حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ حُذَيْفَةَ:
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا مَاتَ فَدَخَلَ الْجَنَّةَ فَقِيلَ لَهُ مَا كُنْتَ تَعْمَلُ قَالَ فَإِمَّا ذَكَرَ وَإِمَّا ذُكِّرَ فَقَالَ إِنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ فَكُنْتُ أُنْظِرُ الْمُعْسِرَ وَأَتَجَوَّزُ فِي السِّكَّةِ أَوْ فِي النَّقْدِ فَغُفِرَ لَهُ فَقَالَ أَبُو مَسْعُودٍ وَأَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ஒருவர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம், “நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். (கடன்) பண விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்” என்று கூறினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)
குறிப்பு :
இதை ஹுதைஃபா (ரலி) அறிவித்தபோது அபூமஸ்ஊத் (ரலி) “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நானும் கேட்டுள்ளேன்” என்றார்கள்.