அத்தியாயம்: 5, பாடம்: 35, ஹதீஸ் எண்: 990

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّجَاشِيِّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏يَقُولُا ‏

كُنَّا نُصَلِّي الْعَصْرَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثُمَّ تُنْحَرُ ‏ ‏الْجَزُورُ ‏ ‏فَتُقْسَمُ عَشَرَ قِسَمٍ ثُمَّ تُطْبَخُ فَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا قَبْلَ مَغِيبِ الشَّمْسِ ‏

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏وَشُعَيْبُ بْنُ إِسْحَقَ الدِّمَشْقِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ كُنَّا نَنْحَرُ ‏ ‏الْجَزُورَ ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعْدَ الْعَصْرِ وَلَمْ يَقُلْ كُنَّا نُصَلِّي مَعَهُ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ருத் தொழுகை தொழுவோம். பிறகு ஒட்டகம் அறுக்கப்படும். அது பத்துக் கூறுகளாகப் பங்கிடப்படும். பிறகு அது சமைக்கப்படும். நாங்கள் சூரியன் மறைவதற்கு முன் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

குறிப்பு :

அல் அவ்ஸாயீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு ஒட்டகத்தை அறுப்போம் …” என்பது இடம்பெற்றபோதிலும், ” … நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ருத் தொழுவோம்” எனும் சொற்கள் இடம் பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment