அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2856

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَخْلَدُ بْنُ يَزِيدَ الْجَزَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُخَابَرَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُطْعِمَ وَلَا تُبَاعُ إِلَّا بِالدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ إِلَّا ‏ ‏الْعَرَايَا ‏


قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏فَسَّرَ لَنَا ‏ ‏جَابِرٌ ‏ ‏قَالَ ‏ ‏أَمَّا الْمُخَابَرَةُ فَالْأَرْضُ الْبَيْضَاءُ يَدْفَعُهَا الرَّجُلُ إِلَى الرَّجُلِ فَيُنْفِقُ فِيهَا ثُمَّ يَأْخُذُ مِنْ الثَّمَرِ وَزَعَمَ أَنَّ الْمُزَابَنَةَ بَيْعُ الرُّطَبِ فِي النَّخْلِ بِالتَّمْرِ كَيْلًا وَالْمُحَاقَلَةُ فِي الزَّرْعِ عَلَى نَحْوِ ذَلِكَ يَبِيعُ الزَّرْعَ الْقَائِمَ بِالْحَبِّ كَيْلًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முகாபரா’, ‘முஹாகலா’, ‘முஸாபனா’ ஆகிய வியாபாரங்களையும், உண்ணும் பக்குவத்தை அடையாத (மரத்திலுள்ள) செங்காய்களை விற்பதையும் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள) செங்கனிகளை தீனாருக்கும் திர்ஹத்திற்கும் விற்கலாம்; வேறு வகை விற்பனைக்கு அனுமதியில்லை – ‘அராயா’வில் தவிர (என்றும் உத்தரவிட்டார்கள்).

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

“முகாபரா என்பது, ஒருவர் தரிசு நிலத்தை மற்றொருவருக்குக் கொடுக்க, அவர் செலவு செய்து (மரம் நட்டு) அதன் கனிகளில் சிலவற்றை இவர் எடுத்துக்கொள்வதாகும்;

முஸாபனா என்பது, மரத்தில் உள்ள செங்காயை, அளக்கப்பெற்ற உலர்ந்த பேரீச்சங் கனிகளுக்குப் பதிலாக விற்பதாகும்;

வேளாண்மையில் முஹாகலா என்பது, ‘முஸாபனா’வைப் போன்றதாகும்; பயிரில் நிற்கும் தானியக் கதிர்களை, அளக்கப்பெற்ற தானியங்களுக்குப் பதிலாக விற்பதாகும்” என்று ஜாபிர் (ரலி) எங்களிடம் விளக்கமளித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அதா உ(ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: