அத்தியாயம்: 22, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2906

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ النَّخْلِ حَتَّى ‏ ‏تَزْهُوَ ‏ ‏فَقُلْنَا ‏ ‏لِأَنَسٍ ‏ ‏مَا زَهْوُهَا قَالَ تَحْمَرُّ وَتَصْفَرُّ أَرَأَيْتَكَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ

அனஸ் (ரலி), “மரத்திலுள்ள பேரீச்சங் கனிகள் பக்குவம் அடையாத வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்)  தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் “பக்குவமடைதல் என்பது என்ன?” என்று கேட்டோம். “அது சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அடைவதாகும்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ், மரத்திலுள்ள கனிகளை(ப் பக்குவமடையாமல்) தடுத்துவிட்டால், நீ எப்படி உன் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும் சொல்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்)

Share this Hadith: