அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5262

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو هَانِئٍ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يَقُولُ :‏

سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَسَأَلَهُ، رَجُلٌ فَقَالَ أَلَسْنَا مِنْ فُقَرَاءِ الْمُهَاجِرِينَ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ أَلَكَ امْرَأَةٌ تَأْوِي إِلَيْهَا قَالَ نَعَمْ ‏.‏ قَالَ أَلَكَ مَسْكَنٌ تَسْكُنُهُ قَالَ نَعَمْ قَالَ فَأَنْتَ مِنَ الأَغْنِيَاءِ قَالَ فَإِنَّ لِي خَادِمًا قَالَ فَأَنْتَ مِنَ الْمُلُوكِ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ وَجَاءَ ثَلاَثَةُ نَفَرٍ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ وَأَنَا عِنْدَهُ فَقَالُوا يَا أَبَا مُحَمَّدٍ إِنَّا وَاللَّهِ مَا نَقْدِرُ عَلَى شَىْءٍ لاَ نَفَقَةٍ وَلاَ دَابَّةٍ وَلاَ مَتَاعٍ ‏.‏ فَقَالَ لَهُمْ مَا شِئْتُمْ إِنْ شِئْتُمْ رَجَعْتُمْ إِلَيْنَا فَأَعْطَيْنَاكُمْ مَا يَسَّرَ اللَّهُ لَكُمْ وَإِنْ شِئْتُمْ ذَكَرْنَا أَمْرَكُمْ لِلسُّلْطَانِ وَإِنْ شِئْتُمْ صَبَرْتُمْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ يَسْبِقُونَ الأَغْنِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ إِلَى الْجَنَّةِ بِأَرْبَعِينَ خَرِيفًا ‏”‏ ‏.‏ قَالُوا فَإِنَّا نَصْبِرُ لاَ نَسْأَلُ شَيْئًا

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர், “நாம் முஹாஜிர்களுள் ஏழையல்லவா?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “நீர் அமைதி பெற உமக்கு மனைவி இருக்கின்றாளில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம் (இருக்கின்றாள்)” என்றார்.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “வசிப்பதற்கு உமக்கு வீடு இருக்கின்றதல்லவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கின்றது)” என்றார். “அவ்வாறாயின், நீர் செல்வந்தர்களுள் ஒருவராவீர்” என்று கூறினார்கள். அவர் “என்னிடம் பணியாளர் ஒருவரும் இருக்கின்றார்” என்றார். “அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்” என்றார்கள்.

– அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்)  கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), “அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப் பொருட்களோ இல்லை” என்று கூறினர்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “நீங்கள் எதை நாடுகின்றீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ’ஏழை முஹாஜிர்கள் மறுமை நாளில் செல்வந்தர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்’ என்று கூறியதைக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அதற்கு அவர்கள் (மூவரும்), “அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்” என்று கூறிவிட்டனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்)

Share this Hadith: