அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 727

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ثَابِتٌ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏

مَا صَلَّيْتُ خَلْفَ أَحَدٍ أَوْجَزَ صَلَاةً مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي تَمَامٍ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُتَقَارِبَةً وَكَانَتْ صَلَاةُ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏مُتَقَارِبَةً فَلَمَّا كَانَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏مَدَّ فِي صَلَاةِ الْفَجْرِ وَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ قَامَ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ثُمَّ يَسْجُدُ وَيَقْعُدُ بَيْنَ السَّجْدَتَيْنِ حَتَّى نَقُولَ قَدْ أَوْهَمَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகச் சுருக்கமாகவும் நிறைவாகவும் தொழுவிக்கக்கூடிய எவருக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும்) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. அபூபக்ரு (ரலி) அவர்களது தொழுகையும் அவ்வாறே சமநிலைகளில் அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது ஃபஜ்ருத் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறியதும் (அடுத்த நிலையை) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள். பிறகு ஸஜ்தாச் செய்வார்கள். (அடுத்த நிலையை) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு இரு ஸஜ்தாக்களுக்கு இடையே (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment