அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4693

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي حَمْزَةَ الْقَصَّابِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏ ‏

كُنْتُ أَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَارَيْتُ خَلْفَ بَابٍ – قَالَ – فَجَاءَ فَحَطَأَنِي حَطْأَةً وَقَالَ ‏”‏ اذْهَبْ وَادْعُ لِي مُعَاوِيَةَ ‏”‏ ‏.‏ قَالَ فَجِئْتُ فَقُلْتُ هُوَ يَأْكُلُ – قَالَ – ثُمَّ قَالَ لِيَ ‏”‏ اذْهَبْ وَادْعُ لِي مُعَاوِيَةَ ‏”‏ ‏.‏ قَالَ فَجِئْتُ فَقُلْتُ هُوَ يَأْكُلُ فَقَالَ ‏”‏ لاَ أَشْبَعَ اللَّهُ بَطْنَهُ ‏”‏


قَالَ ابْنُ الْمُثَنَّى قُلْتُ لأُمَيَّةَ مَا حَطَأَنِي قَالَ قَفَدَنِي قَفْدَةً ‏

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ كُنْتُ أَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاخْتَبَأْتُ مِنْهُ ‏.‏ فَذَكَرَ بِمِثْلِهِ

நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கு வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, “நீ போய் முஆவியாவை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார்கள். (முஆவியா, நபியவர்களின் எழுத்தராக இருந்தார்.)

அவ்வாறே நான் சென்றுவிட்டு வந்து, “அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) என்னிடம், “நீ போய் முஆவியாவை என்னிடம் வரச் சொல்” என்று கூறினார்கள். மீண்டும் நான் சென்றுவிட்டு வந்து, “அவர் (இன்னும்) சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ், அவருடைய வயிற்றை நிரப்பாமல் விடட்டும்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) உமய்யா பின் காலித் (ரஹ்) அவர்களிடம், (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘ஹத்தஅனீ’ எனும் சொல்லுக்கு என்ன பொருள்?‘ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் பிடறியில் ஒரு தட்டுத் தட்டினார்கள்” என்பது பொருள் என்றார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அந்நள்ரு பின் ஷுமைல் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் (ஒரு முறை) சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள். உடனே நான் சென்று ஒளிந்துகொண்டேன்…” என்று ஆரம்பமாகிறது.

Share this Hadith: