அத்தியாயம்: 45, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4610

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنِ ابْنِ الْهَادِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ :‏

أَنَّ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ أَبَرُّ الْبِرِّ أَنْ يَصِلَ الرَّجُلُ وُدَّ أَبِيهِ ‏”‏

“நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒருவர் தம் தந்தையின் அன்பர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4609

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي الْوَلِيدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ:‏

أَنَّ رَجُلاً مِنَ الأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ فَقَالَ ابْنُ دِينَارٍ فَقُلْنَا لَهُ أَصْلَحَكَ اللَّهُ إِنَّهُمُ الأَعْرَابُ وَإِنَّهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ ‏”‏ ‏

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது, அவருக்கு அப்துல்லாஹ் முகமன் கூறி, அவரை, தாம் பயணம் செய்துவந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலைமீதிருந்த தலைப்பாகையை(கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், “அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்! இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு (மரியாதை) கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள்” என்று கூறினோம்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்)

அத்தியாயம்: 45, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4608

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ‏”‏ ‏.‏ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ ‏”‏ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، حَدَّثَنِي سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ رَغِمَ أَنْفُهُ ‏”‏ ‏.‏ ثَلاَثًا ثُمَّ ذَكَرَ مِثْلَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகு அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று சொன்னார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “தம் தாய் தந்தையரில் ஒருவரையோ அவ்விருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன்தான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று மூன்று தடவை சொன்னார்கள் …” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

*எதையும் கவ்வுகின்ற உறுப்பு, வாயே அன்றி மூக்கு அல்ல. எனவே, ‘மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்பது குறியீட்டுச் சொல்தான். எனவே, அதை நேரடிப் பொருளில் தமிழ்ப் படுத்துவது சரியல்ல. ஒருவரது செயல்/பேச்சு வெறுப்பூட்டுவதாக இருப்பதைக் குறிப்பதற்கு அரபியரின் மொழி வழக்கில், ’அவரது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்பர். அதற்கு, “அவரது செயல்/பேச்சு எனக்கு வெறுப்பூட்டுகின்றது” என்பது பொருளாம்.

அத்தியாயம்: 45, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4607

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏:‏

“‏ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ ‏”‏ ‏.‏ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ ‏”‏ ‏

நபி (ஸல்), “மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகு மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று கூறினார்கள். “யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்), “தம் பெற்றோரில் ஒருவரையோ அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்குத் தான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4606

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏:‏

“‏ لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلاَّ ثَلاَثَةٌ عِيسَى ابْنُ مَرْيَمَ وَصَاحِبُ جُرَيْجٍ وَكَانَ جُرَيْجٌ رَجُلاً عَابِدًا فَاتَّخَذَ صَوْمَعَةً فَكَانَ فِيهَا فَأَتَتْهُ أُمُّهُ وَهُوَ يُصَلِّي فَقَالَتْ يَا جُرَيْجُ ‏.‏ فَقَالَ يَا رَبِّ أُمِّي وَصَلاَتِي ‏.‏ فَأَقْبَلَ عَلَى صَلاَتِهِ فَانْصَرَفَتْ فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَتَتْهُ وَهُوَ يُصَلِّي فَقَالَتْ يَا جُرَيْجُ فَقَالَ يَا رَبِّ أُمِّي وَصَلاَتِي فَأَقْبَلَ عَلَى صَلاَتِهِ فَانْصَرَفَتْ فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ أَتَتْهُ وَهُوَ يُصَلِّي فَقَالَتْ يَا جُرَيْجُ ‏.‏ فَقَالَ أَىْ رَبِّ أُمِّي وَصَلاَتِي ‏.‏ فَأَقْبَلَ عَلَى صَلاَتِهِ فَقَالَتِ اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى يَنْظُرَ إِلَى وُجُوهِ الْمُومِسَاتِ ‏.‏ فَتَذَاكَرَ بَنُو إِسْرَائِيلَ جُرَيْجًا وَعِبَادَتَهُ وَكَانَتِ امْرَأَةٌ بَغِيٌّ يُتَمَثَّلُ بِحُسْنِهَا فَقَالَتْ إِنْ شِئْتُمْ لأَفْتِنَنَّهُ لَكُمْ – قَالَ – فَتَعَرَّضَتْ لَهُ فَلَمْ يَلْتَفِتْ إِلَيْهَا فَأَتَتْ رَاعِيًا كَانَ يَأْوِي إِلَى صَوْمَعَتِهِ فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَقَعَ عَلَيْهَا فَحَمَلَتْ فَلَمَّا وَلَدَتْ قَالَتْ هُوَ مِنْ جُرَيْجٍ ‏.‏ فَأَتَوْهُ فَاسْتَنْزَلُوهُ وَهَدَمُوا صَوْمَعَتَهُ وَجَعَلُوا يَضْرِبُونَهُ فَقَالَ مَا شَأْنُكُمْ قَالُوا زَنَيْتَ بِهَذِهِ الْبَغِيِّ فَوَلَدَتْ مِنْكَ ‏.‏ فَقَالَ أَيْنَ الصَّبِيُّ فَجَاءُوا بِهِ فَقَالَ دَعُونِي حَتَّى أُصَلِّيَ فَصَلَّى فَلَمَّا انْصَرَفَ أَتَى الصَّبِيَّ فَطَعَنَ فِي بَطْنِهِ وَقَالَ يَا غُلاَمُ مَنْ أَبُوكَ قَالَ فُلاَنٌ الرَّاعِي – قَالَ – فَأَقْبَلُوا عَلَى جُرَيْجٍ يُقَبِّلُونَهُ وَيَتَمَسَّحُونَ بِهِ وَقَالُوا نَبْنِي لَكَ صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ ‏.‏ قَالَ لاَ أَعِيدُوهَا مِنْ طِينٍ كَمَا كَانَتْ ‏.‏ فَفَعَلُوا ‏.‏ وَبَيْنَا صَبِيٌّ يَرْضَعُ مِنْ أُمِّهِ فَمَرَّ رَجُلٌ رَاكِبٌ عَلَى دَابَّةٍ فَارِهَةٍ وَشَارَةٍ حَسَنَةٍ فَقَالَتْ أُمُّهُ اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَ هَذَا ‏.‏ فَتَرَكَ الثَّدْىَ وَأَقْبَلَ إِلَيْهِ فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ ‏.‏ ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهِ فَجَعَلَ يَرْتَضِعُ ‏.‏ قَالَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَحْكِي ارْتِضَاعَهُ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ فِي فَمِهِ فَجَعَلَ يَمُصُّهَا ‏.‏ قَالَ وَمَرُّوا بِجَارِيَةٍ وَهُمْ يَضْرِبُونَهَا وَيَقُولُونَ زَنَيْتِ سَرَقْتِ ‏.‏ وَهِيَ تَقُولُ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ ‏.‏ فَقَالَتْ أُمُّهُ اللَّهُمَّ لاَ تَجْعَلِ ابْنِي مِثْلَهَا ‏.‏ فَتَرَكَ الرَّضَاعَ وَنَظَرَ إِلَيْهَا فَقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا ‏.‏ فَهُنَاكَ تَرَاجَعَا الْحَدِيثَ فَقَالَتْ حَلْقَى مَرَّ رَجُلٌ حَسَنُ الْهَيْئَةِ فَقُلْتُ اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ ‏.‏ فَقُلْتَ اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ ‏.‏ وَمَرُّوا بِهَذِهِ الأَمَةِ وَهُمْ يَضْرِبُونَهَا وَيَقُولُونَ زَنَيْتِ سَرَقْتِ ‏.‏ فَقُلْتُ اللَّهُمَّ لاَ تَجْعَلِ ابْنِي مِثْلَهَا ‏‏ فَقُلْتَ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا

قَالَ  : إِنَّ ذَاكَ الرَّجُلَ كَانَ جَبَّارًا فَقُلْتُ اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ ‏.‏ وَإِنَّ هَذِهِ يَقُولُونَ لَهَا زَنَيْتِ ‏.‏ وَلَمْ تَزْنِ وَسَرَقْتِ وَلَمْ تَسْرِقْ فَقُلْتُ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا ‏

நபி (ஸல்) கூறினார்கள்:

தொட்டிலில் (குழந்தையாக இருந்தபோது) மூவரைத் தவிர வேறெவரும் பேசியதில்லை. ஒருவர் மர்யமின் மகன் ஈஸா (அலை); (மற்றொருவர்) ஜுரைஜின் பிள்ளை (என அவதூறு சொல்லப்பட்ட குழந்தை).

ஜுரைஜ் (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த) வணக்கசாலியாக இருந்தார். அவர் ஆசிரமம் ஒன்றை அமைத்துக்கொண்டு அதிலிருந்து (வழிபட்டு)வந்தார். (ஒரு முறை) அவர் தொழுதுகொண்டிருந்தபோது அவரிடம் அவருடைய தாயார் வந்து, “ஜுரைஜே!“ என்று அழைத்தார். அப்போது ஜுரைஜ், “என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?” என்று (தமக்குள்) வினவிக்கொண்டு, தொழுகையில் கவனம் செலுத்தினார்.

ஆகவே, அவருடைய தாயார் (கோபித் துக்கொண்டு) திரும்பிச்சென்றுவிட்டார். மறுநாளும் அவர் தொழுதுகொண்டிருந்த போது அவரிடம் அவருடைய தாயார் வந்து, “ஜுரைஜே!“ என்று அழைத்தார். அப்போதும் அவர், “என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?” என்று (தமக்குள்) வினவிக்கொண்டு, தொடர்ந்து தொழுகையில் கவனம் செலுத்தினார். ஆகவே, (அன்றும்) அவருடைய தாயார் (கோபித்துக்கொண்டு) திரும்பிச் சென்றுவிட்டார்.

அதற்கடுத்த நாளும் அவருடைய தாயார் வந்தார். அப்போதும் அவர் தொழுதுகொண்டிருந்தார். அவர், “ஜுரைஜே!“ என்று அழைத்தார். ஜுரைஜ், “என் இறைவா! என் தாயா? எனது தொழுகையா?” என்று (தமக்குள்) வினவிக்கொண்டு தொழுகையில் கவனம் செலுத்தினார். ஆகவே, அவருடைய தாயார் (கோபித்துக்கொண்டு), “இறைவா! அவனை (ஜுரைஜை) விபச்சாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதே” என்று (சபித்துப்) பிரார்த்தித்தார்.

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஜுரைஜைப் பற்றியும் அவருடைய வணக்க வழிபாடுகளைப் பற்றியும் (புகழ்ந்து) பேசிக்கொண்டிருந்தனர். இஸ்ராயீல் மக்களுள் அழகுக்குப் பெயர்போன, விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த ஒருத்தி இருந்தாள். அவள் (பனூ இஸ்ராயீல் மக்களிடம்), “நீங்கள் விரும்பினால் உங்களுக்காக அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துவேன்” என்று கூறிவிட்டு, அவரிடம் தன்னை ஒப்படைக்க முயன்றாள். ஆனால், அவளை ஜுரைஜ் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ஆகவே, (அவரைப் பழிவாங்குவதற்காக) ஜுரைஜின் ஆசிரமத்துக்கு வரும் ஓர் ஆட்டு இடையனிடம் அவள் சென்றாள். தன்னை அனுபவித்துக்கொள்ள அந்த இடையனுக்கு அவள் வாய்ப்பளித்தாள். அவனும் அவளுடன் (தகாத) உறவில் ஈடுபட்டான்.

(அதில்) அவள் கர்ப்பமுற்றாள். குழந்தை பிறந்ததும், “இது ஜுரைஜுக்குப் பிறந்த குழந்தை” என்று (மக்களிடம்) கூறினாள். எனவே, மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்து அவரைக் கீழே இறங்கிவரச் செய்துவிட்டு, அவரது ஆசிரமத்தை இடித்துத் தகர்த்துவிட்டனர். அவரையும் அடிக்கலாயினர்.

அப்போது ஜுரைஜ், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார். மக்கள், “நீ இந்த விபச்சாரியுடன் உறவுகொண்டு அதன் மூலம் அவள் குழந்தை பெற்றெடுத்துவிட்டாள்” என்று கூறினர். உடனே ஜுரைஜ், “அந்தக் குழந்தை எங்கே?” என்று கேட்டார். மக்கள் அந்தக் குழந்தையைக் கொண்டுவந்தனர்.

அப்போது ஜுரைஜ், “நான் தொழுது முடிக்கும்வரை என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்று கூறிவிட்டுத் தொழுதார். தொழுகை முடிந்ததும் அந்தக் குழந்தையிடம் வந்து, அதன் வயிற்றில் (தமது விரலால்) குத்தினார். பிறகு “குழந்தாய்! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அதற்கு அக்குழந்தை, “இன்ன ஆட்டு இடையன்தான் (என் தந்தை)” என்று பேசியது.

(உண்மையை அறிந்துகொண்ட) அம் மக்கள், ஜுரைஜை முன்னோக்கிவந்து அவரை முத்தமிட்டு அவரைத் தொட்டுத் தடவினர். மேலும், “உங்களது ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித்தருகின்றோம்” என்று கூறினார்கள். அதற்கு ஜுரைஜ், “வேண்டாம்; முன்பிருந்ததைப் போன்று களிமண்ணால் கட்டித்தாருங்கள் (அதுவே போதும்)” என்று கூறிவிட்டார். அவ்வாறே மக்களும் கட்டித்தந்தனர்.

ஒரு குழந்தை, தன் தாயிடம் பாலருந்திக்கொண்டிருந்தது. அப்போது வனப்பு மிக்க ஒருவன் மிடுக்கான வாகனமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான். உடனே அக்குழந்தையின் தாய், “இறைவா!  இதோ இவனைப் போன்று என் மகனையும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தாள். அக்குழந்தை மார்பை விட்டுவிட்டு அப்பயணியைத் திரும்பிப் பார்த்து, “இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே!” என்று பேசிய பிறகு மறுபடியும் மார்புக்குச் சென்று பால் அருந்தலாயிற்று (இதுவே மழலைப் பருவத்தில் பேசிய மூன்றாவது குழந்தை).

– இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அந்தக் குழந்தை பால் குடித்ததை அறிவிக்கும் முகமாக, தமது ஆட்காட்டி விரலை வாயில் வைத்து உறிஞ்சுவதைப் போன்று சைகை செய்து காட்டியதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது –

பிறகு தாயும் மகவும் ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றனர். மக்கள் அவளை, “நீ விபச்சாரம் செய்தாய்; திருடினாய்” என்று (இடித்துக்) கூறி அடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவளோ, “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; பொறுப்பாளர்களில் அவனே நல்லவன்” என்று கூறிக்கொண்டிருந்தாள். அப்போது அக்குழந்தையின் தாய், “இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கி விடாதே” என்று கூறினாள். உடனே அக் குழந்தை பால் அருந்துவதை நிறுத்திவிட்டு அந்த அடிமைப் பெண்ணை நோக்கி(த் திரும்பி), “இறைவா! என்னை இவளைப் போன்று ஆக்குவாயாக!” என்று கூறியது.

அந்த இடத்தில் தாயும் மகவும் பேசிக் கொண்டனர். தாய் சொன்னாள்: “உன் தொண்டை அறுபடட்டும்! அழகிய தோற்றம் கொண்ட ஒருவர் கடந்து சென்றபோது நான், இறைவா! இதோ இவரைப் போன்று என் மகனை ஆக்குவாயாக! என்று கூறினேன். அப்போது நீ, ‘இறைவா! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!’ என்று கூறினாய்.

பிறகு மக்கள், ‘விபச்சாரம் செய்துவிட்டாய்; திருடிவிட்டாய்’ என்று (இடித்துக்)கூறி அடித்துக் கொண்டிருந்த இந்த அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றபோது நான், இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கிவிடாதே! என்று பிரார்த்தித்தேன். அப்போது நீ, ‘இறைவா! இவளைப் போன்று என்னை ஆக்குவாயாக!’ என்று கூறினாய். (ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டாள்.)

அதற்கு அக்குழந்தை, “(வாகனத்தில் சென்ற) அந்த மனிதன் (அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும்) கொடுங்கோலனாக இருந்தான். ஆகவே, நான் ‘இறைவா! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!’ என்று கூறினேன்.‘நீ விபச்சாரம் செய்துவிட்டாய்’ என்று கூறிக்கொண்டிருந்தனரே அப்பெண் விபச்சாரம் செய்யவில்லை. ‘நீ திருடிவிட்டாய்’ என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அவள் திருடவுமில்லை. ஆகவேதான், ‘இறைவா! அவளைப் போன்று என்னையும் (நல்ல வளாக)  ஆக்குவாயாக!’ என்று கூறினேன்’ என்று பதிலளித்தது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4605

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ :‏

كَانَ جُرَيْجٌ يَتَعَبَّدُ فِي صَوْمَعَةٍ فَجَاءَتْ أُمُّهُ ‏.‏ قَالَ حُمَيْدٌ فَوَصَفَ لَنَا أَبُو رَافِعٍ صِفَةَ أَبِي هُرَيْرَةَ لِصِفَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُمَّهُ حِينَ دَعَتْهُ كَيْفَ جَعَلَتْ كَفَّهَا فَوْقَ حَاجِبِهَا ثُمَّ رَفَعَتْ رَأْسَهَا إِلَيْهِ تَدْعُوهُ فَقَالَتْ يَا جُرَيْجُ أَنَا أُمُّكَ كَلِّمْنِي ‏.‏ فَصَادَفَتْهُ يُصَلِّي فَقَالَ اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي ‏.‏ فَاخْتَارَ صَلاَتَهُ فَرَجَعَتْ ثُمَّ عَادَتْ فِي الثَّانِيَةِ فَقَالَتْ يَا جُرَيْجُ أَنَا أُمُّكَ فَكَلِّمْنِي ‏.‏ قَالَ اللَّهُمَّ أُمِّي وَصَلاَتِي ‏.‏ فَاخْتَارَ صَلاَتَهُ فَقَالَتِ اللَّهُمَّ إِنَّ هَذَا جُرَيْجٌ وَهُوَ ابْنِي وَإِنِّي كَلَّمْتُهُ فَأَبَى أَنْ يُكَلِّمَنِي اللَّهُمَّ فَلاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ الْمُومِسَاتِ ‏.‏ قَالَ وَلَوْ دَعَتْ عَلَيْهِ أَنْ يُفْتَنَ لَفُتِنَ ‏.‏ قَالَ وَكَانَ رَاعِي ضَأْنٍ يَأْوِي إِلَى دَيْرِهِ – قَالَ – فَخَرَجَتِ امْرَأَةٌ مِنَ الْقَرْيَةِ فَوَقَعَ عَلَيْهَا الرَّاعِي فَحَمَلَتْ فَوَلَدَتْ غُلاَمًا فَقِيلَ لَهَا مَا هَذَا قَالَتْ مِنْ صَاحِبِ هَذَا الدَّيْرِ ‏.‏ قَالَ فَجَاءُوا بِفُئُوسِهِمْ وَمَسَاحِيهِمْ فَنَادَوْهُ فَصَادَفُوهُ يُصَلِّي فَلَمْ يُكَلِّمْهُمْ – قَالَ – فَأَخَذُوا يَهْدِمُونَ دَيْرَهُ فَلَمَّا رَأَى ذَلِكَ نَزَلَ إِلَيْهِمْ فَقَالُوا لَهُ سَلْ هَذِهِ – قَالَ – فَتَبَسَّمَ ثُمَّ مَسَحَ رَأْسَ الصَّبِيِّ فَقَالَ مَنْ أَبُوكَ قَالَ أَبِي رَاعِي الضَّأْنِ ‏.‏ فَلَمَّا سَمِعُوا ذَلِكَ مِنْهُ قَالُوا نَبْنِي مَا هَدَمْنَا مِنْ دَيْرِكَ بِالذَّهَبِ وَالْفِضَّةِ ‏.‏ قَالَ لاَ وَلَكِنْ أَعِيدُوهُ تُرَابًا كَمَا كَانَ ثُمَّ عَلاَهُ

ஜுரைஜ் எனும் ((பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த நல்லவர்) ஒருவர் தமது ஆசிரமத்தில் (இறைவனை) வழிபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அவருடைய தாயார் வந்(து அவரை அழைத்)தார்.

ஜுரைஜை அவருடைய தாயார் அழைத்த முறையையும், அப்போது அவர் தமது புருவத்துக்கு மேலே கையை எப்படி வைத்திருந்தார்; பிறகு ஜுரைஜை நோக்கித் தமது தலையை உயர்த்தி எப்படி அழைத்தார் என்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சைகை செய்துகாட்டினார்கள். ((இதை இறுதியாக அறிவிக்கும் ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்), “இதை அறிவிக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சைகை செய்துகாட்டியது போன்றே அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) சைகை செய்துகாட்டினார்கள். அறிவிப்பாளர் அபூ ராஃபிஉ (ரஹ்) அவர்களும் அவ்வாறே சைகை செய்துகாட்டினார்கள்”  எனக் குறிப்பிடுகின்றார்)).

ஜுரைஜின் தாயார், “ஜுரைஜே! நான் உன்னுடைய தாய் (அழைக்கின்றேன்); என்னிடம் பேசு” என்று கூறினார். அப்போது ஜுரைஜ் தொழுதுகொண்டிருப்பதைத் தாயார் கண்டார். உடனே ஜுரைஜ், “இறைவா! என் தாயா? எனது தொழுகையா? (எதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்?)” என்று (தனக்குள்) கேட்டுவிட்டு, தொழுகையையே தேர்ந்தெடுத்தார். உடனே அவருடைய தாயார் திரும்பிச் சென்றுவிட்டார். பிறகு மறுபடியும் அவரை அழைத்தார். “ஜுரைஜே! நான் உன் தாய் (அழைக்கின்றேன்); என்னிடம் பேசு” என்று கூறினார். அப்போது(ம் தொழுதுகொண்டிருந்த) ஜுரைஜ், “இறைவா! என் தாயா? எனது தொழுகையா?” என்று (தனக்குள்) கேட்டுவிட்டு, மீண்டும் தொழுகையையே தேர்ந்தெடுத்தார்.

அப்போது அவருடைய தாயார், “இறைவா! இதோ என் மகன் ஜுரைஜிடம் நான் பேசினேன். அவன் என்னிடம் பேச மறுத்துவிட்டான். இறைவா! விபச்சாரிகளை அவனுக்குக்  காட்டாமல் அவனுக்கு நீ மரணத்தைத் தந்துவிடாதே” என்று பிரார்த்தித்தார்.

ஜுரைஜுக்கெதிராக அவருடைய தாயார், தன் மகன் வேறு சோதனைக்குள்ளாக்கப் படவேண்டும் என்று பிரார்த்திருந்தால், அவ்வாறே அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டிருப்பார். (ஆனால், விபசாரிகளைக் கண்ணில் படவைக்கும் குறைந்தபட்ச சோதனையையே அவருடைய தாயார் வேண்டினார்).

ஆடு மேய்க்கும் இடையன் ஒருவன் ஜுரைஜின் ஆசிரமத்துக்கு வருவது வழக்கம். (இந்நிலையில் ஒரு நாள்) அந்தக் கிராமத்திலிருந்து (விபச்சாரியான) பெண்ணொருத்தி வந்தாள். அவளுடன் அந்த இடையன் விபச்சாரத்தில் ஈடுபட்டான். பிறகு அவள் கர்ப்பமுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அவளிடம் “இது எவரால் பிறந்த குழந்தை?” என்று கேட்கப்பட்டது. “இதோ இந்த ஆசிரமத்தில் இருப்பவரால்தான்” என்று அவள் கூறினாள்.

உடனே மக்கள் (வெகுண்டெழுந்து) கோடரிகளையும் மண்வெட்டிகளையும் எடுத்துக்கொண்டு வந்து ஜுரைஜை அழைத்தனர். அப்போது அவர் தொழுதுகொண்டிருந்ததால் அவர்களிடம் அவர் பேசவில்லை. உடனே (கோபம் கொண்ட) அம்மக்கள் அவருடைய ஆசிரமத்தைத் தகர்க்கலாயினர்.

இதைக் கண்ட ஜுரைஜ் (தம் ஆசிரமத்திலிருந்து) இறங்கி வந்தார். மக்கள், “இதோ இவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கேள்” என்று கூறினர். ஜுரைஜ் புன்னகைத்துவிட்டு, அந்த (விபச்சாரியின்) குழந்தையின் தலையை தடவிக் கொடுத்தார்.

பிறகு “உன் தந்தை யார்?” என்று கேட்டார். (பேசும் வயதை அடையாதிருந்த) அக்குழந்தை, “(இன்ன) ஆட்டிடையன்தான் என் தந்தை” என்று கூறியது.

இதை அக்குழந்தையிடமிருந்து செவியுற்ற அம்மக்கள், (தமது தவறை உணர்ந்து) “நாங்கள் இடித்துத் தகர்த்த உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தாலும் வெள்ளியாலும் கட்டித்தருகின்றோம்” என்று (ஜுரைஜிடம்) கூறினர். அதற்கு ஜுரைஜ், “வேண்டாம்; முன்பிருந்ததைப் போன்று மீண்டும் மண்ணால் கட்டித்தாருங்கள் (அதுவே போதும்)” என்று கூறிவிட்டு, மேலே ஏறிச் சென்றுவிட்டார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4604

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، – يَعْنِي ابْنَ سَعِيدٍ الْقَطَّانَ – عَنْ سُفْيَانَ، وَشُعْبَةَ قَالاَ حَدَّثَنَا حَبِيبٌ، عَنْ أَبِي الْعَبَّاسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْتَأْذِنُهُ فِي الْجِهَادِ فَقَالَ ‏”‏ أَحَىٌّ وَالِدَاكَ ‏”‏ ‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ فَفِيهِمَا فَجَاهِدْ ‏”‏


حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبٍ، سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ بِمِثْلِهِ ‏.‏ قَالَ مُسْلِمٌ أَبُو الْعَبَّاسِ اسْمُهُ السَّائِبُ بْنُ فَرُّوخَ الْمَكِّيُّ ‏

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي إِسْحَاقَ، ح وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ عَنْ زَائِدَةَ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، جَمِيعًا عَنْ حَبِيبٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ نَاعِمًا، مَوْلَى أُمِّ سَلَمَةَ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ أَقْبَلَ رَجُلٌ إِلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ أَبْتَغِي الأَجْرَ مِنَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”‏ فَهَلْ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَىٌّ ‏”‏ ‏.‏ قَالَ نَعَمْ بَلْ كِلاَهُمَا ‏.‏ قَالَ ‏”‏ فَتَبْتَغِي الأَجْرَ مِنَ اللَّهِ ‏”‏ ‏.‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ ‏”‏ فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا ‏”‏

அறப்போரில் கலந்துகொள்ள அனுமதி கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்தார். நபி (ஸல்), “உன் தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்“ என்று கூறினார். “அவ்வாறாயின் (திரும்பிச் சென்று) அவ்விருவருக்காகவும் பாடுபடு” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)


குறிப்புகள் :

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், ஒருவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து, “நான் அல்லாஹ்விடமிருந்து நற்பலனை எதிர்பார்த்துப் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) செல்வதற்கும் அறப்போர் புரிவதற்கும் உங்களிடம் உறுதிமொழி அளிக்கின்றேன்” என்று கூறினார். நபி (ஸல்), “இப்போது உன் தாய் தந்தையரில் யாரேனும் உயிருடன் இருக்கின்றனரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இருவருமே உயிருடன் இருக்கின்றனர்” என்று பதிலளித்தார்.

நபி (ஸல்), “நீ அல்லாஹ்விடமிருந்து நற்பலனை எதிர்பார்க்கிறாய் (அல்லவா)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்“ என்றார். நபி (ஸல்), “அவ்வாறாயின், நீ திரும்பிச் சென்று அவர்கள் இருவரிடமும் அழகிய முறையில் உறவாடு” என்று சொன்னார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4603

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ الصُّحْبَةِ قَالَ ‏ “‏ أُمُّكَ ثُمَّ أُمُّكَ ثُمَّ أُمُّكَ ثُمَّ أَبُوكَ ثُمَّ أَدْنَاكَ أَدْنَاكَ ‏”‏ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عُمَارَةَ، وَابْنِ شُبْرُمَةَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ جَرِيرٍ وَزَادَ فَقَالَ ‏ “‏ نَعَمْ وَأَبِيكَ لَتُنَبَّأَنَّ ‏”‏ ‏

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، ح وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ خِرَاشٍ حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا وُهَيْبٌ، كِلاَهُمَا عَنِ ابْنِ شُبْرُمَةَ، بِهَذَا الإِسْنَادِ فِي حَدِيثِ وُهَيْبٍ مَنْ أَبَرُّ وَفِي حَدِيثِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ أَىُّ النَّاسِ أَحَقُّ مِنِّي بِحُسْنِ الصُّحْبَةِ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ جَرِيرٍ

ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மனிதர்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்), “உன் தாய், பிறகு உன் தாய், பிறகு உன் தாய். பிறகு உன் தந்தை. பிறகு உனக்கு மிகவும் நெருக்கமானவர். (அடுத்து) உனக்கு மிகவும் நெருக்கமானவர்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

ஷரீக் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் …” என்று ஆரம்பமாகிறது.

மேலும், “ஆம்; உன் தந்தையின் மீது அறுதி(யிட்டுச் சொல்கிறேன்). உமக்கு (தக்க) பதில் கிடைக்கும்” என்று (கூறிவிட்டுப் பதில்) சொன்னார்கள்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

உஹைப் பின் காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “நன்மை செய்வ தற்கு மிகவும் தகுதியானவர் யார்?” என்று அவர் கேட்டார் என்று இடம்பெற்றுள்ளது.

முஹம்மத் பின் தல்ஹா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மனிதர்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?” என்று அவர் கேட்டார் என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4602

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفٍ الثَّقَفِيُّ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي قَالَ ‏”‏ أُمُّكَ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏”‏ ثُمَّ أُمُّكَ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏”‏ ثُمَّ أُمُّكَ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏”‏ ثُمَّ أَبُوكَ ‏”‏ 


وَفِي حَدِيثِ قُتَيْبَةَ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي وَلَمْ يَذْكُرِ النَّاسَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் அழகிய தோழமை கொள்வதற்கு மனிதர்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தாய்” என்றார்கள். அவர் (நான்காவது முறை யாக), “பிறகு யார்?” என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தந்தை” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

குதைபா பின் ஸயீத் (ரஹ்) அறிவிப்பில், “மனிதர்களில் (மிகவும் தகுதியானவர் யார்?) எனும் குறிப்பு இடம்பெறவில்லை. நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?” என்றே இடம்பெற்றுள்ளது.