அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 727

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏

مَا صَلَّيْتُ خَلْفَ أَحَدٍ أَوْجَزَ صَلَاةً مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي تَمَامٍ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُتَقَارِبَةً وَكَانَتْ صَلَاةُ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏مُتَقَارِبَةً فَلَمَّا كَانَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏مَدَّ فِي صَلَاةِ الْفَجْرِ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ قَامَ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ثُمَّ يَسْجُدُ وَيَقْعُدُ بَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகச் சுருக்கமாகவும் நிறைவாகவும் தொழுவிக்கக்கூடிய எவருக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும்) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களது தொழுகையும் அவ்வாறே சமநிலைகளில் அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது ஃபஜ்ருத் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறியதும் (அடுத்த நிலையை) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள். பிறகு ஸஜ்தாச் செய்வார்கள். (அடுத்த நிலையை) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு இரு ஸஜ்தாக்களுக்கு இடையே (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 726

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏

عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي لَا ‏ ‏آلُو ‏ ‏أَنْ أُصَلِّيَ بِكُمْ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِنَا قَالَ فَكَانَ ‏ ‏أَنَسٌ ‏ ‏يَصْنَعُ شَيْئًا لَا أَرَاكُمْ تَصْنَعُونَهُ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ انْتَصَبَ قَائِمًا حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ السَّجْدَةِ مَكَثَ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று, அதில் ஒருகுறையும் வைக்காமல் நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன்” என (ஒருபோது) எங்களுக்கு அனஸ் (ரலி) கூறி(த் தொழவைக்கலா)னார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) செய்த ஒன்றை நீங்கள் செய்ய நான் பார்த்ததில்லை. அவர்கள் குனிந்து (ருகூஉச் செய்து) நிமிர்ந்து, (அடுத்துச் செய்ய வேண்டியதை) மறந்துவிட்டார்களோ என்று எண்ணுமளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள்; ஸஜ்தாச் செய்து தலையை உயர்த்தியதும் (அடுத்துச் செய்ய வேண்டியதை) மறந்துவிட்டார்களோ என்று எண்ணுமளவுக்கு இருப்பில் (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஸாபித் அல் புனானீ (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 725

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ ‏ ‏غَلَبَ عَلَى ‏ ‏الْكُوفَةِ ‏ ‏رَجُلٌ قَدْ سَمَّاهُ زَمَنَ ‏ ‏ابْنِ الْأَشْعَثِ ‏ ‏فَأَمَرَ ‏ ‏أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَكَانَ ‏ ‏يُصَلِّي فَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَامَ قَدْرَ مَا أَقُولُ اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏ ‏قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ ‏ ‏لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏فَقَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏يَقُولُا ‏

كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرُكُوعُهُ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ وَسُجُودُهُ وَمَا بَيْنَ السَّجْدَتَيْنِ قَرِيبًا مِنْ السَّوَاءِ ‏

قَالَ ‏ ‏شُعْبَةُ ‏ ‏فَذَكَرْتُهُ ‏ ‏لِعَمْرِو بْنِ مُرَّةَ ‏ ‏فَقَالَ قَدْ رَأَيْتُ ‏ ‏ابْنَ أَبِي لَيْلَى ‏ ‏فَلَمْ تَكُنْ صَلَاتُهُ هَكَذَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏أَنَّ ‏ ‏مَطَرَ بْنَ نَاجِيَةَ ‏ ‏لَمَّا ظَهَرَ عَلَى ‏ ‏الْكُوفَةِ ‏ ‏أَمَرَ ‏ ‏أَبَا عُبَيْدَةَ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை (நிலை), அவர்களது ருகூஉ, ருகூவிலிருந்து தலைநிமிர்த்தி எழுந்து நிற்றல், அவர்களது ஸஜ்தா, இரு ஸஜ்தாக்களுக்கு இடைப்பட்ட அமர்வு ஆகியன ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) வழியாக ஹகம் பின் உபைதா (ரஹ்).

குறிப்பு :

“இப்னுல் அஷ்அஸ் காலத்தில் (இராக்கிலுள்ள) கூஃபா நகரை, (மத்தர் பின் நாஜியா எனும் பெயருடைய) ஒருவர் வெற்றி கொண்டார். அவர், அபூஉபைதா பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களை மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்குமாறு பணித்தார். அவ்வாறே அபூஉபைதா (ரஹ்) தொழவித்து வந்தார். அவர் தொழுகையில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தினால், ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅத் அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி. லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃத்திய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்’ என்று நான் சொல்லும் அளவிற்கு நிற்பார்” என்று ஹகம் பின் உபைதா (ரஹ்) சொல்லிக் கொண்டு வரும்போது, மேற்காணும் ஹதீஸை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா கூறியதாகக் குறிப்பிடப் படுகின்றது.

“மத்தர் பின் நாஜியா என்பார் கூஃபா நகரை வெற்றி கொண்டபோது அபூஉபைதா (ரஹ்) அவர்களை மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்குமாறு பணித்தார் …” (எனும் தகவலுடன் கூடிய) “இந்த ஹதீஸை நான் அம்ரு பின் முர்ரா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், ‘நான் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்க(ளது தொழுகைக)ளைப் பார்த்திருக்கிறேன். அவர்களது தொழுகை அவ்வாறு அமைந்திருக்கவில்லை’ என்று கூறினார்” என்று ஷுஅபா (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 724

و حَدَّثَنَا ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏حَامِدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِلَالِ بْنِ أَبِي حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ ‏

رَمَقْتُ ‏ ‏الصَّلَاةَ مَعَ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوَجَدْتُ قِيَامَهُ فَرَكْعَتَهُ فَاعْتِدَالَهُ بَعْدَ رُكُوعِهِ فَسَجْدَتَهُ فَجَلْسَتَهُ بَيْنَ السَّجْدَتَيْنِ فَسَجْدَتَهُ فَجَلْسَتَهُ مَا بَيْنَ التَّسْلِيمِ ‏ ‏وَالِانْصِرَافِ قَرِيبًا مِنْ السَّوَاءِ

நான் முஹம்மது (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யை உற்று நோக்கி வந்தேன். தொழுகையில் அவர்களது நிலை(கியாம்), குனிதல்(ருகூஉ), நிமிர்ந்து நிலைகொள்ளல்(இஃதிதால்), சிரவணக்கம்(ஸஜ்தா), இரு ஸஜ்தாக்களின் இடைப்பட்ட அமர்வு, மறு ஸஜ்தா, மறு அமர்வு, ஸலாம் கூறித் தொழுகையை நிறைவு செய்து எழுவது ஆகியவற்றின் காலஅளவுகள் ஏறக்குறைய சமஅளவில் அமைந்திருந்தன.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)