அத்தியாயம்: 56, பாடம்: 5, ஹதீஸ் எண்: 5330

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُطِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ :‏ ‏

قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ سُورَةُ التَّوْبَةِ قَالَ آلتَّوْبَةِ قَالَ بَلْ هِيَ الْفَاضِحَةُ مَا زَالَتْ تَنْزِلُ وَمِنْهُمْ وَمِنْهُمْ ‏.‏ حَتَّى ظَنُّوا أَنْ لاَ يَبْقَى مِنَّا أَحَدٌ إِلاَّ ذُكِرَ فِيهَا ‏.‏ قَالَ قُلْتُ سُورَةُ الأَنْفَالِ قَالَ تِلْكَ سُورَةُ بَدْرٍ ‏.‏ قَالَ قُلْتُ فَالْحَشْرُ قَالَ نَزَلَتْ فِي بَنِي النَّضِيرِ ‏

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ’அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயம் பற்றிக் கேட்டேன். அவர்கள் ’தவ்பா அத்தியாயமா? அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோரும், இத்தகையோரும் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், நம்மில் ஒருவரைக்கூட விட்டுவைக்காமல் அனைத்துத் தரப்பினரைப் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுவிட்டது என நயவஞ்சகர்கள் எண்ணினார்கள்” என்று கூறினார்கள்.

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ’அல்அன்ஃபால்’ எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள் “அது பத்ருப் போர் (பற்றிப் பேசும்) அத்தியாயமாகும்” என்றார்கள்.

நான் ’அல்ஹஷ்ரு’ எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், “அது (யூத) பனூ நளீர் குலத்தார் குறித்து அருளப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

Share this Hadith: