அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5262

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو هَانِئٍ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يَقُولُ :‏

سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَسَأَلَهُ، رَجُلٌ فَقَالَ أَلَسْنَا مِنْ فُقَرَاءِ الْمُهَاجِرِينَ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ أَلَكَ امْرَأَةٌ تَأْوِي إِلَيْهَا قَالَ نَعَمْ ‏.‏ قَالَ أَلَكَ مَسْكَنٌ تَسْكُنُهُ قَالَ نَعَمْ قَالَ فَأَنْتَ مِنَ الأَغْنِيَاءِ قَالَ فَإِنَّ لِي خَادِمًا قَالَ فَأَنْتَ مِنَ الْمُلُوكِ ‏.‏ قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ وَجَاءَ ثَلاَثَةُ نَفَرٍ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ وَأَنَا عِنْدَهُ فَقَالُوا يَا أَبَا مُحَمَّدٍ إِنَّا وَاللَّهِ مَا نَقْدِرُ عَلَى شَىْءٍ لاَ نَفَقَةٍ وَلاَ دَابَّةٍ وَلاَ مَتَاعٍ ‏.‏ فَقَالَ لَهُمْ مَا شِئْتُمْ إِنْ شِئْتُمْ رَجَعْتُمْ إِلَيْنَا فَأَعْطَيْنَاكُمْ مَا يَسَّرَ اللَّهُ لَكُمْ وَإِنْ شِئْتُمْ ذَكَرْنَا أَمْرَكُمْ لِلسُّلْطَانِ وَإِنْ شِئْتُمْ صَبَرْتُمْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ يَسْبِقُونَ الأَغْنِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ إِلَى الْجَنَّةِ بِأَرْبَعِينَ خَرِيفًا ‏”‏ ‏.‏ قَالُوا فَإِنَّا نَصْبِرُ لاَ نَسْأَلُ شَيْئًا

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர், “நாம் முஹாஜிர்களுள் ஏழையல்லவா?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “நீர் அமைதி பெற உமக்கு மனைவி இருக்கின்றாளில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம் (இருக்கின்றாள்)” என்றார்.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “வசிப்பதற்கு உமக்கு வீடு இருக்கின்றதல்லவா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (இருக்கின்றது)” என்றார். “அவ்வாறாயின், நீர் செல்வந்தர்களுள் ஒருவராவீர்” என்று கூறினார்கள். அவர் “என்னிடம் பணியாளர் ஒருவரும் இருக்கின்றார்” என்றார். “அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்” என்றார்கள்.

– அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்)  கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), “அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப் பொருட்களோ இல்லை” என்று கூறினர்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), “நீங்கள் எதை நாடுகின்றீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ’ஏழை முஹாஜிர்கள் மறுமை நாளில் செல்வந்தர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்’ என்று கூறியதைக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அதற்கு அவர்கள் (மூவரும்), “அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்” என்று கூறிவிட்டனர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) வழியாக அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5261

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ :‏

سَمِعْتُ النُّعْمَانَ يَخْطُبُ قَالَ ذَكَرَ عُمَرُ مَا أَصَابَ النَّاسُ مِنَ الدُّنْيَا فَقَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَظَلُّ الْيَوْمَ يَلْتَوِي مَا يَجِدُ دَقَلاً يَمْلأُ بِهِ بَطْنَهُ

நுஅமான் பின் பஷீர் (ரலி) உரையாற்றுகையில் கூறினார்கள்:

உமர் (ரலி), மக்களுக்கு(த் தற்போது) ஏற்பட்டுள்ள வாழ்க்கை வளம் பற்றி நினைவுகூர்ந்தார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான பேரீச்சம் பழம்கூட கிடைக்காத நிலையில் ஒரு நாள் முழுவதும் சுருண்டு கிடந்ததை நான் கண்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5260

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ قَالَ :‏

سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ أَلَسْتُمْ فِي طَعَامٍ وَشَرَابٍ مَا شِئْتُمْ لَقَدْ رَأَيْتُ نَبِيَّكُمْ صلى الله عليه وسلم وَمَا يَجِدُ مِنَ الدَّقَلِ مَا يَمْلأُ بِهِ بَطْنَهُ


وَقُتَيْبَةُ لَمْ يَذْكُرْ بِهِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ، بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا الْمُلاَئِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، كِلاَهُمَا عَنْ سِمَاكٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَهُ وَزَادَ فِي حَدِيثِ زُهَيْرٍ وَمَا تَرْضَوْنَ دُونَ أَلْوَانِ التَّمْرِ وَالزُّبْدِ

“(இன்று) நீங்கள் விரும்பும் உணவும் பானமும் உங்களிடம் இருக்கின்றன அல்லவா? ஆனால், உங்கள் நபி (ஸல்) அவர்களோ தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான உலர்ந்த பேரீச்சம் பழம்கூட கிடைக்காத நிலையில் இருந்ததை நான் கண்டுள்ளேன்” என்று நுஅமான் பின் பஷீர் (ரலி) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) வழியாக ஸிமாக் பின் ஹர்பு (ரஹ்)


குறிப்பு :

குதைபா (ரஹ்) அறிவிப்பில், ”(மட்டமான உலர்ந்த பேரீச்சம் பழம்) அதுகூட கிடைக்காமல் .” என்று இடம்பெற்றுள்ளது.

ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “ஆனால், நீங்களோ (இன்று) பல நிறப் பேரீச்சம் பழங்களுக்கும் வெண்ணெய்க்கும் குறைவானதைக் கொண்டு திருப்தி அடைவதில்லை” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5259

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، حَدَّثَنِي أَبُو حَازِمٍ قَالَ :‏

رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يُشِيرُ بِإِصْبَعِهِ مِرَارًا يَقُولُ وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ مَا شَبِعَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ ثَلاَثَةَ أَيَّامٍ تِبَاعًا مِنْ خُبْزِ حِنْطَةٍ حَتَّى فَارَقَ الدُّنْيَا

அபூஹுரைரா (ரலி), தம் விரலால் பல முறை சைகை செய்தபடி, “அபூ ஹுரைராவின் உயிர் கையிலுள்ளவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வுலகைப் பிரியும்வரை அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தாரும் கோதுமை ரொட்டியை மூன்று நாள்கள் தொடர்ந்து வயிறு நிரம்ப உண்டதில்லை” என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஹாஸிம் (ரஹ்)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5258

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، – يَعْنِيَانِ الْفَزَارِيَّ – عَنْ يَزِيدَ، – وَهُوَ ابْنُ كَيْسَانَ – عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

وَالَّذِي نَفْسِي بِيَدِهِ – وَقَالَ ابْنُ عَبَّادٍ وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ – مَا أَشْبَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَهْلَهُ ثَلاَثَةَ أَيَّامٍ تِبَاعًا مِنْ خُبْزِ حِنْطَةٍ حَتَّى فَارَقَ الدُّنْيَا

“என் உயிர் கையிலுள்ளவன்மீது சத்தியமாக! (அல்லது அபூஹுரைராவின் உயிர் கையில் உள்ளவன்மீது சத்தியமாக!) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வுலகைப் பிரியும்வரை கோதுமை ரொட்டியைத் தொடர்ந்து மூன்று நாள்கள் தம் குடும்பத்தாருக்கு வயிறு நிரம்ப அளித்திருக்கவில்லை” என்று அபூஹுரைரா (ரலி) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஹாஸிம் (ரஹ்)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5257

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ الْمَاءِ وَالتَّمْرِ


وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا الأَشْجَعِيُّ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، كِلاَهُمَا عَنْ سُفْيَانَ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ فِي، حَدِيثِهِمَا عَنْ سُفْيَانَ وَمَا شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ

இரு கருப்புகள் (என அறியப்பட்ட) பேரீச்சம் பழமும் தண்ணீரும் உட்கொண்டு நாங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிந்த நாட்களுள் ஒன்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி


குறிப்பு :

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ இரு கருப்புகள் (என அறியப்பட்ட) பேரீச்சம் பழமும் தண்ணீரும் உட்கொண்டு நாங்கள் வயிறு நிரம்பியிராத நிலையில் (இறந்தார்கள்)” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5256

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَكِّيُّ الْعَطَّارُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ ح وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْعَطَّارُ، حَدَّثَنِي مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحَجَبِيُّ عَنْ أُمِّهِ، صَفِيَّةَ عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ شَبِعَ النَّاسُ مِنَ الأَسْوَدَيْنِ التَّمْرِ وَالْمَاءِ

இரு கருப்புகள் (என அறியப்பட்ட) பேரீச்சம் பழமும் தண்ணீரும் உட்கொண்டு மக்கள் வயிற்றை  நிரப்பிக்கொண்டு இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5255

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنِ ابْنِ قُسَيْطٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ :‏

لَقَدْ مَاتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا شَبِعَ مِنْ خُبْزٍ وَزَيْتٍ فِي يَوْمٍ وَاحِدٍ مَرَّتَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒரே நாளில் இரண்டு வேளை ஒலிவ எண்ணெயுடன் ரொட்டியும் வயிறு நிரம்ப உண்ணாமலேயே இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5254

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ رُومَانَ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا كَانَتْ تَقُولُ :‏

وَاللَّهِ يَا ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ – قَالَ – قُلْتُ يَا خَالَةُ فَمَا كَانَ يُعَيِّشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ وَكَانَتْ لَهُمْ مَنَائِحُ فَكَانُوا يُرْسِلُونَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهَا فَيَسْقِينَاهُ

ஆயிஷா (ரலி) (என்னிடம்) “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்கள் மூன்று பிறை பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது” என்று கூறினார்கள்.

அதற்கு நான், “என் சிற்றன்னையே! (அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரு கருப்புகள் (என அறியப்பட்ட)  பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு). இருப்பினும், அன்ஸாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்துகொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்ஸாரிகள் (அன்பளிப்பாகக்) கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 55, பாடம்: 01, ஹதீஸ் எண்: 5253

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ بْنِ كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا فِي رَفِّي مِنْ شَىْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلاَّ شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَىَّ فَكِلْتُهُ فَفَنِيَ

என் (வீட்டு) நிலைப் பேழையிலிருந்த பார்லியைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப் பேழையில் இல்லாத நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டுவந்தேன். பிறகு அதை நான் அளந்(து பார்த்)தபோது (சிறிது காலத்திற்குள்) அது தீர்ந்துபோய்விட்டிருந்து.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)