அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 888

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ دَاوُدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ :‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحْ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعْنَ لَهُ صَلَاتَهُ وَإِنْ كَانَ صَلَّى إِتْمَامًا لِأَرْبَعٍ كَانَتَا ‏ ‏تَرْغِيمًا ‏ ‏لِلشَّيْطَانِ ‏


‏حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَمِّي ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏دَاوُدُ بْنُ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي مَعْنَاهُ ‏ ‏قَالَ ‏ ‏يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ السَّلَامِ كَمَا قَالَ ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ

“உங்களில் ஒருவருக்கு, அவர் தொழுத ரக்அத்கள் மூன்றா நான்கா எனும் ஐயம் ஏற்பட்டால் ஐயத்துக்குரிய(அதிக எண்ணிக்கையான)தைக் கைவிட்டு, உறுதியான(குறைந்த எண்ணிக்கைய)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு, ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும். அவர் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு ஸஜ்தாக்களால்) அவை (அவரது தொழுகையை) அவருக்கு இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் நிறைவாகத் தொழுதுவிட்டிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமைந்து விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

வேறொரு அறிவிப்பான தாவூது பின் கைஸ் (ரஹ்) வழி அறிவிப்பிலும் “ஸலாம் கொடுப்பதற்குமுன் இரு ஸஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” எனும் இதே ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) கூற்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment