அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2860

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَبَاحُ بْنُ أَبِي مَعْرُوفٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ وَعَنْ بَيْعِهَا السِّنِينَ وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தரிசு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கும், பல்லாண்டு விளைச்சலை முன்கூட்டியே விற்பதற்கும் (முஆவமா), மரத்திலுள்ள கனிகள் (கனிந்து) நல்ல நிலையை அடைவதற்கு முன் விற்பதற்கும் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2859

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏وَسَعِيدِ بْنِ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُعَاوَمَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏قَالَ أَحَدُهُمَا بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ وَعَنْ ‏ ‏الثُّنْيَا ‏ ‏وَرَخَّصَ فِي ‏ ‏الْعَرَايَا ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ لَا يَذْكُرُ بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’, ‘முஆவமா’, ‘முகாபரா’ ஆகியவற்றையும், ‘ஒரு பகுதியைத் தவிர’ என்று கூறி விற்பதையும் தடை செய்தார்கள். ‘அராயா’வில் மட்டும் (இவற்றுக்கு) அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் அபுஸ் ஸுபைர் (ரஹ்), ஸயீத் பின் மீனா ஆகிய இருவரில் ஒருவர் ‘ ‘முஆவமா’ என்பது, பழங்களின் பல்லாண்டு விளைச்சலை முன்கூட்டியே விற்பதாகும்’ என்று கூறினார்.

இஸ்மாயீல் பின் உலையா (ரஹ்) வழி அறிவிப்பில் ‘முஆவமா என்பது, பழங்களின் பல்லாண்டு விளைச்சலை முன்கூட்டியே விற்பதாகும்’ எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2858

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُشْقِحَ ‏


قَالَ ‏ ‏قُلْتُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏مَا تُشْقِحُ قَالَ تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஸாபனா’, ‘முஹாகலா’, ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும் கனிவதற்கு முன் (மரத்திலுள்ள செங்) கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

நான் ஸயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், ‘கனிதல்’ என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்பதற்கு ஏற்றவாறு மஞ்சளாக / சிவப்பாக மாறுவது’ என விடையளித்தார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸலீம் பின் ஹய்யான் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2857

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏زَكَرِيَّاءَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْوَلِيدِ الْمَكِّيُّ ‏ ‏وَهُوَ جَالِسٌ عِنْدَ ‏ ‏عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏وَأَنْ ‏ ‏تُشْتَرَى النَّخْلُ حَتَّى ‏ ‏تُشْقِهَ ‏
‏وَالْإِشْقَاهُ أَنْ يَحْمَرَّ أَوْ يَصْفَرَّ أَوْ يُؤْكَلَ مِنْهُ شَيْءٌ وَالْمُحَاقَلَةُ أَنْ يُبَاعَ الْحَقْلُ بِكَيْلٍ مِنْ الطَّعَامِ مَعْلُومٍ وَالْمُزَابَنَةُ أَنْ يُبَاعَ النَّخْلُ بِأَوْسَاقٍ مِنْ التَّمْرِ وَالْمُخَابَرَةُ الثُّلُثُ وَالرُّبُعُ وَأَشْبَاهُ ذَلِكَ ‏ ‏


قَالَ ‏ ‏زَيْدٌ ‏ ‏قُلْتُ ‏ ‏لِعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَذْكُرُ هَذَا عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’, ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், கனிவதற்கு முன் மரத்(திலுள்ள பழ)த்தை (உலர்ந்த பழத்திற்குப் பதிலாக) விற்பதையும் தடை செய்தார்கள். ‘கனிதல்’ என்பது, பழம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும். ‘முஹாகலா’ என்பது, (கதிரிலுள்ள) பயிர்களை அளவு அறியப்பட்ட (அறுவடை செய்யப்பட்ட) உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதாகும்.

