حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مَالِكٌ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُزْهِيَ قَالُوا وَمَا تُزْهِيَ قَالَ تَحْمَرُّ فَقَالَ إِذَا مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ فَبِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “பக்குவமடைதல் என்பது என்ன?” என்று கேட்டார்கள். “அது சிவப்பு நிறத்தை அடைவதாகும்” என்றார்கள். மேலும், “அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை(ப் பக்குவமடையாமல்) தடுத்துவிட்டால், உன் சகோதரரின் பொருள் எப்படி உனக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆகும்?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)