حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :
بَيْنَمَا أَنَا أَمْشِي، مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَرْثٍ وَهُوَ مُتَّكِئٌ عَلَى عَسِيبٍ إِذْ مَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ سَلُوهُ عَنِ الرُّوحِ فَقَالُوا مَا رَابَكُمْ إِلَيْهِ لاَ يَسْتَقْبِلُكُمْ بِشَىْءٍ تَكْرَهُونَهُ . فَقَالُوا سَلُوهُ فَقَامَ إِلَيْهِ بَعْضُهُمْ فَسَأَلَهُ عَنِ الرُّوحِ – قَالَ – فَأَسْكَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمْ يَرُدَّ عَلَيْهِ شَيْئًا فَعَلِمْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ – قَالَ – فَقُمْتُ مَكَانِي فَلَمَّا نَزَلَ الْوَحْىُ قَالَ { وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً}
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالاَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَرْثٍ بِالْمَدِينَةِ . بِنَحْوِ حَدِيثِ حَفْصٍ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ وَكِيعٍ وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً . وَفِي حَدِيثِ عِيسَى بْنِ يُونُسَ وَمَا أُوتُوا . مِنْ رِوَايَةِ ابْنِ خَشْرَمٍ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ إِدْرِيسَ، يَقُولُ سَمِعْتُ الأَعْمَشَ، يَرْوِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي نَخْلٍ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ عَنِ الأَعْمَشِ وَقَالَ فِي رِوَايَتِهِ وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு (பேரீச்சந்தோப்பு) வேளாண் பூமியில் சென்று கொண்டிருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றிக்கொண்டு யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள்.
அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி), “இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்றார். மற்றவர்கள், “உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக்கூடாது (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)” என்றார்கள். பின்னர் அவர்கள், “(சரி) அவரிடம் நீங்கள் கேளுங்கள்” என்றனர்.
உடனே அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, உயிரைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) மௌனமாக இருந்தார்கள். கேட்டவருக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. நபியவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது என நான் அறிந்து கொண்டேன். ஆகவே, அதே இடத்தில் நின்றுகொண்டேன்.
வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள் “(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். ‘உயிர் என்பது என் இறைவனின் கட்டளைப்படி உள்ளது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவு மிகக் குறைவே’ என்று கூறுவீராக” (17:85) எனும் இறைவசனத்தைக் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
குறிப்புகள் :
ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஒரு வேளாண் பூமியில் சென்றுகொண்டிருந்தேன் …” என்று ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அலீ பின் கஷ்ரம் (ரஹ்) வழி அறிவிப்பில், (உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) என்றில்லாமல்) “அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட”) என்று இடம்பெற்றுள்ளதாக ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) கூறியதாகக் காணப்படுகிறது. வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில் “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட” என்றே இடம்பெற்றுள்ளது.
அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) ஒரு பேரீச்சந்தோட்டத்தில் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியபடி இருந்தார்கள்…” என்று ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பிலும் “உங்களுக்குக் கொடுக்கப்பட்ட” என்றே காணப்படுகிறது.