அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1155

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِمْرَانُ بْنُ حُدَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ ‏ ‏قَالَ ‏

قَالَ رَجُلٌ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ الصَّلَاةَ فَسَكَتَ ثُمَّ قَالَ لَا أُمَّ لَكَ ‏ ‏أَتُعَلِّمُنَا بِالصَّلَاةِ وَكُنَّا نَجْمَعُ بَيْنَ الصَّلَاتَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “தொழுகை(க்கு நேரமாகிவிட்டது)” என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் “தொழுகை(க்கு நேரமாகி விட்டது)” என்று கூறினார். இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள். பிறகு மீண்டும் அவர் “தொழுகை(க்கு நேரமாகி விட்டது)” என்று கூறினார். அப்போதும் இப்னு அப்பாஸ் (ரலி) அமைதியாக இருந்தார்கள்.

பிறகு, “தாயில்லாமல் போவானே! எங்களுக்கே தொழுகைகளைக் கற்றுத் தருகிறாயா? நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் இணைத்துத் தொழுபவர்களாக இருந்தோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1154

و حَدَّثَنِي ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ الْخِرِّيتِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ ‏ ‏خَطَبَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏يَوْمًا بَعْدَ الْعَصْرِ حَتَّى غَرَبَتْ الشَّمْسُ وَبَدَتْ النُّجُومُ وَجَعَلَ النَّاسُ يَقُولُونَ الصَّلَاةَ الصَّلَاةَ قَالَ فَجَاءَهُ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي تَمِيمٍ ‏ ‏لَا ‏ ‏يَفْتُرُ ‏ ‏وَلَا ‏ ‏يَنْثَنِي ‏ ‏الصَّلَاةَ الصَّلَاةَ ‏

فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏أَتُعَلِّمُنِي بِالسُّنَّةِ لَا أُمَّ لَكَ ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏

قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ شَقِيقٍ ‏ ‏فَحَاكَ فِي صَدْرِي مِنْ ذَلِكَ شَيْءٌ فَأَتَيْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏فَسَأَلْتُهُ فَصَدَّقَ مَقَالَتَهُ

ஒரு நாள் இப்னு அப்பாஸ் (ரலி) அஸ்ரு தொழுகைக்குப் பிறகு, சூரியன் மறைந்து நட்சத்திரங்கள் தோன்றும்வரை எங்களிடையே (நீண்ட) உரையாற்றினார்கள். மக்கள், “தொழுகை, தொழுகை” என்று கூறலாயினர். அப்போது பனூதமீம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து (நின்ற இடத்தைவிட்டும்) நகராமல் இடையறாமல், “தொழுகை தொழுக” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), “நீ எனக்கு நபிவழியைக் கற்றுத் தருகிறாயா? தாயில்லாமல் போவாய்!” என்று (கடிந்து) கூறினார்கள். பிறகு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரேநேரத்திலும் மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து ஒரேநேரத்திலும் தொழுததை நான் பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்)

குறிப்பு :

இப்னு அப்பாஸ் (ரலி) அவ்வாறு கூறியதைக் கேட்டு என் மனதில் நெருடல் ஏற்பட்டது. உடனே நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றை உறுதிப்படுத்தினார்கள் என்று அப்துல்லாஹ் பின் ஷகீக் குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1153

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَّى ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏سَبْعًا وَثَمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் (இணைத்து ஒரேநேரத்தில்) எட்டு ரக்அத்களும், மஃக்ரிபையும் இஷாவையும் (இணைத்து ஒரேநேரத்தில்) ஏழு ரக்அத்களும் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1152

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَمَانِيًا جَمِيعًا وَسَبْعًا جَمِيعًا قُلْتُ يَا ‏ ‏أَبَا الشَّعْثَاءِ ‏ ‏أَظُنُّهُ أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ وَأَخَّرَ الْمَغْرِبَ وَعَجَّلَ الْعِشَاءَ قَالَ وَأَنَا أَظُنُّ ذَاكَ

நான் நபி (ஸல்) அவர்களுடன் எட்டு ரக்அத்(கொண்ட லுஹ்ரு, அஸ்ரு ஆகிய இருதொழுகை)களை ஒரேநேரத்தில் தொழுதிருக்கிறேன்; ஏழு ரக்அத்(கொண்ட மஃக்ரிப், இஷா ஆகிய இருதொழுகை)களை ஒரேநேரத்தில் தொழுதிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம்), “அபுஷ் ஷஅஸா அவர்களே! நபி (ஸல்) லுஹ்ருத் தொழுகையைத் தாமதப்படுத்தி அஸ்ரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுதிருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்” என்றேன். அதற்கு, “நானும் அவ்வாறே எண்ணுகிறேன்” என்று விடையளித்தார்கள் என்று அம்ரு பின் தீனார் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1151

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كُرَيْبٍ ‏ ‏قَالَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فِي غَيْرِ خَوْفٍ وَلَا مَطَرٍ ‏

فِي حَدِيثِ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏لِمَ فَعَلَ ذَلِكَ قَالَ كَيْ لَا ‏ ‏يُحْرِجَ ‏ ‏أُمَّتَهُ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قِيلَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏مَا أَرَادَ إِلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لَا ‏ ‏يُحْرِجَ ‏ ‏أُمَّتَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் (போர்க்கால) அச்சமோ மழையோ இல்லாத சூழலில், லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரேநேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து ஒரேநேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருதினார்கள்” என விடையளித்ததாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1150

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ بْنُ خَالِدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَامِرُ بْنُ وَاثِلَةَ أَبُو الطُّفَيْلِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ جَبَلٍ ‏ ‏قَالَ ‏

جَمَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَبَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏

قَالَ ‏ ‏فَقُلْتُ مَا حَمَلَهُ عَلَى ذَلِكَ قَالَ فَقَالَ أَرَادَ أَنْ لَا ‏ ‏يُحْرِجَ ‏ ‏أُمَّتَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தபூக் போரின்போது லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து(ப் பகலின்) ஒருநேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து (இரவின்) ஒருநேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் ஜபல் (ரலி)

குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஆத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருதினார்கள்” என விடையளித்தார்கள் என்று ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1149

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الطُّفَيْلِ عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاذٍ ‏ ‏قَالَ ‏

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏فَكَانَ ‏ ‏يُصَلِّي الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அவர்கள் லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து(ப் பகலின்) ஒருநேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து (இரவின்) ஒருநேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : முஆத் பின் ஜபல் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 6.05, ஹதீஸ் எண்: 1148

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏قُرَّةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ جُبَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ بَيْنَ الصَّلَاةِ فِي سَفْرَةٍ سَافَرَهَا فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ ‏

قَالَ ‏ ‏سَعِيدٌ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏مَا حَمَلَهُ عَلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لَا ‏ ‏يُحْرِجَ ‏ ‏أُمَّتَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தபூக் போருக்காக மேற்கொண்ட பயணத்தின்போது லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரு (மாலை) நேரத்திலும், மஃக்ரிபையும் இஷாவையும் இணைத்து (இரவின்) ஒருநேரத்திலும் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

நான் இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று வினவினேன். அதற்கவர்கள், “தம் சமுதாயத்தாரில் எவருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருதினார்கள்” என விடையளித்தார்கள் என்று ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1147

و حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ يُونُسَ ‏ ‏وَعَوْنُ بْنُ سَلَّامٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏زُهَيْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

قَالَ ‏ ‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا ‏ ‏بِالْمَدِينَةِ ‏ ‏فِي غَيْرِ خَوْفٍ وَلَا سَفَرٍ ‏

قَالَ ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏فَسَأَلْتُ ‏ ‏سَعِيدًا ‏ ‏لِمَ فَعَلَ ذَلِكَ فَقَالَ سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏كَمَا سَأَلْتَنِي فَقَالَ ‏ ‏أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أَحَدًا مِنْ أُمَّتِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவில் (போர்க்கால) அச்ச நிலையிலோ பயணத்திலோ இல்லாத சூழலில், லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரேநேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

குறிப்பு :

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஸயீத் (ரஹ்) அவர்கள், “நீர் என்னிடம் வினவியதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கவர்கள், ‘தம் சமுதாயத்தாரில் எவருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருதினார்கள் (எனவேதான் இவ்வாறு செய்தார்கள்)’ என விடையளித்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) விடையளித்ததை ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) எடுத்துரைத்ததாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 6, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1146

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

قَالَ ‏ ‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا فِي غَيْرِ خَوْفٍ وَلَا سَفَرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (போர்க்கால) அச்ச நிலையிலோ பயணத்திலோ இல்லாத சூழலில், லுஹ்ரையும் அஸ்ரையும் இணைத்து ஒரேநேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)