அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4692

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ:‏ ‏

كَانَتْ عِنْدَ أُمِّ سُلَيْمٍ يَتِيمَةٌ وَهِيَ أُمُّ أَنَسٍ فَرَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْيَتِيمَةَ فَقَالَ ‏”‏ آنْتِ هِيَهْ لَقَدْ كَبِرْتِ لاَ كَبِرَ سِنُّكِ ‏”‏ ‏.‏ فَرَجَعَتِ الْيَتِيمَةُ إِلَى أُمِّ سُلَيْمٍ تَبْكِي فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ مَا لَكِ يَا بُنَيَّةُ قَالَتِ الْجَارِيَةُ دَعَا عَلَىَّ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ يَكْبَرَ سِنِّي فَالآنَ لاَ يَكْبَرُ سِنِّي أَبَدًا – أَوْ قَالَتْ قَرْنِي – فَخَرَجَتْ أُمُّ سُلَيْمٍ مُسْتَعْجِلَةً تَلُوثُ خِمَارَهَا حَتَّى لَقِيَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا لَكِ يَا أُمَّ سُلَيْمٍ ‏”‏ ‏.‏ فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ أَدَعَوْتَ عَلَى يَتِيمَتِي قَالَ ‏”‏ وَمَا ذَاكِ يَا أُمَّ سُلَيْمٍ ‏”‏ ‏.‏ قَالَتْ زَعَمَتْ أَنَّكَ دَعَوْتَ أَنْ لاَ يَكْبَرَ سِنُّهَا وَلاَ يَكْبَرَ قَرْنُهَا – قَالَ – فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏”‏ يَا أُمَّ سُلَيْمٍ أَمَا تَعْلَمِينَ أَنَّ شَرْطِي عَلَى رَبِّي أَنِّي اشْتَرَطْتُ عَلَى رَبِّي فَقُلْتُ إِنَّمَا أَنَا بَشَرٌ أَرْضَى كَمَا يَرْضَى الْبَشَرُ وَأَغْضَبُ كَمَا يَغْضَبُ الْبَشَرُ فَأَيُّمَا أَحَدٍ دَعَوْتُ عَلَيْهِ مِنْ أُمَّتِي بِدَعْوَةٍ لَيْسَ لَهَا بِأَهْلٍ أَنْ تَجْعَلَهَا لَهُ طَهُورًا وَزَكَاةً وَقُرْبَةً يُقَرِّبُهُ بِهَا مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏ ‏


وَقَالَ أَبُو مَعْنٍ يُتَيِّمَةٌ ‏.‏ بِالتَّصْغِيرِ فِي الْمَوَاضِعِ الثَّلاَثَةِ مِنَ الْحَدِيثِ ‏

என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டு, “நீயா அது? மிகவும் வளர்ந்துவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!” என்று கூறினார்கள். அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்றாள். உம்மு ஸுலைம் (ரலி), “மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுமி, “நபி (ஸல்) என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?” என்று கூறினாள்.

உடனே உம்மு ஸுலைம் (ரலி) தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உம்மு ஸுலைமே! உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரலி), “அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருக்கும் அநாதைச் சிறுமிக்கெதிராக நீங்கள் பிரார்த்தித்தீர்களா?” என்று கேட்டார்.

நபி (ஸல்), “என்ன விஷயம், உம்மு ஸுலைமே?” என்று  கேட்டார்கள். உம்மு ஸுலைம் (ரலி), “அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அவளுடைய ஆயுள் கூடாமல்  போகட்டும் என நீங்கள் பிரார்த்தித்ததாக அச்சிறுமி கூறினாள்” என்றார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள்.

பிறகு, “உம்மு ஸுலைமே! நான் என் இறைவனிடம் முன்வைத்துள்ள நிபந்தனையை நீ அறிவாயா? நான் என் இறைவனிடம், நான் ஒரு மனிதனே! எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியடைவதைப் போன்று நானும் மகிழ்ச்சியடைகின்றேன். எல்லா மனிதர்களும் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்படுகின்றேன். ஆகவே, நான் என் சமுதாயத்தாரில் யாரேனும் ஒருவருக்கெதிராகப் பிரார்த்தித்து, அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால், அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் மறுமை நாளில்  உன்னிடம் நெருக்கமாக்கும் செயலாகவும் மாற்றிவிடுவாயாக!’ என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.

அறறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அபூமஅன் அர்ரகாஷீ (ரஹ்) வழி அறிவிப்பில், (‘அநாதைச் சிறுமி’ எனும்) மூன்று இடங்களிலும் (‘யதீமா’ எனும் சொல்லுக்குப் பகரமாக, ‘சிறிய அநாதைப் பெண்’ எனும்) ‘யுதய்யிமா’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: