حَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ وَمُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ قَالَ عَمْرٌو أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ أَنَّ مُوسَى بْنَ سَعْدٍ الْأَنْصَارِيَّ حَدَّثَهُ عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ :
صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ فَلَمَّا انْصَرَفَ أَتَاهُ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرِيدُ أَنْ نَنْحَرَ جَزُورًا لَنَا وَنَحْنُ نُحِبُّ أَنْ تَحْضُرَهَا قَالَ نَعَمْ فَانْطَلَقَ وَانْطَلَقْنَا مَعَهُ فَوَجَدْنَا الْجَزُورَ لَمْ تُنْحَرْ فَنُحِرَتْ ثُمَّ قُطِّعَتْ ثُمَّ طُبِخَ مِنْهَا ثُمَّ أَكَلْنَا قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ
و قَالَ الْمُرَادِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ ابْنِ لَهِيعَةَ وَعَمْرِو بْنِ الْحَارِثِ فِي هَذَا الْحَدِيثِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள்) எங்களுக்கு அஸ்ருத் தொழுகையைத் தொழவைத்து முடித்தார்கள். அப்போது அவர்களிடம் பனூஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரிய ஓர் ஒட்டகத்தை அறுக்க விரும்புகிறோம். அ(ந்த விருந்)தில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘சரி’ என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நாங்களும் அவர்களுடன் நடந்தோம். அந்த ஒட்டகம் இன்னும் அறுக்கப்படாமலிருப்பதைக் கண்டோம். பின்னர் அது அறுக்கப்பட்டு சிறுசிறு துண்டுகளாக்கப்பட்டது. பிறகு அதில் சிறிது சமைக்கப்பட்டது. பின்னர் நாங்கள் அதைச் சூரியன் மறைவதற்குள் உண்டு முடித்தோம்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)
குறிப்பு :
“ஓர் ஒட்டகத்தை அறுத்து, துண்டுகள் போட்டு, சமைத்து சாப்பிடுவதுவரை அஸ்ருக்கும் மக்ரிபுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்து முடிந்தன. அந்த அளவிற்கு அஸ்ரை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுதோம்” என்று அனஸ் (ரலி) கூறமுனைவது இங்குக் கருத்தாகும்.