அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3743

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ – عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ :‏

دَعَا أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي عُرْسِهِ فَكَانَتِ امْرَأَتُهُ يَوْمَئِذٍ خَادِمَهُمْ وَهِيَ الْعَرُوسُ قَالَ سَهْلٌ تَدْرُونَ مَا سَقَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْقَعَتْ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ


وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ – عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلاً، يَقُولُ أَتَى أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ وَلَمْ يَقُلْ فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ ‏

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، – يَعْنِي أَبَا غَسَّانَ – حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، بِهَذَا الْحَدِيثِ وَقَالَ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ فَسَقَتْهُ تَخُصُّهُ بِذَلِكَ

அபூஉஸைத் (மாலிக் பின் ரபீஆ) அஸ்ஸாஇதீ (ரலி) தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அதில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கலந்துகொண்டார்கள்.) அன்றைய தினம் அபூஉஸைத் (ரலி) அவர்களின் மணப்பெண் (ஸலாமா பின்த்தி உஹைப் – ரலி) அவர்களே  விருந்தினர்களுக்குப் பணிவிடைகள் செய்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பருகுவதற்கு மணப்பெண் என்ன வழங்கினார் தெரியுமா? அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைக் கல் தொட்டியொன்றில் ஊறப்போட்டுவைத்திருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)


குறிப்புகள் :

யஅகூப் இப்னு அப்திர்ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூஉஸைத் அஸ்ஸாஇதீ (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (மணவிருந்துக்கு) அழைத்தார்” என்று ஆரம்பமாகிறது.

ஆனால், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மணமகள் பருகத் தந்தார்” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

அபூகஸ்ஸான் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உணவருந்தி முடித்ததும் கல் தொட்டியொன்றில் ஊறவைத்திருந்த பேரீச்சம் பழங்களை, மணப்பெண் தமது கரத்தால் பிசைந்து சாறு எடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே அதை அவர் வழங்கினார்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment