அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2859

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏وَسَعِيدِ بْنِ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُعَاوَمَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ ‏ ‏قَالَ أَحَدُهُمَا بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ وَعَنْ ‏ ‏الثُّنْيَا ‏ ‏وَرَخَّصَ فِي ‏ ‏الْعَرَايَا ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ لَا يَذْكُرُ بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹாகலா’, ‘முஸாபனா’, ‘முஆவமா’, ‘முகாபரா’ ஆகியவற்றையும், ‘ஒரு பகுதியைத் தவிர’ என்று கூறி விற்பதையும் தடை செய்தார்கள். ‘அராயா’வில் மட்டும் (இவற்றுக்கு) அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் அபுஸ் ஸுபைர் (ரஹ்), ஸயீத் பின் மீனா ஆகிய இருவரில் ஒருவர் ‘ ‘முஆவமா’ என்பது, பழங்களின் பல்லாண்டு விளைச்சலை முன்கூட்டியே விற்பதாகும்’ என்று கூறினார்.

இஸ்மாயீல் பின் உலையா (ரஹ்) வழி அறிவிப்பில் ‘முஆவமா என்பது, பழங்களின் பல்லாண்டு விளைச்சலை முன்கூட்டியே விற்பதாகும்’ எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith: