அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4693

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي حَمْزَةَ الْقَصَّابِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏ ‏

كُنْتُ أَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَارَيْتُ خَلْفَ بَابٍ – قَالَ – فَجَاءَ فَحَطَأَنِي حَطْأَةً وَقَالَ ‏”‏ اذْهَبْ وَادْعُ لِي مُعَاوِيَةَ ‏”‏ ‏.‏ قَالَ فَجِئْتُ فَقُلْتُ هُوَ يَأْكُلُ – قَالَ – ثُمَّ قَالَ لِيَ ‏”‏ اذْهَبْ وَادْعُ لِي مُعَاوِيَةَ ‏”‏ ‏.‏ قَالَ فَجِئْتُ فَقُلْتُ هُوَ يَأْكُلُ فَقَالَ ‏”‏ لاَ أَشْبَعَ اللَّهُ بَطْنَهُ ‏”‏


قَالَ ابْنُ الْمُثَنَّى قُلْتُ لأُمَيَّةَ مَا حَطَأَنِي قَالَ قَفَدَنِي قَفْدَةً ‏

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ كُنْتُ أَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاخْتَبَأْتُ مِنْهُ ‏.‏ فَذَكَرَ بِمِثْلِهِ

நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கு வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, “நீ போய் முஆவியாவை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார்கள். (முஆவியா, நபியவர்களின் எழுத்தராக இருந்தார்.)

அவ்வாறே நான் சென்றுவிட்டு வந்து, “அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) என்னிடம், “நீ போய் முஆவியாவை என்னிடம் வரச் சொல்” என்று கூறினார்கள். மீண்டும் நான் சென்றுவிட்டு வந்து, “அவர் (இன்னும்) சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ், அவருடைய வயிற்றை நிரப்பாமல் விடட்டும்!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்புகள் :

முஹம்மது பின் அல்முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) உமய்யா பின் காலித் (ரஹ்) அவர்களிடம், (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘ஹத்தஅனீ’ எனும் சொல்லுக்கு என்ன பொருள்?‘ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என் பிடறியில் ஒரு தட்டுத் தட்டினார்கள்” என்பது பொருள் என்றார்கள்” என இடம்பெற்றுள்ளது.

அந்நள்ரு பின் ஷுமைல் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் (ஒரு முறை) சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்தார்கள். உடனே நான் சென்று ஒளிந்துகொண்டேன்…” என்று ஆரம்பமாகிறது.

அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4692

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي طَلْحَةَ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ:‏ ‏

كَانَتْ عِنْدَ أُمِّ سُلَيْمٍ يَتِيمَةٌ وَهِيَ أُمُّ أَنَسٍ فَرَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْيَتِيمَةَ فَقَالَ ‏”‏ آنْتِ هِيَهْ لَقَدْ كَبِرْتِ لاَ كَبِرَ سِنُّكِ ‏”‏ ‏.‏ فَرَجَعَتِ الْيَتِيمَةُ إِلَى أُمِّ سُلَيْمٍ تَبْكِي فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ مَا لَكِ يَا بُنَيَّةُ قَالَتِ الْجَارِيَةُ دَعَا عَلَىَّ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ يَكْبَرَ سِنِّي فَالآنَ لاَ يَكْبَرُ سِنِّي أَبَدًا – أَوْ قَالَتْ قَرْنِي – فَخَرَجَتْ أُمُّ سُلَيْمٍ مُسْتَعْجِلَةً تَلُوثُ خِمَارَهَا حَتَّى لَقِيَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا لَكِ يَا أُمَّ سُلَيْمٍ ‏”‏ ‏.‏ فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ أَدَعَوْتَ عَلَى يَتِيمَتِي قَالَ ‏”‏ وَمَا ذَاكِ يَا أُمَّ سُلَيْمٍ ‏”‏ ‏.‏ قَالَتْ زَعَمَتْ أَنَّكَ دَعَوْتَ أَنْ لاَ يَكْبَرَ سِنُّهَا وَلاَ يَكْبَرَ قَرْنُهَا – قَالَ – فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ ‏”‏ يَا أُمَّ سُلَيْمٍ أَمَا تَعْلَمِينَ أَنَّ شَرْطِي عَلَى رَبِّي أَنِّي اشْتَرَطْتُ عَلَى رَبِّي فَقُلْتُ إِنَّمَا أَنَا بَشَرٌ أَرْضَى كَمَا يَرْضَى الْبَشَرُ وَأَغْضَبُ كَمَا يَغْضَبُ الْبَشَرُ فَأَيُّمَا أَحَدٍ دَعَوْتُ عَلَيْهِ مِنْ أُمَّتِي بِدَعْوَةٍ لَيْسَ لَهَا بِأَهْلٍ أَنْ تَجْعَلَهَا لَهُ طَهُورًا وَزَكَاةً وَقُرْبَةً يُقَرِّبُهُ بِهَا مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏ ‏


وَقَالَ أَبُو مَعْنٍ يُتَيِّمَةٌ ‏.‏ بِالتَّصْغِيرِ فِي الْمَوَاضِعِ الثَّلاَثَةِ مِنَ الْحَدِيثِ ‏

என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டு, “நீயா அது? மிகவும் வளர்ந்துவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!” என்று கூறினார்கள். அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு ஸுலைம் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்றாள். உம்மு ஸுலைம் (ரலி), “மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுமி, “நபி (ஸல்) என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?” என்று கூறினாள்.

உடனே உம்மு ஸுலைம் (ரலி) தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உம்மு ஸுலைமே! உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரலி), “அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருக்கும் அநாதைச் சிறுமிக்கெதிராக நீங்கள் பிரார்த்தித்தீர்களா?” என்று கேட்டார்.

நபி (ஸல்), “என்ன விஷயம், உம்மு ஸுலைமே?” என்று  கேட்டார்கள். உம்மு ஸுலைம் (ரலி), “அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அவளுடைய ஆயுள் கூடாமல்  போகட்டும் என நீங்கள் பிரார்த்தித்ததாக அச்சிறுமி கூறினாள்” என்றார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள்.

பிறகு, “உம்மு ஸுலைமே! நான் என் இறைவனிடம் முன்வைத்துள்ள நிபந்தனையை நீ அறிவாயா? நான் என் இறைவனிடம், நான் ஒரு மனிதனே! எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியடைவதைப் போன்று நானும் மகிழ்ச்சியடைகின்றேன். எல்லா மனிதர்களும் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்படுகின்றேன். ஆகவே, நான் என் சமுதாயத்தாரில் யாரேனும் ஒருவருக்கெதிராகப் பிரார்த்தித்து, அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால், அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் மறுமை நாளில்  உன்னிடம் நெருக்கமாக்கும் செயலாகவும் மாற்றிவிடுவாயாக!’ என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளேன்” என்று கூறினார்கள்.

அறறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

அபூமஅன் அர்ரகாஷீ (ரஹ்) வழி அறிவிப்பில், (‘அநாதைச் சிறுமி’ எனும்) மூன்று இடங்களிலும் (‘யதீமா’ எனும் சொல்லுக்குப் பகரமாக, ‘சிறிய அநாதைப் பெண்’ எனும்) ‘யுதய்யிமா’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4691

حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّمَا أَنَا بَشَرٌ وَإِنِّي اشْتَرَطْتُ عَلَى رَبِّي عَزَّ وَجَلَّ أَىُّ عَبْدٍ مِنَ الْمُسْلِمِينَ سَبَبْتُهُ أَوْ شَتَمْتُهُ أَنْ يَكُونَ ذَلِكَ لَهُ زَكَاةً وَأَجْرًا ‏”‏


حَدَّثَنِيهِ ابْنُ أَبِي خَلَفٍ، حَدَّثَنَا رَوْحٌ، ح وَحَدَّثَنَاهُ عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، جَمِيعًا عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் ஒரு மனிதனே. நான் வல்லமையும் மாண்பும் மிக்க என் இறைவனிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளேன்: நான் முஸ்லிம்களில் ஓர் அடியாரை ஏசியிருந்தால், அல்லது திட்டியிருந்தால், அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் மாற்றி விடுவாயாக!” என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4690

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي اتَّخَذْتُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيهِ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ أَوْ جَلَدْتُهُ فَاجْعَلْ ذَلِكَ كَفَّارَةً لَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! நீ ஒருபோதும் மாறு செய்யாத ஓர் உறுதிமொழியை நான் உன்னிடம் எடுத்துள்ளேன். இறைநம்பிக்கையாளர் யாரையாவது நான் ஏசியிருந்தால், அல்லது அடித்திருந்தால் அதையே அவருக்கு மறுமையில் பாவப் பரிகாரமாக மாற்றி விடுவாயாக!” என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4689

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

‏أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ فَأَيُّمَا عَبْدٍ مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! நான் இறைநம்பிக்கையுள்ள எந்த அடியாரையாவது ஏசியிருந்தால், அதையே அவருக்கு மறுமை நாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் செயலாக மாற்றிவிடுவாயாக!” என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4688

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ سَالِمٍ مَوْلَى النَّصْرِيِّينَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنَّمَا مُحَمَّدٌ بَشَرٌ يَغْضَبُ كَمَا يَغْضَبُ الْبَشَرُ وَإِنِّي قَدِ اتَّخَذْتُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيهِ فَأَيُّمَا مُؤْمِنٍ آذَيْتُهُ أَوْ سَبَبْتُهُ أَوْ جَلَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ كَفَّارَةً وَقُرْبَةً تُقَرِّبُهُ بِهَا إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! முஹம்மது ஒரு மனிதரே! மனிதர்கள் கோபப்படுவதைப் போன்றே அவரும் கோபப்படுவார். நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுத்துள்ளேன், அதற்கு நீ மாறு செய்யமாட்டாய்: நான் இறை நம்பிக்கையாளர் யாரையாவது மன வேதனைப்படுத்தியிருந்தால், அல்லது ஏசியிருந்தால், அல்லது அடித்திருந்தால் அதையே அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும் செயலாகவும் மாற்றிடுவாயாக!” என்று இறைஞ்சியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4687

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيَّ – عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أَتَّخِذُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيهِ فَإِنَّمَا أَنَا بَشَرٌ فَأَىُّ الْمُؤْمِنِينَ آذَيْتُهُ شَتَمْتُهُ لَعَنْتُهُ جَلَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ صَلاَةً وَزَكَاةً وَقُرْبَةً تُقَرِّبُهُ بِهَا إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏


حَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ إِلاَّ أَنَّهُ قَالَ ‏”‏ أَوْ جَلَدُّهُ ‏”‏ ‏.‏ قَالَ أَبُو الزِّنَادِ وَهِيَ لُغَةُ أَبِي هُرَيْرَةَ وَإِنَّمَا هِيَ ‏”‏ جَلَدْتُهُ ‏”‏ ‏

حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ

நபி (ஸல்), “இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கின்றேன், அதற்கு நீ மாறு செய்யமாட்டாய்: நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் இறைநம்பிக்கையாளர் யாரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப்படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித்திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப் பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் செயலாகவும் மாற்றிவிடுவாயாக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவரை அடித்திருந்தால் …”  என்பதைக் குறிக்க ‘ஜலத்துஹு’ என்று இடம்பெற்றுள்ளது. இது அபூஹுரைரா (ரலி) அவர்களின் மொழி வழக்காகும். ஹதீஸின் மூலத்தில், ‘ஜலத்த்துஹு’ என்றே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4686

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ اللَّهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَأَيُّمَا رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ سَبَبْتُهُ أَوْ لَعَنْتُهُ أَوْ جَلَدْتُهُ فَاجْعَلْهَا لَهُ زَكَاةً وَرَحْمَةً ‏”‏ ‏


وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ إِلاَّ أَنَّ فِيهِ ‏ “‏ زَكَاةً وَأَجْرًا ‏”‏

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِإِسْنَادِ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏.‏ مِثْلَ حَدِيثِهِ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِ عِيسَى جَعَلَ ‏”‏ وَأَجْرًا ‏”‏ ‏.‏ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ وَجَعَلَ ‏”‏ وَرَحْمَةً ‏”‏ ‏.‏ فِي حَدِيثِ جَابِرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் முஸ்லிம்களில் எவரையேனும் ஏசியிருந்தால், அல்லது சபித்திருந்தால், அல்லது அடித்திருந்தால் அவற்றை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

ஜாபிர் (ரலி) வழி அறிவிப்பில், “பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் (மாற்றிடுவாயாக!)” என்று இடம்பெற்றுள்ளது.

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நன்மையாகவும்” என்பதை அபூஹுரைரா (ரலி) அறிவிப்பிலும், “அருளாகவும்” என்பதை ஜாபிர் (ரலி) அறிவிப்பிலும் இடம்பெறச் செய்துள்ளார்கள்.

அத்தியாயம்: 45, பாடம்: 25, ஹதீஸ் எண்: 4685

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاَنِ فَكَلَّمَاهُ بِشَىْءٍ لاَ أَدْرِي مَا هُوَ فَأَغْضَبَاهُ فَلَعَنَهُمَا وَسَبَّهُمَا فَلَمَّا خَرَجَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَصَابَ مِنَ الْخَيْرِ شَيْئًا مَا أَصَابَهُ هَذَانِ قَالَ ‏”‏ وَمَا ذَاكِ ‏”‏ ‏.‏ قَالَتْ قُلْتُ لَعَنْتَهُمَا وَسَبَبْتَهُمَا قَالَ ‏”‏ أَوَمَا عَلِمْتِ مَا شَارَطْتُ عَلَيْهِ رَبِّي قُلْتُ اللَّهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَأَىُّ الْمُسْلِمِينَ لَعَنْتُهُ أَوْ سَبَبْتُهُ فَاجْعَلْهُ لَهُ زَكَاةً وَأَجْرًا ‏”‏ ‏


حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَاهُ عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، جَمِيعًا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَ حَدِيثِ جَرِيرٍ وَقَالَ فِي حَدِيثِ عِيسَى فَخَلَوَا بِهِ فَسَبَّهُمَا وَلَعَنَهُمَا وَأَخْرَجَهُمَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருவர் வந்தனர். நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள்.

அவ்விருவரும் சென்றதும், நான், “அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை” என்று கூறினேன். அதற்கு “அது எதனால்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், “அவ்விருவரையும் நீங்கள் சபித்தீர்களே? ஏசினீர்களே?” என்று பதிலளித்தேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் என் இறைவனிடம் நிபந்தனையிட்டுக் கூறியுள்ளதை நீ அறிவாயா? இறைவா! நான் ஒரு மனிதனே! நான் முஸ்லிம்களில் ஒருவரைச் சபித்திருந்தாலோ, ஏசியிருந்தாலோ அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் ஆக்கிவிடுவாயாக! என்று வேண்டியிருக்கின்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தனியாகப் பேசினர். அப்போது அவ்விருவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏசினார்கள்; சபித்தார்கள். பிறகு அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.