அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4000

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ قَالَ :‏

جَاءَ أَبُو مُوسَى إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ قَيْسٍ ‏.‏ فَلَمْ يَأْذَنْ لَهُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا أَبُو مُوسَى السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا الأَشْعَرِيُّ ‏.‏ ثُمَّ انْصَرَفَ فَقَالَ رُدُّوا عَلَىَّ رُدُّوا عَلَىَّ ‏.‏ فَجَاءَ فَقَالَ يَا أَبَا مُوسَى مَا رَدَّكَ كُنَّا فِي شُغْلٍ ‏.‏ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ الاِسْتِئْذَانُ ثَلاَثٌ فَإِنْ أُذِنَ لَكَ وَإِلاَّ فَارْجِعْ ‏”‏ ‏.‏ قَالَ لَتَأْتِيَنِّي عَلَى هَذَا بِبَيِّنَةٍ وَإِلاَّ فَعَلْتُ وَفَعَلْتُ ‏.‏ فَذَهَبَ أَبُو مُوسَى قَالَ عُمَرُ إِنْ وَجَدَ بَيِّنَةً تَجِدُوهُ عِنْدَ الْمِنْبَرِ عَشِيَّةً وَإِنْ لَمْ يَجِدْ بَيِّنَةً فَلَمْ تَجِدُوهُ ‏.‏ فَلَمَّا أَنْ جَاءَ بِالْعَشِيِّ وَجَدُوهُ قَالَ يَا أَبَا مُوسَى مَا تَقُولُ أَقَدْ وَجَدْتَ قَالَ نَعَمْ أُبَىَّ بْنَ كَعْبٍ ‏.‏ قَالَ عَدْلٌ ‏.‏ قَالَ يَا أَبَا الطُّفَيْلِ مَا يَقُولُ هَذَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ذَلِكَ يَا ابْنَ الْخَطَّابِ فَلاَ تَكُونَنَّ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ سُبْحَانَ اللَّهِ إِنَّمَا سَمِعْتُ شَيْئًا فَأَحْبَبْتُ أَنْ أَتَثَبَّتَ ‏


وَحَدَّثَنَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ يَا أَبَا الْمُنْذِرِ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ نَعَمْ فَلاَ تَكُنْ يَا ابْنَ الْخَطَّابِ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَلَمْ يَذْكُرْ مِنْ قَوْلِ عُمَرَ سُبْحَانَ اللَّهِ ‏.‏ وَمَا بَعْدَهُ ‏.‏

நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் சென்று, “அஸ்ஸலாமு அலைக்கும்! அப்துல்லாஹ் பின் கைஸ் வந்துள்ளேன்” என்று கூறி(அனுமதி கோரி)னேன். அவர்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. பிறகு (மீண்டும்) நான், “அஸ்ஸலாமு அலைக்கும்! அபூமூஸா (வந்துள்ளேன்). அஸ்ஸலாமு அலைக்கும்! அஷ்அரீ (வந்துள்ளேன்)” என்று (இன்னும் இரண்டு முறை) அனுமதி கோரினேன். (அனுமதி கிடைக்காததால்) பிறகு நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது உமர் (ரலி), “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். நான் (மீண்டும்) வந்தபோது, “அபூமூஸா! ஏன் திரும்பிச் சென்றீர்? நாம் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்தோம்” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறைக்குள்) உமக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி. இல்லாவிட்டால் நீர் திரும்பிவிடும்!’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றேன்.

உமர் (ரலி), “இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இப்படிச் செய்து விடுவேன்” என்று எச்சரித்தார்கள். ஆகவே, நான் (அன்ஸாரிகளின் அவைக்குச்) சென்றேன்.

உமர் (ரலி), “அவருக்குச் சாட்சி கிடைத்தால் மாலையில் அவரைச் சொற்பொழிவு மேடைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். சாட்சி கிடைக்காவிட்டால் அவரை நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

மாலை நேரமானபோது என்னைக் கண்ட மக்கள், “அபூமூஸா! நீர் என்ன சொல்கின்றீர்? சாட்சி கிடைத்துவிட்டாரா?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். நான் “ஆம், (சாட்சி) உபை பின் கஅப் (ரலி)” என்றேன். உமர் (ரலி), “அவர் நேர்மையானவர்தாம்” என்று கூறி விட்டு, “அபுத்துஃபைல்! இவர் என்ன சொல்கின்றார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி), “கத்தாபின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்குத் துன்பம் தருபவராக நீர் ஆகிவிடாதீர்!” என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலி), “ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! கேள்விப்பட்ட ஒன்றை உறுதி செய்துகொள்ளவே விரும்பினேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

அலீ பின் ஹாஷிம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபுல்முன்திர்! நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி), “ஆம், கத்தாபின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்குத் துன்பம் தருபவராக நீர் ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள் என்பது வரை இடம்பெற்றுள்ளது.

உமர் (ரலி) “ஸுப்ஹானல்லாஹ்“ என்று கூறியதும் அதற்குப் பின் உள்ளவையும் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3999

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ :‏

أَنَّ أَبَا مُوسَى، اسْتَأْذَنَ عَلَى عُمَرَ ثَلاَثًا فَكَأَنَّهُ وَجَدَهُ مَشْغُولاً فَرَجَعَ فَقَالَ عُمَرُ أَلَمْ تَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ائْذَنُوا لَهُ ‏.‏ فَدُعِيَ لَهُ فَقَالَ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ إِنَّا كُنَّا نُؤْمَرُ بِهَذَا ‏.‏ قَالَ لَتُقِيمَنَّ عَلَى هَذَا بَيِّنَةً أَوْ لأَفْعَلَنَّ ‏.‏ فَخَرَجَ فَانْطَلَقَ إِلَى مَجْلِسٍ مِنَ الأَنْصَارِ فَقَالُوا لاَ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا إِلاَّ أَصْغَرُنَا ‏.‏ فَقَامَ أَبُو سَعِيدٍ فَقَالَ كُنَّا نُؤْمَرُ بِهَذَا ‏.‏ فَقَالَ عُمَرُ خَفِيَ عَلَىَّ هَذَا مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَلْهَانِي عَنْهُ الصَّفْقُ بِالأَسْوَاقِ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، ح وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا النَّضْرُ، – يَعْنِي ابْنَ شُمَيْلٍ – قَالاَ جَمِيعًا حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِ النَّضْرِ أَلْهَانِي عَنْهُ الصَّفْقُ بِالأَسْوَاقِ ‏

அபூமூஸா (ரலி), (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் (சென்று அவர்களது இல்லத்திற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். (ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை) உமர் (ரலி) அலுவலில் மூழ்கியிருப்பதாக நினைத்துக்கொண்டு அபூமூஸா (ரலி) திரும்பிவிட்டார்கள்.

(அலுவலை முடித்த) பிறகு உமர் (ரலி), “ (அபூமூஸா) அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்களின் குரலை நீங்கள் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். பிறகு அபூமூஸா (ரலி) அழைக்கப்பட்டார்கள். அப்போது உமர் (ரலி), “நீங்கள் திரும்பிச் சென்றதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள்.

அபூமூஸா (ரலி), “இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “நீங்கள் இதற்குரிய சான்றை நிறுவ வேண்டும். இல்லையெனில், நான் (இன்னின்னவாறு) நடவடிக்கை எடுப்பேன்” என்றார்கள்.

எனவே, அபூமூஸா (ரலி) அன்ஸாரிகளின் அவையை நோக்கிப் புறப்பட்டார்கள். அன்ஸாரிகள், “எங்களில் சிறியவரே இதற்காக உமக்குச் சாட்சியமளிப்பார்” என்று கூறினர். ஆகவே, அபூஸயீத் (ரலி) எழுந்து (உமர் (ரலி) அவர்களிடம் சென்று), “அவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்” என்று (சாட்சியம்) கூற, உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த விவரம் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! (நபி (ஸல்) அவ்வாறு கூறிய நாளில்) கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது (போலும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக உபைத் பின் உமைர் (ரஹ்)


குறிப்பு :

நள்ரு பின் ஷுமைல் (ரஹ்) வழி அறிவிப்பில், “கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3998

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرٌ، – يَعْنِي ابْنَ مُفَضَّلٍ – حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ :‏

أَنَّ أَبَا مُوسَى، أَتَى بَابَ عُمَرَ فَاسْتَأْذَنَ فَقَالَ عُمَرُ وَاحِدَةٌ ‏.‏ ثُمَّ اسْتَأْذَنَ الثَّانِيَةَ فَقَالَ عُمَرُ ثِنْتَانِ ‏.‏ ثُمَّ اسْتَأْذَنَ الثَّالِثَةَ فَقَالَ عُمَرُ ثَلاَثٌ ‏.‏ ثُمَّ انْصَرَفَ فَأَتْبَعَهُ فَرَدَّهُ فَقَالَ إِنْ كَانَ هَذَا شَيْئًا حَفِظْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَهَا وَإِلاَّ فَلأَجْعَلَنَّكَ عِظَةً ‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ فَأَتَانَا فَقَالَ أَلَمْ تَعْلَمُوا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الاِسْتِئْذَانُ ثَلاَثٌ ‏”‏ ‏.‏ قَالَ فَجَعَلُوا يَضْحَكُونَ – قَالَ – فَقُلْتُ أَتَاكُمْ أَخُوكُمُ الْمُسْلِمُ قَدْ أُفْزِعَ تَضْحَكُونَ انْطَلِقْ فَأَنَا شَرِيكُكَ فِي هَذِهِ الْعُقُوبَةِ ‏.‏ فَأَتَاهُ فَقَالَ هَذَا أَبُو سَعِيدٍ ‏.‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، ح

وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْجُرَيْرِيِّ، وَسَعِيدِ بْنِ يَزِيدَ كِلاَهُمَا عَنْ أَبِي نَضْرَةَ، قَالاَ سَمِعْنَاهُ يُحَدِّثُ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏.‏ بِمَعْنَى حَدِيثِ بِشْرِ بْنِ مُفَضَّلٍ عَنْ أَبِي مَسْلَمَةَ.

அபூமூஸா (ரலி), (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்குச் சென்று (உள்ளே நுழைய) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி), “ஒன்று” என்றார்கள். பிறகு அபூமூஸா (ரலி) இரண்டாவது முறை அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி), “இரண்டு“ என்றார்கள். பிறகு அபூமூஸா (ரலி) மூன்றாவது முறை அனுமதி கேட்டபோது, உமர் (ரலி), “மூன்று” என்றார்கள்.

பிறகு அபூமூஸா (ரலி) திரும்பிச் சென்றுவிட்டார்கள். அப்போது உமர் (ரலி), அபூமூஸா (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து (செல்ல ஓர் ஆளனுப்பி) தம்மிடம் திரும்பிவரச் செய்து, “இவ்வாறு நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டிருந்தால் அதற்கு ஆதாரம் கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் உங்களை (மற்றவர்களுக்கு) ஒரு பாடமாக ஆக்கி விடுவேன்!” என்று கூறினார்கள்.

அப்போது அபூமூஸா (ரலி) எங்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அனுமதி கோருதல் மூன்று முறையாகும்’ என்று கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதைக் கேட்டு மக்கள் சிரிக்கலாயினர். உடனே (அபூஸயீத் ஆகிய) நான், “உங்களுடைய சகோதர முஸ்லிம் பீதிக்கு உள்ளாக்கப்பட்டு உங்களிடம் வந்துள்ளார். (அவரைக் கண்டு) நீங்கள் சிரிக்கின்றீர்களே?” என்று கூறிவிட்டு, (அபூமூஸா (ரலி) அவர்களிடம்) “நீங்கள் வாருங்கள். இந்தத் தண்டனையில் உங்களுக்கு நான் பங்காளியாயிருப்பேன்!” என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அபூமூஸா (ரலி), “இதோ அபூஸயீத் (சாட்சி)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3997

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، أَنَّ بُسْرَ بْنَ سَعِيدٍ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ :‏

كُنَّا فِي مَجْلِسٍ عِنْدَ أُبَىِّ بْنِ كَعْبٍ فَأَتَى أَبُو مُوسَى الأَشْعَرِيُّ مُغْضَبًا حَتَّى وَقَفَ فَقَالَ أَنْشُدُكُمُ اللَّهَ هَلْ سَمِعَ أَحَدٌ مِنْكُمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ الاِسْتِئْذَانُ ثَلاَثٌ فَإِنْ أُذِنَ لَكَ وَإِلاَّ فَارْجِعْ ‏”‏ ‏.‏ قَالَ أُبَىٌّ وَمَا ذَاكَ قَالَ اسْتَأْذَنْتُ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ أَمْسِ ثَلاَثَ مَرَّاتٍ فَلَمْ يُؤْذَنْ لِي فَرَجَعْتُ ثُمَّ جِئْتُهُ الْيَوْمَ فَدَخَلْتُ عَلَيْهِ فَأَخْبَرْتُهُ أَنِّي جِئْتُ أَمْسِ فَسَلَّمْتُ ثَلاَثًا ثُمَّ انْصَرَفْتُ قَالَ قَدْ سَمِعْنَاكَ وَنَحْنُ حِينَئِذٍ عَلَى شُغْلٍ فَلَوْ مَا اسْتَأْذَنْتَ حَتَّى يُؤْذَنَ لَكَ قَالَ اسْتَأْذَنْتُ كَمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَوَاللَّهِ لأُوجِعَنَّ ظَهْرَكَ وَبَطْنَكَ ‏.‏ أَوْ لَتَأْتِيَنَّ بِمَنْ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا ‏.‏ فَقَالَ أُبَىُّ بْنُ كَعْبٍ فَوَاللَّهِ لاَ يَقُومُ مَعَكَ إِلاَّ أَحْدَثُنَا سِنًّا قُمْ يَا أَبَا سَعِيدٍ ‏.‏ فَقُمْتُ حَتَّى أَتَيْتُ عُمَرَ فَقُلْتُ قَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ هَذَا ‏

நாங்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அபூமூஸா (ரலி) கோபத்துடன் வந்து நின்று, “அல்லாஹ்வை முன்வைத்து நான் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறை கோரி,) உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி! (வீட்டுக்குள் செல்லலாம்) இல்லாவிட்டால் திரும்பிவிடுங்கள்’ என்று கூறியதைக் கேட்டவர் உங்களில் யாரேனும் உள்ளாரா?” என்று கேட்டார்கள்.  உபை பின் கஅப் (ரலி), “என்ன நடந்தது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூமூஸா (ரலி), “நேற்று நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) (வீட்டிற்குச் சென்று) அவர்களிடம் மூன்று முறை அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிறகு இன்று அவர்களிடம் சென்று, நேற்று நான் வந்து (அனுமதி கேட்டு) மூன்று முறை ஸலாம் சொன்னேன். (பதில் வராததால்) பிறகு நான் திரும்பிவிட்டேன்” என்று கூறினேன்.

அதற்கு உமர் (ரலி), “உமது குரலை நாம் செவியுற்றோம். அப்போது நாம் ஒரு (முக்கிய) அலுவலில் மூழ்கியிருந்தோம். அனுமதி வழங்கப்படும்வரை அனுமதி கேட்பதை நீங்கள் நீட்டி இருந்தால் நன்றாயிருந்திருக்குமே!” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றதற்கு ஏற்ப (மும்முறை) அனுமதி கேட்டேன்” என்றேன்.

உமர் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்ப)தற்கு உமக்குச் சாட்சியம் அளிப்பவர் ஒருவரை நீர் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் உமது முதுகிலும் வயிற்றிலும் நாம் தண்டிக்க வேண்டியதிருக்கும்” என்று கூறினார்கள் என்றார்கள்.

