அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4311

حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ :‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَبْيَضَ قَدْ شَابَ كَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ ‏


وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، بِهَذَا وَلَمْ يَقُولُوا أَبْيَضَ قَدْ شَابَ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கின்றேன். அவர்கள் வெண்ணிறத்தவர்களாகவும் வயது முதிர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். (நபியவர்களின் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு (தோற்றத்தில்) ஒத்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “வெண்ணிறத்தவர்களாகவும் வயது முதிர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4310

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ :‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ مِنْهُ بَيْضَاءَ وَوَضَعَ زُهَيْرٌ بَعْضَ أَصَابِعِهِ عَلَى عَنْفَقَتِهِ قِيلَ لَهُ مِثْلُ مَنْ أَنْتَ يَوْمَئِذٍ قَالَ أَبْرِي النَّبْلَ وَأَرِيشُهَا

அபூஜுஹைஃபா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (முகத்தில்) இந்த இடத்தில் வெள்ளை முடி இருந்ததை நான் கண்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

(அபூஜுஹைஃபா (ரலி) சுட்டிக்காட்டியதைப் போன்று, இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) தமது விரல் ஒன்றைத் தமது கீழுதட்டிலுள்ள குறுந்தாடியின் மீது வைத்து சைகை செய்து காட்டினார்கள்).

அப்போது அவர்களிடம், “அன்றைய தினம் நீங்கள் (வயதில்) யாரை ஒத்து இருந்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஜுஹைஃபா (ரலி), “அப்போது நான் அம்புக்கு இறகு பொருத்தும் விவரமுடைய வயதுள்ளவனாக இருந்தேன்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4309

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ وَأَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ جَمِيعًا عَنْ أَبِي دَاوُدَ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، سَمِعَ أَبَا إِيَاسٍ عَنْ أَنَسٍ :‏

أَنَّهُ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ مَا شَانَهُ اللَّهُ بِبَيْضَاءَ ‏

அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களுக்கு(த் தலையில்) நரைமுடி இருந்ததா?” என்பது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவர்களை அல்லாஹ் நரைமுடியால் அலங்கோலப்படுத்தவில்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக அபூஇயாஸ் முஆவியா பின் குர்ரா (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4308

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

يُكْرَهُ أَنْ يَنْتِفَ الرَّجُلُ، الشَّعْرَةَ الْبَيْضَاءَ مِنْ رَأْسِهِ وَلِحْيَتِهِ – قَالَ – وَلَمْ يَخْتَضِبْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّمَا كَانَ الْبَيَاضُ فِي عَنْفَقَتِهِ وَفِي الصُّدْغَيْنِ وَفِي الرَّأْسِ نَبْذٌ ‏


وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا الْمُثَنَّى، بِهَذَا الإِسْنَادِ ‏

ஒருவர் தம் தலையிலும் தாடியிலும் உள்ள நரைமுடிகளைப் பிடுங்குவது வெறுக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நரைமுடிக்குச்) சாயம் பூசியதில்லை. அவர்களது (கீழுதட்டின் அடியிலுள்ள) குறுந்தாடியிலும் நெற்றிப் பொட்டுகளிலுள்ள முடியிலும்தான் வெண்மை இருந்தது. தலையில் ஆங்காங்கே ஒரு சில முடிகளே நரைத்திருந்தன.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4307

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا ثَابِتٌ قَالَ :‏

سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ خِضَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأْسِهِ فَعَلْتُ ‏.‏ وَقَالَ لَمْ يَخْتَضِبْ وَقَدِ اخْتَضَبَ أَبُو بَكْرٍ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ وَاخْتَضَبَ عُمَرُ بِالْحِنَّاءِ بَحْتًا ‏

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) (தமது நரைமுடிக்குச்) சாயம் பூசியதுண்டா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களது தலையிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும். நபி (ஸல்) சாயம் பூசியதில்லை. (ஆனால்,) அபூபக்ரு (ரலி) மருதாணி இலையாலும் (யமன் நாட்டு மூலிகை) ‘கத்தம்’ செடியின் இலையாலும் சாயம் பூசியிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் மருதாணி இலையால் நன்கு சாயம் பூசியிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக ஸாபித் அல்புனானீ (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4306

وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَرَ مِنَ الشَّيْبِ إِلاَّ قَلِيلاً ‏.‏

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தலைக்குச்) சாயம் பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு, “அவர்கள் ஒரு சில நரைமுடிகளையே கண்டார்கள். (எனவே, சாயம் பூசவில்லை)” என்று அனஸ் பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4305

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ ابْنِ سِيرِينَ قَالَ :‏

سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَضَبَ فَقَالَ لَمْ يَبْلُغِ الْخِضَابَ كَانَ فِي لِحْيَتِهِ شَعَرَاتٌ بِيضٌ ‏.‏ قَالَ قُلْتُ لَهُ أَكَانَ أَبُو بَكْرٍ يَخْضِبُ قَالَ فَقَالَ نَعَمْ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தலைமுடிக்குச்) சாயம் பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சாயம் பூசுகின்ற அளவுக்கு அவர்களுக்கு (நரை முடிகள்) இல்லை. அவர்களது தாடியில் மட்டுமே சில வெள்ளை முடிகள் இருந்தன” என்று கூறினார்கள்.

அவர்களிடம், “அபூபக்ரு (ரலி) சாயம் பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு, “ஆம்; மருதாணி இலையாலும் (யமன் நாட்டு மூலிகை) கத்தம் செடியின் இலையாலும் (சாயம் பூசியிருந்தார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4304

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ وَعَمْرٌو النَّاقِدُ جَمِيعًا عَنِ ابْنِ إِدْرِيسَ، – قَالَ عَمْرٌو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ الأَوْدِيُّ، – عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ قَالَ :‏

سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَكُنْ رَأَى مِنَ الشَّيْبِ إِلاَّ – قَالَ ابْنُ إِدْرِيسَ كَأَنَّهُ يُقَلِّلُهُ – وَقَدْ خَضَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ ‏

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தலையில் நரை எதையும் பார்க்கவில்லை – (மிகக் குறைவான) இவ்வளவு தவிர” என்று (சைகையால்) கூறினார்கள்.

மேலும் அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோர் தம் நரைமுடிக்கு மருதாணி இலையாலும் (யமன் நாட்டு மூலிகை) ‘கத்தம்’ செடியின் இலையாலும் சாயமிட்டுவந்தனர்” என்றும் அனஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 28, ஹதீஸ் எண்: 4303

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ :‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا عَلَى وَجْهِ الأَرْضِ رَجُلٌ رَآهُ غَيْرِي ‏.‏ قَالَ فَقُلْتُ لَهُ فَكَيْفَ رَأَيْتَهُ قَالَ كَانَ أَبْيَضَ مَلِيحًا مُقَصَّدًا

அபுத்துஃபைல் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கின்றேன்; இந்தப் பூமியின்மீது அவர்களைப் பார்த்தவர் என்னைத் தவிர வேறெந்த மனிதரும் (இப்போது உயிருடன்) இல்லை” என்று கூறினார்கள்.

அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எவ்வாறு கண்டீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான தோற்றமுடையவராகவும் நடுத்தரமான உடல்வாகு கொண்டவராகவும் இருந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி) வழியாக ஸயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்)

அத்தியாயம்: 43, பாடம்: 28, ஹதீஸ் எண்: 4302

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ :‏

قُلْتُ لَهُ أَرَأَيْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ كَانَ أَبْيَضَ مَلِيحَ الْوَجْهِ ‏.‏ قَالَ مُسْلِمُ بْنُ الْحَجَّاجِ مَاتَ أَبُو الطُّفَيْلِ سَنَةَ مِائَةٍ وَكَانَ آخِرَ مَنْ مَاتَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏

நான் அபுத்துஃபைல் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான முகமுடையவராகவும் இருந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபுத்துஃபைல் (ரலி) வழியாக ஸயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்)


குறிப்பு :

“அபுத்துஃபைல் (ரலி) (ஹிஜ்ரீ) நூறாம் ஆண்டில் இறந்தார்கள்; நபித்தோழர்களில் இறுதியாக இறந்தவர் அபுத்துஃபைல் (ரலி) ஆவார்” என்று ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பின் ஆசிரியர், இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.