அத்தியாயம்: 38, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3983

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَمْرٍو الأَشْعَثِيُّ، وَأَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ – وَاللَّفْظُ لأَحْمَدَ – قَالَ الأَشْعَثِيُّ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ ‏”‏ ‏.‏ زَادَ ابْنُ أَبِي شَيْبَةَ فِي رِوَايَتِهِ ‏”‏ لاَ مَالِكَ إِلاَّ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏”‏ ‏.‏ قَالَ الأَشْعَثِيُّ قَالَ سُفْيَانُ مِثْلُ شَاهَانْ شَاهْ ‏.‏ وَقَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ سَأَلْتُ أَبَا عَمْرٍو عَنْ أَخْنَعَ فَقَالَ أَوْضَعَ ‏‏

“அல்லாஹ்விடம் (மறுமை நாளில்) மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒருவன் ‘மலிக்குல் அம்லாக்’ மன்னாதி மன்னன் என்று சூட்டிக்கொண்ட பெயராகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “சர்வ வல்லமையும் மாண்பும் மிக்க அரசன் என்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸயீத் பின் அம்ரு அல்அஷ்அஸீ (ரஹ்), “மலிக்குல் அம்லாக் என்பதற்கு, (பாரசீக மொழியில்) ஷாஹான்-ஷாஹ் (மன்னாதி மன்னன்) என்று ஸுஃப்யான் (ரஹ்) (பொருள்) கூறினார்கள்” என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளரான இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:

நான் (மொழியியல் வல்லுநர்) அபூஅம்ரு இஸ்ஹாக் பின் மிரார் (ரஹ்) அவர்களிடம், இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘அக்னஉ’ எனும் சொல் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அதற்கு ‘அவ்ளஉ’ (மிகவும் கீழ்த்தரமானது) என்று பெருள்” என விடையளித்தார்கள்.

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3982

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، قَالَ سَمَّيْتُ ابْنَتِي بَرَّةَ فَقَالَتْ لِي زَيْنَبُ بِنْتُ أَبِي سَلَمَةَ :‏

إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ هَذَا الاِسْمِ وَسُمِّيتُ بَرَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ تُزَكُّوا أَنْفُسَكُمُ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ ‏”‏ ‏.‏ فَقَالُوا بِمَ نُسَمِّيهَا قَالَ ‏”‏ سَمُّوهَا زَيْنَبَ ‏”‏

நான் என் மகளுக்கு, பர்ரா (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த்தி அபீஸலமா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு ‘பர்ரா’ என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவருக்கு ஸைனப் எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்தி உம்மி ஸலமா (ரலி) வழியாக முஹம்மது பின் அம்ரு பின் அதாஉ (ரஹ்)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3981

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، حَدَّثَتْنِي زَيْنَبُ، بِنْتُ أُمِّ سَلَمَةَ قَالَتْ :‏

كَانَ اسْمِي بَرَّةَ فَسَمَّانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْنَبَ ‏.‏ قَالَتْ وَدَخَلَتْ عَلَيْهِ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ وَاسْمُهَا بَرَّةُ فَسَمَّاهَا زَيْنَبَ ‏‏

எனக்கு (முதலில்) ‘பர்ரா’ (நல்லவள்) என்ற பெயதான் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு ஸைனப் (நறுமண மலர்) எனப் பெயர் சூட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியார்) ஸைனப் பின்த்தி ஜஹ்ஷ் (ரலி) வந்தார். அவருக்கும் பர்ரா (நல்லவர்) என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கும் ‘ஸைனப்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைனப் பின்த்தி உம்மி ஸலமா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3980

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، سَمِعْتُ أَبَا رَافِعٍ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ ح

وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ زَيْنَبَ، كَانَ اسْمُهَا بَرَّةَ فَقِيلَ تُزَكِّي نَفْسَهَا ‏.‏ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَيْنَبَ ‏.‏ وَلَفْظُ الْحَدِيثِ لِهَؤُلاَءِ دُونَ ابْنِ بَشَّارٍ ‏.‏ وَقَالَ ابْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ ‏

ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) ‘பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது, “அவர், (தன்னை நல்லவள் என) தற்பெருமை கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸைனப் (நறுமண மலர்) என்று பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3979

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، – وَاللَّفْظُ لِعَمْرٍو – قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

كَانَتْ جُوَيْرِيَةُ اسْمُهَا بَرَّةَ فَحَوَّلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اسْمَهَا جُوَيْرِيَةَ وَكَانَ يَكْرَهُ أَنْ يُقَالَ خَرَجَ مِنْ عِنْدِ بَرَّةَ


وَفِي حَدِيثِ ابْنِ أَبِي عُمَرَ عَنْ كُرَيْبٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ‏

அன்னை ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) ‘பர்ரா’ என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஜுவைரியா’ (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘பர்ரா’விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டுவிட்டார்கள்“ என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3978

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ ابْنَةً لِعُمَرَ، كَانَتْ يُقَالُ لَهَا عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَمِيلَةَ ‏

என் தந்தை உமர் (ரலி) அவர்களுக்கு, ‘ஆஸியா’ (பாவி) என்ற பெயரில் மகளொருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஜமீலா (அழகி) என(மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3977

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَيَّرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ ‏ “‏ أَنْتِ جَمِيلَةُ ‏”‏


قَالَ أَحْمَدُ مَكَانَ أَخْبَرَنِي عَنْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஆஸியா (பாவி) எனும் பெயரை மாற்றிவிட்டு, “நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாஃபிஉ (ரஹ்) எனக்கு அறிவித்தார்” என்றில்லாமல் “கூறினார்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 38, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3976

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

أَرَادَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَنْهَى عَنْ أَنْ يُسَمَّى بِيَعْلَى وَبِبَرَكَةَ وَبِأَفْلَحَ وَبِيَسَارٍ وَبِنَافِعٍ وَبِنَحْوِ ذَلِكَ ثُمَّ رَأَيْتُهُ سَكَتَ بَعْدُ عَنْهَا فَلَمْ يَقُلْ شَيْئًا ثُمَّ قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يَنْهَ عَنْ ذَلِكَ ثُمَّ أَرَادَ عُمَرُ أَنْ يَنْهَى عَنْ ذَلِكَ ثُمَّ تَرَكَهُ‏

யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யஸார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற (விளிப்) பெயர்களைச் சூட்ட வேண்டாம் என(ப் பொது)த் தடை விதிக்க நபி (ஸல்) விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்.

பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3975

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنِ هِلاَلِ بْنِ يَسَافٍ، عَنْ رَبِيعِ بْنِ عُمَيْلَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “أَحَبُّ الْكَلاَمِ إِلَى اللَّهِ أَرْبَعٌ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ‏.‏ لاَ يَضُرُّكَ بَأَيِّهِنَّ بَدَأْتَ.‏ وَلاَ تُسَمِّيَنَّ غُلاَمَكَ يَسَارًا وَلاَ رَبَاحًا وَلاَ نَجِيحًا وَلاَ أَفْلَحَ فَإِنَّكَ تَقُولُ أَثَمَّ هُوَ فَلاَ يَكُونُ فَيَقُولُ لاَ‏.”‏‏ إِنَّمَا هُنَّ أَرْبَعٌ فَلاَ تَزِيدُنَّ عَلَىَّ ‏


وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنِي جَرِيرٌ، ح وَحَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ، – وَهْوَ ابْنُ الْقَاسِمِ – ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، كُلُّهُمْ عَنْ مَنْصُورٍ، بِإِسْنَادِ زُهَيْرٍ ‏.‏ فَأَمَّا حَدِيثُ جَرِيرٍ وَرَوْحٍ فَكَمِثْلِ حَدِيثِ زُهَيْرٍ بِقِصَّتِهِ ‏.‏ وَأَمَّا حَدِيثُ شُعْبَةَ فَلَيْسَ فِيهِ إِلاَّ ذِكْرُ تَسْمِيَةِ الْغُلاَمِ وَلَمْ يَذْكُرِ الْكَلاَمَ الأَرْبَعَ

“அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும்:

  1.  ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)
  2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)
  3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)
  4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்).

இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யஸார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (ஏற்றம் பெற்றவன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ (விளிப்) பெயர் சூட்டிட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) ‘அவன் அங்கு இருக்கின்றானா?’ என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால், ‘இல்லை’ என்றுதான் பதில் வரும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர் ஸமுரா (ரலி) கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றைவிடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்கக் கூடாது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், அடிமைகளுக்கு (விளிப்) பெயர் சூட்டுவது தொடர்பாகவே இடம்பெற்றுள்ளது. நான்கு (துதிச்) சொற்கள் பற்றிய குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 38, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3974

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الرُّكَيْنِ بْنِ الرَّبِيعِ، عَنْ أَبِيهِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تُسَمِّ غُلاَمَكَ رَبَاحًا وَلاَ يَسَارًا وَلاَ أَفْلَحَ وَلاَ نَافِعًا ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் அடிமைக்கு ரபாஹ் (இலாபம்) என்றோ, யஸார் (சுலபம்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ, நாஃபிஉ (பயனளிப்பவன்) என்றோ (விளிப்) பெயர் சூட்டிட வேண்டாம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸமுரா பின் ஜுன்தப் (ரலி)