அப்போது உபை பின் கஅப் (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களில் வயதில் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) எழுவார்” என்று கூறிவிட்டு, “அபூஸயீதே! எழும்!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் எழுந்து உமர் (ரலி) அவர்களிடம் சென்று, “அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்” என்று (சாட்சியம்) சொன்னேன்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3996

حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرٍ النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا – وَاللَّهِ،  – يَزِيدُ بْنُ خُصَيْفَةَ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُ :‏

كُنْتُ جَالِسًا بِالْمَدِينَةِ فِي مَجْلِسِ الأَنْصَارِ فَأَتَانَا أَبُو مُوسَى فَزِعًا أَوْ مَذْعُورًا ‏.‏ قُلْنَا مَا شَأْنُكَ قَالَ إِنَّ عُمَرَ أَرْسَلَ إِلَىَّ أَنْ آتِيَهُ فَأَتَيْتُ بَابَهُ فَسَلَّمْتُ ثَلاَثًا فَلَمْ يَرُدَّ عَلَىَّ فَرَجَعْتُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنَا فَقُلْتُ إِنِّي أَتَيْتُكَ فَسَلَّمْتُ عَلَى بَابِكَ ثَلاَثًا فَلَمْ يَرُدُّوا عَلَىَّ فَرَجَعْتُ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ ‏”‏ ‏.‏ فَقَالَ عُمَرُ أَقِمْ عَلَيْهِ الْبَيِّنَةَ وَإِلاَّ أَوْجَعْتُكَ ‏.‏ فَقَالَ أُبَىُّ بْنُ كَعْبٍ لاَ يَقُومُ مَعَهُ إِلاَّ أَصْغَرُ الْقَوْمِ ‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ قُلْتُ أَنَا أَصْغَرُ الْقَوْمِ ‏.‏ قَالَ فَاذْهَبْ بِهِ ‏


حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَزَادَ ابْنُ أَبِي عُمَرَ فِي حَدِيثِهِ قَالَ أَبُو سَعِيدٍ فَقُمْتُ مَعَهُ فَذَهَبْتُ إِلَى عُمَرَ فَشَهِدْتُ

நான் மதீனாவில் அன்ஸாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) பதற்றமடைந்தவர்களாக எங்களிடம் வந்தார்கள். நாங்கள் (அவரிடம்) “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “(கலீஃபா) உமர் (ரலி) என்னை வரச் சொல்லி ஆளனுப்பியிருந்தார்கள்.

நான் அவர்களது வீட்டு வாசலுக்குச் சென்று (வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) மூன்று முறை முகமன் (ஸலாம்) கூறினேன். ஆனால், அவர்கள் எனக்குப் பதில் சொல்லவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன்.

பிறகு அவர்கள் (என்னிடம்), “நீங்கள் என்னிடம் வராததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் உங்களிடம் வந்து, உங்கள் வீட்டு வாசலில் நின்று, மூன்று முறை முகமன் (ஸலாம்) கூறினேன். எனக்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி வந்துவிடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்றேன்.

அதற்கு உமர் (ரலி), “இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் உங்களைத் தண்டிக்க வேண்டியதிருக்கும்” என்று கூறினார்கள். (இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றவர் உங்களில் யாரேனும் உள்ளாரா என்று கேட்டார்கள்.)

அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி), “மக்களில் (வயதால்) மிகச் சிறியவரே இவருடன் (இப்போது சாட்சியம் சொல்ல) எழுவார்” என்று சொன்னார்கள். நான் (அபூஸயீத்), “நான்தான் மக்களிலேயே மிகச் சிறியவன்” என்று சொன்னேன். உபை பின் கஅப் (ரலி), “இவரை அழைத்துச் செல்வீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

இப்னு அபீஉமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “எனவே, நான் அபூமூஸா (ரலி) அவர்களுடன் எழுந்து, உமர் (ரலி) அவர்களிடம் சென்று சாட்சியமளித்தேன்” என்று அபூஸயீத் (ரலி) கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.