அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2855

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏وَلَا يُبَاعُ إِلَّا بِالدِّينَارِ وَالدِّرْهَمِ إِلَّا ‏ ‏الْعَرَايَا ‏


و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏وَأَبِي الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُمَا سَمِعَا ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’ மற்றும் ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், மரத்திலுள்ள செங்காய்களை விற்பதையும் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள) செங்கனிகளை தீனாருக்கும் திர்ஹத்திற்கும் விற்கலாம்; வேறு வகை விற்பனைக்கு அனுமதியில்லை – ‘அராயா’வில் தவிர (என்றும் உத்தரவிட்டார்கள்).

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்புகள் :

முஹாகலா = அறுவடை செய்த தானியத்திற்கு பதிலாக, கதிரில் உள்ள தானியத்தை விற்பது.

முஸாபனா = பேரீச்ச மரத்தில் உள்ள செங்கனிகளை, மரத்திலிருந்து பறிக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சங்கனிகளுக்குப் பதிலாக விற்பது/பண்டமாற்றிக் கொள்வது

முகாபரா = விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயிடம் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தை குத்தகைக்கு விடுவது.

அராயா = ஹதீஸ் 2835இன் அடிக்குறிப்பில் காண்க.

Share this Hadith: