அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 472

حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ ‏ ‏وَسَهْلُ بْنُ عُثْمَانَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَ ‏ ‏سَهْلٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ شَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُسَافِعِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏
‏أَنَّ امْرَأَةً قَالَتْ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ تَغْتَسِلُ الْمَرْأَةُ إِذَا احْتَلَمَتْ وَأَبْصَرَتْ الْمَاءَ فَقَالَ نَعَمْ فَقَالَتْ لَهَا ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَرِبَتْ يَدَاكِ ‏ ‏وَأُلَّتْ ‏ ‏قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏دَعِيهَا وَهَلْ يَكُونُ الشَّبَهُ إِلَّا مِنْ قِبَلِ ذَلِكِ إِذَا عَلَا مَاؤُهَا مَاءَ الرَّجُلِ أَشْبَهَ الْوَلَدُ أَخْوَالَهُ وَإِذَا عَلَا مَاءُ الرَّجُلِ مَاءَهَا أَشْبَهَ أَعْمَامَهُ ‏

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டு, தன்மீது அவள் (மதன) நீரைக் கண்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அப்போது நான் அந்தப் பெண்ணிடம், “உன் கைகள் மண்ணைக் கவ்வட்டும்; காயமடையட்டும்” என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டு விடு! அதனால்தான் (தாயுக்கும் சேயுக்குமிடையே) சாயல் உண்டாகிறது. பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) மிகைத்து (முந்தி) விட்டால் குழந்தை, தன் தாயின் சகோதரர்களது (மாமன்) சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரை மிகைத்து விட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது (பெரியப்பன், சிற்றப்பன்) சாயலில் பிறக்கிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 471

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏قَالَتْ ‏
‏جَاءَتْ ‏ ‏أَمُّ سُلَيْمٍ ‏ ‏إِلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا ‏ ‏يَسْتَحْيِي مِنْ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ إِذَا رَأَتْ الْمَاءَ فَقَالَتْ ‏ ‏أُمُّ سَلَمَةَ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ تَرِبَتْ يَدَاكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَ مَعْنَاهُ وَزَادَ قَالَتْ قُلْتُ فَضَحْتِ النِّسَاءَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّهُ قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏ ‏أَنَّ ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏أُمَّ بَنِي ‏ ‏أَبِي طَلْحَةَ ‏ ‏دَخَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏هِشَامٍ ‏ ‏غَيْرَ أَنَّ فِيهِ قَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ لَهَا أُفٍّ لَكِ أَتَرَى الْمَرْأَةُ ذَلِكِ ‏

உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உண்மையை எடுத்துக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; அவள் (மதன) நீரைக் கண்டால் (அவள் மீது குளிப்பு, கடமைதான்)” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உனது கை மண்ணைக் கவ்வட்டும். பிறகு எப்படி அவளது சாயலில் குழந்தை பிறக்கிறது?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு சலமா (ரலி)

குறிப்பு:

இந்த ஹதீஸின் ஹிஷாம் பின் உர்வா (ரலி) அவர்கள் வழி அறிவிப்பில், “(வெட்கமின்றி இதை வெளிப்படுத்தி) பெண்ணினத்தையே நீ கேவலப்படுத்தி விட்டாய்” என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் உம்மு ஸுலைம்(ரலி) அவர்களிடம் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

உர்வா பின் அல்-ஸுபைர் (ரலி) வழி அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள், “சீச்சீ! பெண்ணும் அதைக் காண்பாளா?” என்று உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் கேட்டதாக அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 470

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏صَالِحُ بْنُ عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مَالِكٍ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏سَأَلَتْ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْمَرْأَةِ ‏ ‏تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فِي مَنَامِهِ فَقَالَ ‏ ‏إِذَا كَانَ مِنْهَا مَا يَكُونُ مِنْ الرَّجُلِ فَلْتَغْتَسِلْ ‏

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “ஆண் உறக்கத்தில் காண்பதைப் போல் கண்ட பெண் (செய்ய வேண்டியதைப்) பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், “ஆணுக்கு ஏற்படுவதைப் போன்று பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவள் குளிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக்(ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 469

حَدَّثَنَا ‏ ‏عَبَّاسُ بْنُ الْوَلِيدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏حَدَّثَهُمْ أَنَّ ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏حَدَّثَتْ ‏
‏أَنَّهَا سَأَلَتْ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْمَرْأَةِ ‏ ‏تَرَى فِي مَنَامِهَا مَا يَرَى الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا رَأَتْ ذَلِكِ الْمَرْأَةُ فَلْتَغْتَسِلْ فَقَالَتْ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏وَاسْتَحْيَيْتُ مِنْ ذَلِكَ قَالَتْ وَهَلْ يَكُونُ هَذَا فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ فَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ إِنَّ مَاءَ الرَّجُلِ غَلِيظٌ أَبْيَضُ وَمَاءَ الْمَرْأَةِ رَقِيقٌ أَصْفَرُ فَمِنْ أَيِّهِمَا عَلَا أَوْ سَبَقَ يَكُونُ مِنْهُ الشَّبَهُ ‏

நான் நபி (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண், தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்(ணின் மீது குளியல் கடமையாகுமா? என்பது) பற்றி கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறு அவள் கண்டால் அவள் குளித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள். (அவ்வாறு கேட்டு) அதற்காக நான் வெட்கப்பட்டேன். மேலும், “இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்கலிதம்) ஏற்படுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது? ஆணின் நீர்(விந்து) வெள்ளை நிறமானதும் கெட்டியானதுமாகும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் மிகைத்து விடுவது அல்லது முந்தி விடுவதன் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது” என்று விளக்கினார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஸுலைம் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 07, ஹதீஸ் எண்: 468

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏إِسْحَقُ بْنُ أَبِي طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ ‏
‏جَاءَتْ ‏ ‏أُمُّ سُلَيْمٍ ‏ ‏وَهِيَ جَدَّةُ ‏ ‏إِسْحَقَ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَتْ لَهُ ‏ ‏وَعَائِشَةُ ‏ ‏عِنْدَهُ يَا رَسُولَ اللَّهِ الْمَرْأَةُ ‏ ‏تَرَى مَا يَرَى الرَّجُلُ فِي الْمَنَامِ فَتَرَى مِنْ نَفْسِهَا مَا يَرَى الرَّجُلُ مِنْ نَفْسِهِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏يَا ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏فَضَحْتِ النِّسَاءَ تَرِبَتْ يَمِينُكِ فَقَالَ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏بَلْ أَنْتِ فَتَرِبَتْ يَمِينُكِ نَعَمْ فَلْتَغْتَسِلْ يَا ‏ ‏أُمَّ سُلَيْمٍ ‏ ‏إِذَا رَأَتْ ذَاكِ ‏

இஸ்ஹாக் பின் அபூதல்ஹா (ரஹ்) அவர்களின் பாட்டியான உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஆண்கள் உறக்கத்தில் காண்பதைப் போன்று பெண்ணும் (கனவு) கண்டு, ஆண்கள் தம் (உடை)மீது காண்பதைப் போன்றே தன் (உடை)மீது காணும் பெண்ணுக்குக் குளியல் கடமையாகுமா?” என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், “உம்மு ஸுலைம்! உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும்! (கொஞ்சங்கூட வெட்கமின்றிக் கேட்டு) பெண்ணினத்தைக் கேவலப்படுத்தி விட்டாயே!” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “இல்லை; உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்; (அறிவு தேடுவதற்கு வெட்கப்படக் கூறி, பெண்ணினத்தைக் கேவலப்படுத்தியது) நீதான்” என்று கூறி விட்டு, உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம், “ஆம்! அவ்வாறு காணும் பெண், குளித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி).