و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ :
صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا
قُلْتُ يَا أَبَا الشَّعْثَاءِ أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ وَأَخَّرَ الْمَغْرِبَ وَعَجَّلَ الْعِشَاءَ قَالَ وَأَنَا أَظُنُّ ذَاكَ
நான் நபி (ஸல்) அவர்களுடன் எட்டு ரக்அத்(கொண்ட லுஹ்ரு, அஸ்ரு ஆகிய இருதொழுகை)களை ஒரேநேரத்தில் தொழுதிருக்கின்றேன்; ஏழு ரக்அத்(கொண்ட மஃக்ரிப், இஷா ஆகிய இருதொழுகை)களை ஒரேநேரத்தில் தொழுதிருக்கின்றேன்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
குறிப்பு :
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம்), “அபுஷ் ஷஅஸா அவர்களே! நபி (ஸல்) லுஹ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்தி அஸ்ரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுதிருப்பார்கள் என நான் எண்ணுகின்றேன்” என்றேன். அதற்கு, “நானும் அவ்வாறே எண்ணுகின்றேன்” என்று விடையளித்தார்கள் என்று அம்ரு பின் தீனார் (ரஹ்) குறிப்பிடுகிறார்.