி நீக்கப்படாத கோதுமை(பார்லி)யும் கொடுத்தனுப்பினார். நான் அவரிடம், “எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான் உங்கள் வீட்டில் ‘இத்தா’ இருக்கமாட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ், “இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)” என்று சொல்லிவிட்டார். உடனே நான் (வெளியே செல்லும்போது உடுத்தும்) எனது ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர் உனக்கு எத்தனை தலாக் சொன்னார்?” என்று கேட்டார்கள். நான் “மூன்று (தலாக்)” என்றேன். (அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் கிடையாது. நீ உன் தந்தையின் சகோதரர் மகன் இப்னு உம்மி மக்தூம் அவர்களது இல்லத்தில் ‘இத்தா’ இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது ஆடையை அவர் அங்கு இருந்தாலும் மாற்றிக்கொள்ளலாம். உன் ‘இத்தா’க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி” என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில் முஆவியா (ரலி), அபூஜஹ்மு (ரலி) ஆகியோரும் அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்), “முஆவியா வசதி குறைந்த ஏழை. அபூஜஹ்மிடம், பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை அடித்து விடுபவர்) மாறாக, உனக்கு உஸாமா பின் ஸைது ஏற்றவர்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி)


குறிப்புகள் :

“நானும் அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று (அவர்களுடைய தலாக்குக் குறித்து) கேட்டோம். அவர், “நான் அபூஅம்ரு பின் ஹஃப்ஸு பின் அல்முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அப்போது அவர் நஜ்ரான் போருக்குப் புறப்பட்டார் …” என்று கூறினார் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன” என்று அபூபக்ரு பின் அபில்ஜஹ்மு (ரஹ்) கூறினார்.

அந்த ஹதீஸின் இறுதியில் “ … எனவே, நான் உஸாமா பின் ஸைத் – (அபூஸைத்) (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னை மேன்மைப்படுத்தினான்; அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அபூபக்ரு பின் அபில்ஜஹ்மு வழி அறிவிப்பில், “நானும் அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது  அவர், “என் கணவர் என்னை முற்றாகத் தலாக் சொல்லி, அதை முடிவுக்குக் கொண்டுவந்தார் …” என்று கூறினார்கள் எனத் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

ஒரு ‘ஸாஉ’ என்றால் நடுத்தரமான ஒருவரின் இரு கை நிறைய நான்கு முறை அள்ளிப் போடும் அளவைக் குறிக்கும். ஒரு ‘ஸாஉ’ = 2 கிலோ 176 கிராம் அளவாகும் (ஹதீஸ் 2082).

அத்தியாயம்: 18, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2720

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ بْنِ صُخَيْرٍ الْعَدَوِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ ‏ ‏تَقُولُ : ‏

‏إِنَّ زَوْجَهَا طَلَّقَهَا ثَلَاثًا فَلَمْ يَجْعَلْ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُكْنَى وَلَا نَفَقَةً قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ‏ ‏حَلَلْتِ ‏ ‏فَآذِنِينِي ‏ ‏فَآذَنْتُهُ فَخَطَبَهَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏وَأَبُو جَهْمٍ ‏ ‏وَأُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏فَرَجُلٌ تَرِبٌ لَا مَالَ لَهُ وَأَمَّا ‏ ‏أَبُو جَهْمٍ ‏ ‏فَرَجُلٌ ‏ ‏ضَرَّابٌ لِلنِّسَاءِ وَلَكِنْ ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا ‏ ‏أُسَامَةُ ‏ ‏أُسَامَةُ ‏ ‏فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏طَاعَةُ اللَّهِ وَطَاعَةُ رَسُولِهِ خَيْرٌ لَكِ قَالَتْ فَتَزَوَّجْتُهُ فَاغْتَبَطْتُ

என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என் கணவர் மூலம்) உறைவிடமோ ஜீவனாம்சமோ ஏற்பாடு செய்யவில்லை. என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீ உன் ‘இத்தா’க் காலத்தை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக” என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் தெரிவித்தேன். என்னை முஆவியா (ரலி), அபூஜஹ்மு (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் பெண் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “முஆவியாவோ, செல்வமற்ற ஓர் ஏழை. அபூஜஹ்மோ மனைவியரை அதிகமாக அடிக்கக்கூடியவர். மாறாக, உஸாமா பின் ஸைதே (உனக்குப் பொருத்தமானவர்)” என்றார்கள். உடனே நான் ‘உஸாமா; (பெரிய) உஸாமா’ என கையால் சைகை செய்(து அதிருப்தி தெரிவித்)தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதும் அவனுடைய தூதருக்குக் கட்டுப்படுவதும் உனக்கு நல்லதாகும்” என்றார்கள். பின்னர் உஸாமாவையே நான் மணந்துகொண்டு மன நிறைவு அடைந்தேன்.

அறிவிப்பாளர் : ஃபாத்திமா பின்த்து கைஸ் (ரலி)