அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3924

حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرَ بْنَ الأَشَجِّ حَدَّثَهُ أَنَّ بُسْرَ بْنَ سَعِيدٍ حَدَّثَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ حَدَّثَهُ وَمَعَ بُسْرٍ عُبَيْدُ اللَّهِ الْخَوْلاَنِيُّ أَنَّ أَبَا طَلْحَةَ حَدَّثَهُ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ ‏”‏


قَالَ بُسْرٌ فَمَرِضَ زَيْدُ بْنُ خَالِدٍ فَعُدْنَاهُ فَإِذَا نَحْنُ فِي بَيْتِهِ بِسِتْرٍ فِيهِ تَصَاوِيرُ فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ الْخَوْلاَنِيِّ أَلَمْ يُحَدِّثْنَا فِي التَّصَاوِيرِ قَالَ إِنَّهُ قَالَ إِلاَّ رَقْمًا فِي ثَوْبٍ أَلَمْ تَسْمَعْهُ قُلْتُ لاَ ‏.‏ قَالَ بَلَى قَدْ ذَكَرَ ذَلِكَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதல்ஹா (ரலி)


குறிப்பு :

(இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) புஸ்ரு பின் ஸயீத் (ரஹ்) கூறுகின்றார்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) நோய் வாய்ப்பட்டபோது, நாங்கள் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அங்கு அவர்களது வீட்டி(ன் வாசலி)ல் உருவப் படங்கள் உள்ள திரையை நாங்கள் கண்டோம். நான் (என்னுடனிருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் “உருவப் படங்களைப் பற்றி (முன்பு ஒரு நாள்) ஸைத் பின் காலித் (ரலி) நமக்கு (ஒரு) ஹதீஸ் அறிவிக்கவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு உபைதுல்லாஹ் (ரஹ்), “துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர என்று அவர்கள் (சேர்த்துச்) சொன்னதை நீர் செவியேற்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அதற்கு உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) , “ஆம், அவ்வாறு (சேர்த்தே) சொன்னார்கள்” எனக் கூறினார்.

அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3923

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ بُكَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ، عَنْ أَبِي طَلْحَةَ ‏ صَاحِبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ:‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ ‏”‏


قَالَ بُسْرٌ ثُمَّ اشْتَكَى زَيْدٌ بَعْدُ فَعُدْنَاهُ فَإِذَا عَلَى بَابِهِ سِتْرٌ فِيهِ صُورَةٌ – قَالَ – فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ الْخَوْلاَنِيِّ رَبِيبِ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَلَمْ يُخْبِرْنَا زَيْدٌ عَنِ الصُّوَرِ يَوْمَ الأَوَّلِ فَقَالَ عُبَيْدُ اللَّهِ أَلَمْ تَسْمَعْهُ حِينَ قَالَ إِلاَّ رَقْمًا فِي ثَوْبٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உருவப் படம் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதல்ஹா (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான புஸ்ரு பின் ஸயீத் (ரஹ்) கூறுகின்றார்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) பிற்றைய நாளொன்றில் நோய்வாய்ப்பட்டபோது, அவர்களை உடல்நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது அவர்களது வீட்டுக் கதவில் உருவப் படம் உள்ள திரைச் சீலையொன்று தொங்கிக்கொண்டிருந்தது.

நான் (இந்த ஹதீஸை ஸைத் (ரலி) எனக்கு அறிவித்தபோது என்னுடனிருந்த) நபி (ஸல்) அவர்களின் துணைவி மைமூனா (ரலி) அவர்களின் வளர்ப்பு மகனான உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், “உருவப் படங்களைப் பற்றி முன்பொரு நாள் ஸைத் (ரலி) நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு உபைதுல்லாஹ் (ரஹ்), “துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் உருவத்)தைத் தவிர என்று அவர்கள் சொன்னதை நீர் கேட்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3922

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ، يَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ‏”‏


وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَ حَدِيثِ يُونُسَ وَذِكْرِهِ الأَخْبَارَ فِي الإِسْنَادِ ‏

“நாயும் (உயிரினங்களின்) உருவப் படமும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதல்ஹா (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3921

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ يَحْيَى وَإِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَبِي طَلْحَةَ:‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ‏”‏

“நாயும் (உயிரினங்களின்) உருவப் படமும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதல்ஹா (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3920

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ السَّبَّاقِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ قَالَ :‏

أَخْبَرَتْنِي مَيْمُونَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَصْبَحَ يَوْمًا وَاجِمًا فَقَالَتْ مَيْمُونَةُ يَا رَسُولَ اللَّهِ لَقَدِ اسْتَنْكَرْتُ هَيْئَتَكَ مُنْذُ الْيَوْمِ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ جِبْرِيلَ كَانَ وَعَدَنِي أَنْ يَلْقَانِي اللَّيْلَةَ فَلَمْ يَلْقَنِي أَمَ وَاللَّهِ مَا أَخْلَفَنِي ‏”‏ ‏.‏ قَالَ فَظَلَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَهُ ذَلِكَ عَلَى ذَلِكَ ثُمَّ وَقَعَ فِي نَفْسِهِ جِرْوُ كَلْبٍ تَحْتَ فُسْطَاطٍ لَنَا فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً فَنَضَحَ مَكَانَهُ فَلَمَّا أَمْسَى لَقِيَهُ جِبْرِيلُ فَقَالَ لَهُ ‏”‏ قَدْ كُنْتَ وَعَدْتَنِي أَنْ تَلْقَانِي الْبَارِحَةَ ‏”‏ ‏.‏ قَالَ أَجَلْ وَلَكِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ‏.‏ فَأَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ فَأَمَرَ بِقَتْلِ الْكِلاَبِ حَتَّى إِنَّهُ يَأْمُرُ بِقَتْلِ كَلْبِ الْحَائِطِ الصَّغِيرِ وَيَتْرُكُ كَلْبَ الْحَائِطِ الْكَبِيرِ ‏‏

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வழக்கத்திற்கு மாறாகக்) கவலையோடு அமைதியாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களது தோற்றத்தில் ஏதோ மாற்றத்தை நான் காண்கின்றேனே (ஏன்)?” என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஜிப்ரீல் இன்றிரவில் என்னை வந்து சந்திப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், அவர் வரவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என்னிடம் வாக்கு மாறி நடந்ததில்லை” என்று சொன்னார்கள். அந்நாள் முழுவதும் அதே நிலையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள்.

பிறகு அவர்களது மனத்தில், எங்கள் வீட்டிலிருந்த கூடாரமொன்றுக்குக் கீழே நாய்க்குட்டி இருக்கும் நினைவு வந்தது. உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்டவுடன் தமது கையில் தண்ணீர் அள்ளி அந்த இடத்தில் தெளித்து விட்டார்கள்.

அன்று மாலை நேரமானதும் ஜிப்ரீல் (அலை) வந்து அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது “நீங்கள் நேற்றிரவு என்னிடம் வருவதாக  வாக்களித்திருந்தீர்களே?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை), “ஆம். ஆயினும், (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப் படமும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்” என்று கூறினார்கள்.

அன்றைய பொழுது புலர்ந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நாய்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய தோட்டங்களில் உள்ள நாய்களையும் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். பெரிய தோட்டங்களில் உள்ள நாய்களை(க் கொல்லக் கட்டளையிடாமல்) விட்டுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3919

حَدَّثَنِي سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِالرَّحْمَنِ عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ :‏

وَاعَدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ ‏”‏ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلاَ رُسُلُهُ ‏”‏ ‏.‏ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ ‏”‏ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَا هُنَا ‏”‏ ‏.‏ فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ ‏.‏ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ ‏”‏ ‏.‏ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ ‏.‏


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَبِي حَازِمٍ بِهَذَا الإِسْنَادِ أَنَّ جِبْرِيلَ، وَعَدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَأْتِيَهُ ‏.‏ فَذَكَرَ الْحَدِيثَ وَلَمْ يُطَوِّلْهُ كَتَطْوِيلِ ابْنِ أَبِي حَازِمٍ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, “அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டார்கள்” என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.

உடனே “ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை” என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஜிப்ரீல் (அலை), “உங்கள் வீட்டினுள்ளிருந்த நாய்தான் என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

வுஹைப் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) வருவதாக வாக்களித்திருந்தார் கள்…” என்று ஆரம்பமாகி(சுருக்கமாக முடிகி)றது. மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்று விரிவாக இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 37, பாடம்: 25, ஹதீஸ் எண்: 3918

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ”‏

“யூதர்களும் கிறித்தவர்களும் (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (உங்கள் நரைமுடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 24, ஹதீஸ் எண்: 3917

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:‏

أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ غَيِّرُوا هَذَا بِشَىْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ ‏”‏ ‏‏

மக்கா வெற்றி நாளில் அபூகுஹாஃபா, (நபி – ஸல் அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபி (ஸல்) “இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கருப்பு நிறத்தைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 37, பாடம்: 24, ஹதீஸ் எண்: 3916

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏

أُتِيَ بِأَبِي قُحَافَةَ أَوْ جَاءَ عَامَ الْفَتْحِ أَوْ يَوْمَ الْفَتْحِ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامِ أَوِ الثَّغَامَةِ فَأَمَرَ أَوْ فَأُمِرَ بِهِ إِلَى نِسَائِهِ قَالَ ‏ “‏ غَيِّرُوا هَذَا بِشَىْءٍ ‏”‏ ‏

மக்கா வெற்றி ஆண்டில் / வெற்றி நாளில் நபி (ஸல்) அவர்களிடம் அபூகுஹாஃபா வந்தார்கள் / கொண்டுவரப்பட்டார்கள். அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்), “இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

அபூகுஹாஃபா அவர்கள், அபூபக்ரு (ரலி) அவர்களின் தந்தையாவார்.

அத்தியாயம்: 37, பாடம்: 23, ஹதீஸ் எண்: 3915

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو الرَّبِيعِ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ التَّزَعْفُرِ ‏


قَالَ قُتَيْبَةُ قَالَ حَمَّادٌ يَعْنِي لِلرِّجَالِ

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ نُمَيْرٍ وَأَبُو كُرَيْبٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ عُلَيَّةَ – عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ ‏.

குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்புகள் :

ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அதாவது ஆண்களுக்குத் தடை செய்தார்கள்” என (விளக்கத்துடன்) இடம்பெற்றுள்ளது.

இஸ்மாயீல் இப்னு உலையா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஆண்கள் குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்ளக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  தடை விதித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.