அத்தியாயம்: 22, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2909

‏حَدَّثَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْحَكَمِ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏وَعَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِبِشْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ عَتِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَرَ بِوَضْعِ ‏ ‏الْجَوَائِحِ ‏


قَالَ ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏وَهُوَ صَاحِبُ ‏ ‏مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏بِهَذَا

நபி (ஸல்), சேதமடைந்த பழங்களுக்கான தொகையைத் தள்ளுபடி செய்துவிடுமாறு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2908

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنْ لَمْ يُثْمِرْهَا اللَّهُ فَبِمَ يَسْتَحِلُّ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ

“அல்லாஹ் மரங்களில் கனிகளைத் தராவிட்டால், உங்களில் ஒருவர், தம் சகோதரரின் பொருளை அனுமதிக்கப்பட்டதாக எங்ஙனம் ஆக்கிக்கொள்ள முடியும்?” என நபி (ஸல்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2907

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَالِكٌ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ الطَّوِيلِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى ‏ ‏تُزْهِيَ ‏ ‏قَالُوا وَمَا تُزْهِيَ قَالَ تَحْمَرُّ فَقَالَ إِذَا مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ فَبِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “பக்குவமடைதல் என்பது என்ன?” என்று கேட்டார்கள். “அது சிவப்பு நிறத்தை அடைவதாகும்” என்றார்கள். மேலும், “அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை(ப் பக்குவமடையாமல்) தடுத்துவிட்டால், உன் சகோதரரின் பொருள் எப்படி உனக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆகும்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2906

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ النَّخْلِ حَتَّى ‏ ‏تَزْهُوَ ‏ ‏فَقُلْنَا ‏ ‏لِأَنَسٍ ‏ ‏مَا زَهْوُهَا قَالَ تَحْمَرُّ وَتَصْفَرُّ أَرَأَيْتَكَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ

அனஸ் (ரலி), “மரத்திலுள்ள பேரீச்சங் கனிகள் பக்குவம் அடையாத வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்)  தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் “பக்குவமடைதல் என்பது என்ன?” என்று கேட்டோம். “அது சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அடைவதாகும்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ், மரத்திலுள்ள கனிகளை(ப் பக்குவமடையாமல்) தடுத்துவிட்டால், நீ எப்படி உன் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும் சொல்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2905

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الزُّبَيْرِ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنْ بِعْتَ مِنْ أَخِيكَ ثَمَرًا ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو ضَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ بِعْتَ مِنْ أَخِيكَ ثَمَرًا فَأَصَابَتْهُ ‏ ‏جَائِحَةٌ ‏ ‏فَلَا يَحِلُّ لَكَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا بِمَ تَأْخُذُ مَالَ أَخِيكَ بِغَيْرِ حَقٍّ ‏


و حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“நீ உன் சகோதரரிடம் (உனது மரத்திலுள்ள) பழங்களை விற்றுவிட, (அவர் பழங்களைப் பறிப்பதற்கு முன்) அவற்றுக்குச் சேதம் ஏதும் ஏற்பட்டால், அவரிடமிருந்து (சேதமடைந்ததற்கு விலையாக) எதையும் பெறுவதற்கு உனக்கு அனுமதி இல்லை; உன் சகோதரரின் பொருளாதாரத்தை உரிமையின்றி  நீ எடுத்துக்கொள்ள முடியுமா?“  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)