அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3745

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏

لَقَدْ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحِي هَذَا الشَّرَابَ كُلَّهُ الْعَسَلَ وَالنَّبِيذَ وَالْمَاءَ وَاللَّبَنَ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேன், பழச்சாறு, நீர் மற்றும் பால் ஆகிய எல்லாப் பானங்களையும் இந்தக் கிண்ணத்தில் அருந்தக் கொடுத்திருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3744

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ – قَالَ أَبُو بَكْرٍ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ سَهْلٍ، حَدَّثَنَا – ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، – وَهُوَ ابْنُ مُطَرِّفٍ أَبُو غَسَّانَ – أَخْبَرَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ :‏

ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنَ الْعَرَبِ فَأَمَرَ أَبَا أُسَيْدٍ أَنْ يُرْسِلَ إِلَيْهَا فَأَرْسَلَ إِلَيْهَا فَقَدِمَتْ فَنَزَلَتْ فِي أُجُمِ بَنِي سَاعِدَةَ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى جَاءَهَا فَدَخَلَ عَلَيْهَا فَإِذَا امْرَأَةٌ مُنَكِّسَةٌ رَأْسَهَا فَلَمَّا كَلَّمَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ قَالَ ‏”‏ قَدْ أَعَذْتُكِ مِنِّي ‏”‏ ‏.‏ فَقَالُوا لَهَا أَتَدْرِينَ مَنْ هَذَا فَقَالَتْ لاَ ‏.‏ فَقَالُوا هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَكِ لِيَخْطُبَكِ قَالَتْ أَنَا كُنْتُ أَشْقَى مِنْ ذَلِكَ 

قَالَ سَهْلٌ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ حَتَّى جَلَسَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ هُوَ وَأَصْحَابُهُ ثُمَّ قَالَ ‏”‏ اسْقِنَا ‏”‏ ‏ لِسَهْلٍ قَالَ فَأَخْرَجْتُ لَهُمْ هَذَا الْقَدَحَ فَأَسْقَيْتُهُمْ فِيهِ 


قَالَ أَبُو حَازِمٍ فَأَخْرَجَ لَنَا سَهْلٌ ذَلِكَ الْقَدَحَ فَشَرِبْنَا فِيهِ قَالَ ثُمَّ اسْتَوْهَبَهُ بَعْدَ ذَلِكَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ فَوَهَبَهُ لَهُ ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي بَكْرِ بْنِ إِسْحَاقَ قَالَ ‏”‏ اسْقِنَا يَا سَهْلُ ‏”‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அரபுப் பெண் ஒருத்தியைப் பற்றி (அவளை மணந்து கொள்ளுமாறு) கூறப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணை அழைத்து வருவதற்கு ஆளனுப்புமாறு அபூஉஸைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவ்வாறே அவர்கள் ஆளனுப்பினார்கள்.

அந்தப் பெண் வந்து, (மதீனாவிலுள்ள) பனூ ஸாஇதா குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புறப்பட்டு அப்பெண்ணிடம் வந்து, அவள் இருந்த இடத்தில் நுழைந்தபோது, அப்பெண் தலையைக் கவிழ்த்தபடி இருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், “உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகின்றேன்” என்று சொன்னாள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்” என்று கூறினார்கள். மக்கள் அந்தப் பெண்ணிடம், “இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவள் “தெரியாது“ என்று பதிலளித்தாள்.

மக்கள் “இவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்” என்று கூறினர். அந்தப் பெண், “அவர்களை மணந்துகொள்ளும் நற்பேற்றை நான் இழந்து, துர்பாக்கியசாலி ஆகிவிட்டேனே!” என்று (வருத்தத்துடன்) கூறினாள்.

அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தோழர்களும் முன்னே சென்று பனூ ஸாஇதா சமுதாயக் கூடத்தில் அமர்ந்துகொண்டனர். பிறகு “எங்களுக்குக் குடிக்க நீர் கொடுங்கள்“ என்று என்னிடம் சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்காக இந்தக் குவளையை எடுத்துக்கொண்டு சென்று அதில் அவர்களுக்கு நீர் (கொண்டு வந்து) குடிக்கக் கொடுத்தேன்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)


குறிப்புகள் :

 அபூபக்ரு பின் இஸ்ஹாக் (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்களுக்குக் குடிக்கத் நீர் கொடுங்கள், ஸஹ்லே!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

“பிற்றைய ஒரு நாளில் ஸஹ்லு (ரலி) அந்தக் குவளையை வெளியில் எடுத்தார்கள். அதில் நாங்களும் பருகினோம். பிறகு (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்டதால் ஸஹ்லு (ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபூஹாஸிம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3743

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ – عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ :‏

دَعَا أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي عُرْسِهِ فَكَانَتِ امْرَأَتُهُ يَوْمَئِذٍ خَادِمَهُمْ وَهِيَ الْعَرُوسُ قَالَ سَهْلٌ تَدْرُونَ مَا سَقَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْقَعَتْ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ


وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ – عَنْ أَبِي حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلاً، يَقُولُ أَتَى أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَدَعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ وَلَمْ يَقُلْ فَلَمَّا أَكَلَ سَقَتْهُ إِيَّاهُ ‏

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، – يَعْنِي أَبَا غَسَّانَ – حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، بِهَذَا الْحَدِيثِ وَقَالَ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ فَسَقَتْهُ تَخُصُّهُ بِذَلِكَ

அபூஉஸைத் (மாலிக் பின் ரபீஆ) அஸ்ஸாஇதீ (ரலி) தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அதில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கலந்துகொண்டார்கள்.) அன்றைய தினம் அபூஉஸைத் (ரலி) அவர்களின் மணப்பெண் (ஸலாமா பின்த்தி உஹைப் – ரலி) அவர்களே  விருந்தினர்களுக்குப் பணிவிடைகள் செய்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பருகுவதற்கு மணப்பெண் என்ன வழங்கினார் தெரியுமா? அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைக் கல் தொட்டியொன்றில் ஊறப்போட்டுவைத்திருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி)


குறிப்புகள் :

யஅகூப் இப்னு அப்திர்ரஹ்மான் (ரஹ்) வழி அறிவிப்பு, “அபூஉஸைத் அஸ்ஸாஇதீ (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (மணவிருந்துக்கு) அழைத்தார்” என்று ஆரம்பமாகிறது.

ஆனால், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மணமகள் பருகத் தந்தார்” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

அபூகஸ்ஸான் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உணவருந்தி முடித்ததும் கல் தொட்டியொன்றில் ஊறவைத்திருந்த பேரீச்சம் பழங்களை, மணப்பெண் தமது கரத்தால் பிசைந்து சாறு எடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத் தந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே அதை அவர் வழங்கினார்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3742

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

كُنَّا نَنْبِذُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سِقَاءٍ يُوكَى أَعْلاَهُ وَلَهُ عَزْلاَءُ نَنْبِذُهُ غُدْوَةً فَيَشْرَبُهُ عِشَاءً وَنَنْبِذُهُ عِشَاءً فَيَشْرَبُهُ غُدْوَةً ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையொன்றில் பழச்சாறுகளை ஊற்றிவைப்போம். பையின் வாய்ப் பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும். அதன் கீழ்ப்பகுதியில் துளை இருக்கும். பழச்சாற்றை நாங்கள் காலையில் ஊற்றிவைத்தால் இரவில் அதை நபியவர்கள் அருந்துவார்கள்; இரவில் ஊற்றிவைத்தால் காலையில் அதை அருந்துவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3741

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا الْقَاسِمُ، – يَعْنِي ابْنَ الْفَضْلِ الْحُدَّانِيَّ – حَدَّثَنَا ثُمَامَةُ، – يَعْنِي ابْنَ حَزْنٍ الْقُشَيْرِيَّ قَالَ :‏

لَقِيتُ عَائِشَةَ فَسَأَلْتُهَا عَنِ النَّبِيذِ، فَدَعَتْ عَائِشَةُ جَارِيَةً حَبَشِيَّةً فَقَالَتْ سَلْ هَذِهِ فَإِنَّهَا كَانَتْ تَنْبِذُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتِ الْحَبَشِيَّةُ كُنْتُ أَنْبِذُ لَهُ فِي سِقَاءٍ مِنَ اللَّيْلِ وَأُوكِيهِ وَأُعَلِّقُهُ فَإِذَا أَصْبَحَ شَرِبَ مِنْهُ ‏.‏

நான் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, பழச்சாறுகள் பற்றிக் கேட்டேன். அப்போது ஆயிஷா (ரலி), அபிசீனியாவைச் சேர்ந்த அடிமைப் பெண் ஒருவரை அழைத்து, “இவரிடம் கேளுங்கள். இவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பழச்சாறுகளை ஊறவைப்பவராக இருந்தார்” என்று கூறினார்கள்.

அப்போது அந்த அபிசீனியப் பெண், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இரவில் தோல் பையில் பழச்சாற்றை ஊற்றிவைத்து, அதன் வாய்ப் பகுதியை சுருக்கிட்டுக் கட்டித் தொங்க விட்டுவிடுவேன். மறுநாள் காலையில் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருந்துவார்கள்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுமாமா பின் ஹஸ்னு அல்குஷைரீ (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3740

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ زَيْدٍ، عَنْ يَحْيَى أَبِي عُمَرَ النَّخَعِيِّ قَالَ :‏

سَأَلَ قَوْمٌ ابْنَ عَبَّاسٍ عَنْ بَيْعِ الْخَمْرِ، وَشِرَائِهَا، وَالتِّجَارَةِ فِيهَا فَقَالَ أَمُسْلِمُونَ أَنْتُمْ قَالُوا نَعَمْ ‏.‏ قَالَ فَإِنَّهُ لاَ يَصْلُحُ بَيْعُهَا وَلاَ شِرَاؤُهَا وَلاَ التِّجَارَةُ فِيهَا ‏.‏ قَالَ فَسَأَلُوهُ عَنِ النَّبِيذِ فَقَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَفَرٍ ثُمَّ رَجَعَ وَقَدْ نَبَذَ نَاسٌ مِنْ أَصْحَابِهِ فِي حَنَاتِمَ وَنَقِيرٍ وَدُبَّاءٍ فَأَمَرَ بِهِ فَأُهْرِيقَ ثُمَّ أَمَرَ بِسِقَاءٍ فَجُعِلَ فِيهِ زَبِيبٌ وَمَاءٌ فَجُعِلَ مِنَ اللَّيْلِ فَأَصْبَحَ فَشَرِبَ مِنْهُ يَوْمَهُ ذَلِكَ وَلَيْلَتَهُ الْمُسْتَقْبِلَةَ وَمِنَ الْغَدِ حَتَّى أَمْسَى فَشَرِبَ وَسَقَى فَلَمَّا أَصْبَحَ أَمَرَ بِمَا بَقِيَ مِنْهُ فَأُهَرِيقَ

மதுவை விற்பது, வாங்குவது, வியாபாரம் செய்வது ஆகியவற்றைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சிலர் கேட்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “நீங்களெல்லாம் முஸ்லிம்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்“ என்று கூறினர்.

இப்னு அப்பாஸ் (ரலி), “மதுவை விற்பதும் கூடாது; வாங்குவதும் கூடாது; அது தொடர்பான வியாபாரங்களில் ஈடுபடுவதும் கூடாது” என்று கூறினார்கள். பிறகு மக்கள், பழச் சாறுகள் பற்றிக் கேட்டபோது,

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டுச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் மண்சாடிகளிலும் பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்திலும் சுரைக்குடுவையிலும் பழச் சாறுகளை ஊறவைத்திருந்தனர். அவற்றைக் கொட்டிவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உத்தரவிட்டு, அவ்வாறே அவை கொட்டப்பட்டன.

பிறகு தோல் பையொன்றைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். (அதைக் கொண்டு வந்ததும்) அதில் உலர்ந்த திராட்சைகளும் சிறிது நீரும் ஊற்றப்பட்டது. பிறகு அது அந்த இரவு முழுவதும் அப்படியே (ஊற) விடப்பட்டது. காலையானதும் அன்றைய தினம் முழுவதிலும் அடுத்த இரவிலும் அதற்கடுத்த நாள் மாலைவரையிலும் அதில் தாமும் அருந்தினார்கள்; (பிறருக்கும்) அருந்தக் கொடுத்தார்கள். (அடுத்த நாள்) காலையில் அதில் எஞ்சியிருந்ததைக் கொட்டிவிடுமாறு அவர்கள் உத்தரவிட்டு, அவ்வாறே அது கொட்டப்பட்டது” என்று இப்னு அப்பாஸ் (ரலி) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் உபைத் அபூஉமர் அந்நகஈ (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3739

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ يَحْيَى أَبِي عُمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنْبَذُ لَهُ الزَّبِيبُ فِي السِّقَاءِ فَيَشْرَبُهُ يَوْمَهُ وَالْغَدَ وَبَعْدَ الْغَدِ فَإِذَا كَانَ مِسَاءُ الثَّالِثَةِ شَرِبَهُ وَسَقَاهُ فَإِنْ فَضَلَ شَىْءٌ أَهْرَاقَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையில் உலர்ந்த திராட்சை ஊறவைக்கப்படும். அதை அன்றைய தினமும் மறு நாளும் அதற்கடுத்த நாளும் அவர்கள் அருந்துவார்கள். மூன்றாவது நாள் மாலையில் தாமும் அருந்துவார்கள்; (யாருக்கேனும்) அருந்தவும் கொடுப்பார்கள். பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் அதைக் கொட்டிவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3738

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ وَأَبِي كُرَيْبٍ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي عُمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنْقَعُ لَهُ الزَّبِيبُ فَيَشْرَبُهُ الْيَوْمَ وَالْغَدَ وَبَعْدَ الْغَدِ إِلَى مَسَاءِ الثَّالِثَةِ ثُمَّ يَأْمُرُ بِهِ فَيُسْقَى أَوْ يُهَرَاقُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உலர்ந்த திராட்சை (நீரில்) ஊறவைக்கப்படும். அதை அன்றைய தினமும் மறுநாளும் அதற்கடுத்த மூன்றாம் நாளின் மாலைவரையும் அவர்கள் அருந்துவார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அது (யாருக்கேனும்) அருந்தக் கொடுக்கப்படும்; அல்லது கொட்டப்பட்டுவிடும்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3737

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى الْبَهْرَانِيِّ، قَالَ ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ فَقَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنْتَبَذُ لَهُ فِي سِقَاءٍ – قَالَ شُعْبَةُ مِنْ لَيْلَةِ الاِثْنَيْنِ – فَيَشْرَبُهُ يَوْمَ الاِثْنَيْنِ وَالثَّلاَثَاءِ إِلَى الْعَصْرِ فَإِنْ فَضَلَ مِنْهُ شَىْءٌ سَقَاهُ الْخَادِمَ أَوْ صَبَّهُ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் பழச்சாறுகள் பற்றி மக்கள்  குறிப்பிட்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையொன்றில் பழச்சாறு ஊற்றிவைக்கப்பட்டுவந்தது. திங்கட்கிழமை இரவு அவ்வாறு ஊற்றி வைக்கப்பட்டால், திங்கட்கிழமையும் செவ்வாய்கிழமை அஸ்ரு வரையும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அருந்துவார்கள். பிறகு அதில் ஏதேனும் எஞ்சியிருந்தால் பணியாளருக்கு அருந்தக் கொடுப்பார்கள்; அல்லது கொட்டிவிடுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக யஹ்யா பின் உபைத் அல்பஹ்ரானீ (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3736

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدٍ أَبِي عُمَرَ الْبَهْرَانِيِّ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُنْتَبَذُ لَهُ أَوَّلَ اللَّيْلِ فَيَشْرَبُهُ إِذَا أَصْبَحَ يَوْمَهُ ذَلِكَ وَاللَّيْلَةَ الَّتِي تَجِيءُ وَالْغَدَ وَاللَّيْلَةَ الأُخْرَى وَالْغَدَ إِلَى الْعَصْرِ فَإِنْ بَقِيَ شَىْءٌ سَقَاهُ الْخَادِمَ أَوْ أَمَرَ بِهِ فَصُبَّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இரவின் ஆரம்ப நேரத்தில் பழச்சாறு ஊற்றி வைக்கப்படும். காலையில் அதை அவர்கள் அருந்துவார்கள். அன்றைய பகல் முழுவதும், அடுத்த இரவும், அடுத்த நாள் பகலிலும், மற்றோர் இரவிலும், அதற்கடுத்த அஸ்ரு நேரம்வரையிலும் அதை அருந்துவார்கள்.

பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் (தம்) பணியாளருக்கு அதை அருந்தக் கொடுப்பார்கள். அல்லது (அதைக் கொட்டி விடுமாறு) உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கொட்டப்படும்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)