حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، – وَاللَّفْظُ لَهُ – قَالَ قُلْتُ لِمَالِكٍ حَدَّثَكَ دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنْ أَبِي سُفْيَانَ، – مَوْلَى ابْنِ أَبِي أَحْمَدَ عَنْ أَبِي هُرَيْرَة
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ أَوْ فِي خَمْسَةِ
يَشُكُّ دَاوُدُ قَالَ خَمْسَةٌ أَوْ دُونَ خَمْسَةٍ – قَالَ نَعَمْ
‘அராயா’ வணிகத்தில், (பேரீச்ச மரத்தில் உள்ள) செங்கனிகளை, உலர்ந்த பேரீச்சங் கனிகளுக்குப் பதிலாக ஐந்து வஸ்குகளுக்காகவோ ஐந்து வஸ்குகளுக்கும் குறைவாகவோ விற்பனை செய்துகொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக யஹ்யா பின் யஹ்யா (ரஹ்)
குறிப்பு :
மேற்கானும் ஹதீஸை, மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், ‘இப்னு அபீஅஹ்மத் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) உங்களுக்கு அறிவித்தார்களா?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள் என யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) கூறுகின்றார்.
“ஐந்து வஸ்குகளுக்கோ ஐந்து வஸ்குகளுக்குக் குறைவாகவோ…’’ என அறிவிப்பாளர் தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) ஐயப்பாட்டுடன் அறிவிக்கின்றார்.
முகத்தல் அளவை பற்றிய தோராயக் குறிப்புகள்:
1 முத் = 544 கிராம்
1 ஸாஉ = 4 முத்கள் * 544 = 2176 கிராம்
1 வஸக் = 60 ஸாஉகள் * 2176 = 130560 கிராம் (அ) 130கி. 560 கிராம்.