அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 468

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏إِسْحَقُ بْنُ أَبِي طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏جَاءَتْ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏وَهِيَ جَدَّةُ ‏ ‏إِسْحَقَ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ لَهُ ‏ ‏وَعَائِشَةُ ‏ ‏عِنْدَهُ يَا رَسُولَ اللَّهِ الْمَرْأَةُ ‏ ‏تَرَى مَا يَرَى الرَّجُلُ فِي الْمَنَامِ فَتَرَى مِنْ نَفْسِهَا مَا يَرَى الرَّجُلُ مِنْ نَفْسِهِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏يَا ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏فَضَحْتِ النِّسَاءَ تَرِبَتْ يَمِينُكِ فَقَالَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏بَلْ أَنْتِ فَتَرِبَتْ يَمِينُكِ نَعَمْ فَلْتَغْتَسِلْ يَا ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏إِذَا رَأَتْ ذَاكِ ‏

இஸ்ஹாக் பின் அபூதல்ஹா (ரஹ்) அவர்களின் பாட்டியான உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஆண்கள் உறக்கத்தில் காண்பதைப் போன்று பெண்ணும் (கனவு) கண்டு, ஆண்கள் தம் (உடை)மீது காண்பதைப் போன்றே தன் (உடை)மீது காணும் பெண்ணுக்குக் குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், “உம்மு ஸுலைம்! உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும்! (கொஞ்சங்கூட வெட்கமின்றிக் கேட்டு) பெண்ணினத்தைக் கேவலப்படுத்தி விட்டாயே!” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “இல்லை; உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்; (அறிவு தேடுவதற்கு வெட்கப்படக் கூறி, பெண்ணினத்தைக் கேவலப்படுத்தியது) நீதான்” என்று கூறி விட்டு, உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம், “ஆம்! அவ்வாறு காணும் பெண், குளித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).

Share this Hadith:

Leave a Comment