அத்தியாயம்: 28, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3157

وَحَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، وَرَافِعِ بْنِ خَدِيجٍ:‏

أَنَّ مُحَيِّصَةَ بْنَ مَسْعُودٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ سَهْلٍ انْطَلَقَا قِبَلَ خَيْبَرَ فَتَفَرَّقَا فِي النَّخْلِ فَقُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ فَاتَّهَمُوا الْيَهُودَ فَجَاءَ أَخُوهُ عَبْدُ الرَّحْمَنِ وَابْنَا عَمِّهِ حُوَيِّصَةُ وَمُحَيِّصَةُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَتَكَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ فِي أَمْرِ أَخِيهِ وَهُوَ أَصْغَرُ مِنْهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏”‏‏كَبِّرِ الْكُبْرَ – أَوْ قَالَ – لِيَبْدَإِ الأَكْبَرُ‏”‏‏ ‏ فَتَكَلَّمَا فِي أَمْرِ صَاحِبِهِمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏‏يُقْسِمُ خَمْسُونَ مِنْكُمْ عَلَى رَجُلٍ مِنْهُمْ فَيُدْفَعُ بِرُمَّتِهِ‏”‏‏‏ قَالُوا أَمْرٌ لَمْ نَشْهَدْهُ كَيْفَ نَحْلِفُ قَالَ ‏”‏‏فَتُبْرِئُكُمْ يَهُودُ بِأَيْمَانِ خَمْسِينَ مِنْهُمْ‏”‏‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَوْمٌ كُفَّارٌ قَالَ فَوَدَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ قِبَلِهِ


قَالَ سَهْلٌ فَدَخَلْتُ مِرْبَدًا لَهُمْ يَوْمًا فَرَكَضَتْنِي نَاقَةٌ مِنْ تِلْكَ الإِبِلِ رَكْضَةً بِرِجْلِهَا ‏.‏ قَالَ حَمَّادٌ هَذَا أَوْ نَحْوَهُ ‏

‏وَحَدَّثَنَا الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ نَحْوَهُ ‏.‏ وَقَالَ فِي حَدِيثِهِ فَعَقَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عِنْدِهِ ‏.‏ وَلَمْ يَقُلْ فِي حَدِيثِهِ فَرَكَضَتْنِي نَاقَةٌ ‏.‏

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، – يَعْنِي الثَّقَفِيَّ – جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ بِنَحْوِ حَدِيثِهِمْ ‏.‏

முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் கைபருக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு பேரீச்சந் தோட்டப் பகுதியில் பிரிந்துவிட்டனர். அப்போது அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) கொல்லப்பட்டார்கள். யூதர்கள்மீது சந்தேகம் ஏற்பட்டது.

ஆகவே, அப்துல்லாஹ் பின் ஸஹ்லு (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களும் அவருடைய தந்தையின் சகோதரரின் மக்களான ஹுவய்யிஸா (ரலி) மற்றும் முஹய்யிஸா (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தம் சகோதரர் (கொலை) தொடர்பாக அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) (நபியவர்களிடம்) பேசினார்கள். அம்மூவரில் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) “பெரியவர்களைப் பேசவிடு / வயதில் பெரியவர் முதலில் பேசட்டும்” என்று கூறினார்கள்.

அவர்கள் இருவரும் (கொல்லப்பட்ட) தம் உறவினர் தொடர்பாகப் பேசியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் ஐம்பது பேர் கொலை செய்த யூதருக்கெதிராகச் சத்தியம் செய்ய வேண்டும். அதையடுத்துக் கொலையாளியின் கழுத்தில் கயிற்றை மாட்டி அவன் (உங்களிடம்) ஒப்படைக்கப்படுவான்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், “நிகழ்வு நடந்த இடத்தில் இல்லாத நாங்கள் எப்படிச் சத்தியம் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “அப்படியென்றால், யூதர்களில் ஐம்பது பேர் சத்தியம் செய்து, தாம் நிரபராதிகள் என்பதை உங்களிடம் நிரூபிக்கட்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நிராகரிக்கும் சமுதாயத்தார் ஆயிற்றே? (அவர்களுடைய சத்தியங்களை நாம் எப்படி ஏற்க முடியும்?)” என்று கேட்டார்கள். ஆகவே, நபி (ஸல்), தாமே அப்துல்லாஹ் பின் ஸஹ்லு அவர்களின் கொலைக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்.

அறிவிப்பாளர்கள் : ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) மற்றும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்புகள்

“பிற்பாடு ஒரு நாள் நான் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்லு (ரலி) அவர்களது ஒட்டகத் தொழுவத்திற்குச் சென்றேன். (நபி (ஸல்) பழியீட்டுத் தொகைக்காக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்று தனது காலால் என்னை உதைத்துவிட்டது” என்று ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி) கூறினார்கள்.

“இவ்வாறு அல்லது இதைப் போன்று ஸஹ்லு (ரலி) கூறினார்கள்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) கூறுகின்றார்.

அல்கவாரீரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே கொல்லப்பட்டவருக்கான பழியீட்டுத் தொகையை வழங்கினார்கள்” என இடம்பெற்றுள்ளது. “ஒட்டகம் என்னை உதைத்துவிட்டது” எனும் குறிப்பு அதில் இல்லை.

Share this Hadith: