அத்தியாயம்: 37, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3924

حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرَ بْنَ الأَشَجِّ حَدَّثَهُ أَنَّ بُسْرَ بْنَ سَعِيدٍ حَدَّثَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ حَدَّثَهُ وَمَعَ بُسْرٍ عُبَيْدُ اللَّهِ الْخَوْلاَنِيُّ أَنَّ أَبَا طَلْحَةَ حَدَّثَهُ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ ‏”‏


قَالَ بُسْرٌ فَمَرِضَ زَيْدُ بْنُ خَالِدٍ فَعُدْنَاهُ فَإِذَا نَحْنُ فِي بَيْتِهِ بِسِتْرٍ فِيهِ تَصَاوِيرُ فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ الْخَوْلاَنِيِّ أَلَمْ يُحَدِّثْنَا فِي التَّصَاوِيرِ قَالَ إِنَّهُ قَالَ إِلاَّ رَقْمًا فِي ثَوْبٍ أَلَمْ تَسْمَعْهُ قُلْتُ لاَ ‏.‏ قَالَ بَلَى قَدْ ذَكَرَ ذَلِكَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதல்ஹா (ரலி)


குறிப்பு :

(இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) புஸ்ரு பின் ஸயீத் (ரஹ்) கூறுகின்றார்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) நோய் வாய்ப்பட்டபோது, நாங்கள் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அங்கு அவர்களது வீட்டி(ன் வாசலி)ல் உருவப் படங்கள் உள்ள திரையை நாங்கள் கண்டோம். நான் (என்னுடனிருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் “உருவப் படங்களைப் பற்றி (முன்பு ஒரு நாள்) ஸைத் பின் காலித் (ரலி) நமக்கு (ஒரு) ஹதீஸ் அறிவிக்கவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு உபைதுல்லாஹ் (ரஹ்), “துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர என்று அவர்கள் (சேர்த்துச்) சொன்னதை நீர் செவியேற்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அதற்கு உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) , “ஆம், அவ்வாறு (சேர்த்தே) சொன்னார்கள்” எனக் கூறினார்.

Share this Hadith:

Leave a Comment