‘முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்(திலுள்ள பழத்)தை (பறிக்கப்பட்ட) குறிப்பிட்ட அளவிலான உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். ‘முகாபரா’ என்பது, விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தை அல்லது நான்கில் ஒரு பாகத்தை அல்லது அது போன்றதை (தனக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் ஒரு நிலத்தை(க் குத்தகைக்கு)க் கொடுப்பதாகும்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘இந்த ஹதீஸை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) ‘ஆம்’ என்றார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸைத் பின் அபீ உனைஸா (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2856

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَخْلَدُ بْنُ يَزِيدَ الْجَزَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُخَابَرَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُطْعِمَ وَلَا تُبَاعُ إِلَّا بِالدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ إِلَّا ‏ ‏الْعَرَايَا ‏


قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏فَسَّرَ لَنَا ‏ ‏جَابِرٌ ‏ ‏قَالَ ‏ ‏أَمَّا الْمُخَابَرَةُ فَالْأَرْضُ الْبَيْضَاءُ يَدْفَعُهَا الرَّجُلُ إِلَى الرَّجُلِ فَيُنْفِقُ فِيهَا ثُمَّ يَأْخُذُ مِنْ الثَّمَرِ وَزَعَمَ أَنَّ الْمُزَابَنَةَ بَيْعُ الرُّطَبِ فِي النَّخْلِ بِالتَّمْرِ كَيْلًا وَالْمُحَاقَلَةُ فِي الزَّرْعِ عَلَى نَحْوِ ذَلِكَ يَبِيعُ الزَّرْعَ الْقَائِمَ بِالْحَبِّ كَيْلًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முகாபரா’, ‘முஹாகலா’, ‘முஸாபனா’ ஆகிய வியாபாரங்களையும், உண்ணும் பக்குவத்தை அடையாத (மரத்திலுள்ள) செங்காய்களை விற்பதையும் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள) செங்கனிகளை தீனாருக்கும் திர்ஹத்திற்கும் விற்கலாம்; வேறு வகை விற்பனைக்கு அனுமதியில்லை – ‘அராயா’வில் தவிர (என்றும் உத்தரவிட்டார்கள்).

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

“முகாபரா என்பது, ஒருவர் தரிசு நிலத்தை மற்றொருவருக்குக் கொடுக்க, அவர் செலவு செய்து (மரம் நட்டு) அதன் கனிகளில் சிலவற்றை இவர் எடுத்துக்கொள்வதாகும்;

முஸாபனா என்பது, மரத்தில் உள்ள செங்காயை, அளக்கப்பெற்ற உலர்ந்த பேரீச்சங் கனிகளுக்குப் பதிலாக விற்பதாகும்;

வேளாண்மையில் முஹாகலா என்பது, ‘முஸாபனா’வைப் போன்றதாகும்; பயிரில் நிற்கும் தானியக் கதிர்களை, அளக்கப்பெற்ற தானியங்களுக்குப் பதிலாக விற்பதாகும்” என்று ஜாபிர் (ரலி) எங்களிடம் விளக்கமளித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அதா உ(ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2855

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ ‏ ‏صَلَاحُهُ ‏ ‏وَلَا يُبَاعُ إِلَّا بِالدِّينَارِ وَالدِّرْهَمِ إِلَّا ‏ ‏الْعَرَايَا ‏


و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏وَأَبِي الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُمَا سَمِعَا ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’ மற்றும் ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், மரத்திலுள்ள செங்காய்களை விற்பதையும் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள) செங்கனிகளை தீனாருக்கும் திர்ஹத்திற்கும் விற்கலாம்; வேறு வகை விற்பனைக்கு அனுமதியில்லை – ‘அராயா’வில் தவிர (என்றும் உத்தரவிட்டார்கள்).

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்புகள் :

முஹாகலா = அறுவடை செய்த தானியத்திற்கு பதிலாக, கதிரில் உள்ள தானியத்தை விற்பது.

முஸாபனா = பேரீச்ச மரத்தில் உள்ள செங்கனிகளை, மரத்திலிருந்து பறிக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சங்கனிகளுக்குப் பதிலாக விற்பது/பண்டமாற்றிக் கொள்வது

முகாபரா = விளைச்சலில் குறிப்பிட்ட சதவீதத்தைத் தரவேண்டும் என்று விவசாயிடம் நிபந்தனை விதித்து, தரிசு நிலத்தை குத்தகைக்கு விடுவது.

அராயா = ஹதீஸ் 2835இன் அடிக்குறிப்பில் காண்க.