அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4876

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، – وَاللَّفْظُ لاِبْنِ نُمَيْرٍ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآَخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، وَعَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ :‏

لاَ أَقُولُ لَكُمْ إِلاَّ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ كَانَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لاَ يُسْتَجَابُ لَهَا ‏”‏ ‏

ஸைத் பின் அர்கம் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறிவந்ததையே நான் உங்களிடம் அறிவிக்கின்றேன்” என்று கூறிவிட்டுப் பின் வருமாறு சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:

அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ரி. அல்லாஹும்ம! ஆத்தி நஃப்ஸீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்க்ஷஉ, வ மின் நஃப்ஸின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன்)

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்)

அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4875

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى ‏”‏ ‏


وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ غَيْرَ أَنَّ ابْنَ الْمُثَنَّى، قَالَ فِي رِوَايَتِهِ ‏ “‏ وَالْعِفَّةَ ‏”‏ ‏

நபி (ஸல்) “அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுயக் கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகின்றேன்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

இப்னுல் முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், (சுயக் கட்டுப்பாடு என்பதைக் குறிக்க ‘அஃபாஃப்’ என்பதற்குப் பகரமாக) ‘அல்இஃப்பத்த’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4874

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا أَبُو قَطَنٍ، عَمْرُو بْنُ الْهَيْثَمِ الْقُطَعِيُّ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونِ عَنْ قُدَامَةَ بْنِ مُوسَى، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ ‏”‏

“அல்லாஹும்ம! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ.வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ.வஜ்அலில் ஹயாத்த ஸியாதத்தன் லீ ஃபீ குல்லி கைர்.வஜ்அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்லி ஷர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்

(பொருள்: இறைவா! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் திரும்பி வரவுள்ள மறுமையை எனக்குச் சீர்படுத்துவாயாக! வாழ்க்கையை, எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்வதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக! மரணத்தை, எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4873

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ عَنْ أَبِيهِ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَدْعُو بِهَذَا الدُّعَاءِ ‏ “‏ اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللَّهُمَّ اغْفِرْ لِي جِدِّي وَهَزْلِي وَخَطَئِي وَعَمْدِي وَكُلُّ ذَلِكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ ‏”‏ ‏


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الصَّبَّاحِ الْمِسْمَعِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، فِي هَذَا الإِسْنَادِ

“அல்லாஹும் மஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ  ஃபீ அம்ரீ, வ மா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அல்லாஹும்மஃக்ஃபிர்லீ ஜித்தீ, வ ஹஸ்லீ வ கத்தஈ வ அம்தீ, வ குல்லு தாலிக்க இன்தீ. அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வ மா அஉலன்த்து. வ மா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அன்த்தல் முகத்திமு வ அன்த்தல் முஅக்கிரு. வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்” என்று நபி (ஸல்)  பிரார்த்திப்பது வழக்கம்.

(பொருள்: இறைவா! என் குற்றத்தையும் அறியாமையையும் என் செயலில் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னிப்பாயாக. மேலும், என்னைவிட நீ அறிந்துள்ளவற்றையும் மன்னிப்பாயாக! இறைவா! நான் வினையாகச் செய்ததையும் விளையாட்டாகச் செய்ததையும் தவறுதலாகச் செய்ததையும் வேண்டுமென்றே செய்ததையும் மன்னிப்பாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்பு செய்ததையும் பின்பு செய்ததையும் இரகசியமாகச் செய்ததையும் பகிரங்கமாகச் செய்ததையும் என்னைவிட நீ அறிந்துள்ளவற்றையும் மன்னிப்பாயாக! நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். நீயே பின்னடைவு ஏற்படுத்துபவன். நீ அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்).

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4872

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا كَانَ فِي سَفَرٍ وَأَسْحَرَ يَقُولُ ‏ “‏ سَمَّعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ وَحُسْنِ بَلاَئِهِ عَلَيْنَا رَبَّنَا صَاحِبْنَا وَأَفْضِلْ عَلَيْنَا عَائِذًا بِاللَّهِ مِنَ النَّارِ ‏”‏

நபி (ஸல்) பயணத்தின்போது, அதிகாலை முன்நேரத்தை அடைந்தால், “ஸமிஅ ஸாமிஉன் பி ஹம்தில்லாஹி வ ஹுஸ்னி பலாயிஹி அலைனா. ரப்பனா ஸாஹிப்னா. வ அஃப்ளில் அலைனா. ஆயிதம் பில்லாஹி மினந் நார்” என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: அல்லாஹ் நமக்கு அருளிய நல்லுபகாரத்திற்காக அவனை நாம் போற்றிப் புகழ்வதைக் கேட்பவர் கேட்டுவிட்டார். எங்கள் இரட்சகா! எங்களுடன் வருவாயாக! எங்கள்மீது கருணை பொழிவாயாக! நரக நெருப்பிலிருந்து காப்பாயாக!).

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4871

حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، حَدَّثَنِي ابْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِي أَنْتَ الْحَىُّ الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹும்ம! லக்க அஸ்லம்த்து, வ பிக்க ஆமன்த்து, வ அலைக்க தவக்கல்த்து, வ இலைக்க அனப்த்து, வ பிக்க காஸம்த்து. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி இஸ்ஸத்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த, அன் துளில்லனீ, அன்த்தல் ஹய்யுல்லதீ லா யமூத்து, வல்ஜின்னு வல்இன்ஸு யமூத்தூன்” என்று பிரார்த்தித்துவந்தார்கள்.

((பொருள்: இறைவா! உனக்கே அடிபணிந்தேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகின்றேன். உன் உதவியாலேயே (எதிரிகளிடம்) வழக்காடுவேன். இறைவா! நான் வழிதவறாமலிருக்க உனது வல்லமையின் மூலம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; ஆனால் நீ இறக்காமல் நிலைத்திருப்பவன்)).

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4870

وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ عَبْدَةَ بْنِ أَبِي لُبَابَةَ، عَنْ هِلاَلِ بْنِ يَسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، عَنْ عَائِشَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي دُعَائِهِ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَشَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏”‏

நபி (ஸல்), தமது பிரார்த்தனையில் “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து வ ஷர்ரி மா லம் அஃமல்” என்று கூறுவார்கள்.

(பொருள்: இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும், நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்)

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4869

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالاَ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ الأَشْجَعِيِّ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ :‏

عَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهِ اللَّهَ قَالَتْ كَانَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏”‏ ‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلاَلٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ دُعَاءٍ، كَانَ يَدْعُو بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ وَشَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏”‏

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ حَدَّثَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، عَنْ حُصَيْنٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ “‏ وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் வேண்டிவந்த பிரார்த்தனைகள் குறித்து நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ஆயிஷா (ரலி), “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து, வ மின் ஷர்ரி மா லம் அஃமல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்திப்பார்கள்” எனப் பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்).

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஃபர்வா பின் நவ்ஃபல் அல்அஷ்ஜஈ (ரஹ்)


குறிப்புகள் :

அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அல்லாஹ்விடம் வேண்டிய பிரார்த்தனை குறித்து நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து. வ ஷர்ரி மா லம் அஃமல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்திப்பார்கள் என்று கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “வ ஷர்ரி மா லம் அஃமல்” என்பதற்குப் பகரமாக “வ மின் ஷர்ரி மா லம் அஃமல்” என்று (மின் எனும்) ஒரு சொல் கூடுதலோடு இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 48, பாடம்: 17, ஹதீஸ் எண்: 4868

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ ‏ “‏ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا فَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُئْوِيَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) படுக்கைக்குச் செல்லும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ ஸகானா வ கஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு, வலா முஃவிய” என்று கூறுவார்கள்.

(பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; தன்னிறைவளிப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றபோது (நமக்கு உறைவிடம் கொடுத்துத்) தஞ்சமளித்தான். (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்).

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 48, பாடம்: 17, ஹதீஸ் எண்: 4867

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَأْخُذْ دَاخِلَةَ إِزَارِهِ فَلْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ وَلْيُسَمِّ اللَّهَ فَإِنَّهُ لاَ يَعْلَمُ مَا خَلَفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ فَإِذَا أَرَادَ أَنْ يَضْطَجِعَ فَلْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الأَيْمَنِ وَلْيَقُلْ سُبْحَانَكَ اللَّهُمَّ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ ‏”‏


وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ ‏ “‏ ثُمَّ لْيَقُلْ بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي فَإِنْ أَحْيَيْتَ نَفْسِي فَارْحَمْهَا ‏”‏ ‏

“நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷ ஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, ‘ஸுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ பிக்க வளஅத்து ஜன்பீ, வ பிக்க அர்ஃபஉஹு, இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபக்ஃபிர் லஹா. வ இன் அர்ஸல்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா பி மா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்’ என்று பிரார்த்தியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

(பொருள்: இறைவா! நீ தூய்மையானவன். என் இரட்சகா! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக! அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!).

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஸுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ!” என்பதற்குப் பகரமாக, பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ (என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை தரையில் வைத்தேன்)” என்றும், “ஃப இன் அம்சக்த்த நஃப்ஸீ ஃபக்ஃபிர்லஹா” என்பதற்குப் பகரமாக, “ஃப இன் அஹ்யய்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா” என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக!)