அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1435

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ وَيَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ ‏ ‏وَيَقْرُنُ ‏ ‏بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ ‏ ‏أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَشَرُّ الْأُمُورِ ‏ ‏مُحْدَثَاتُهَا ‏ ‏وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ ثُمَّ يَقُولُ أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ‏ ‏ضَيَاعًا ‏ ‏فَإِلَيَّ ‏ ‏وَعَلَيَّ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏ ‏كَانَتْ خُطْبَةُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْجُمُعَةِ يَحْمَدُ اللَّهَ ‏ ‏وَيُثْنِي عَلَيْهِ ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِ ذَلِكَ وَقَدْ عَلَا صَوْتُهُ ثُمَّ ‏ ‏سَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ النَّاسَ يَحْمَدُ اللَّهَ ‏ ‏وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ يَقُولُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَخَيْرُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏الثَّقَفِيِّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரை நிகழ்த்தினால், அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்” என்று எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவதைப் பற்றி எச்சரிப்பவரைப் போன்றிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “நிற்க, உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள்.

பிறகு, “இறை நம்பிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான(உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) ஒருவர் (இறக்கும்போது) விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். (இறக்கும்போது) கடனையோ ஆதரவற்ற குடும்பத்தவரையோ ஒருவர் விட்டுச்சென்றால், (அவரது கடனை அடைப்பதும் அவர்தம் குடும்பத்தவரைப் பராமரிப்பதும்) என்மீதே பொறுப்பாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்புகள் :

ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) வெள்ளிக்கிழமை உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வார்கள். அதைத் தொடர்ந்து தமது குரலை உயர்த்(தி மேற்கண்ட 1435 ஹதீஸில் உள்ளதைப் போன்று உரை நிகழ்த்)துவார்கள்” என்று உள்ளது.

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஜும்ஆவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது. அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற புகழ்மொழிகள் கூறிப் போற்றிப் புகழ்வார்கள். பிறகு “அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் வழிகேட்டில் விட்டவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும்” என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட (1435) ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

Share this Hadith:

Leave a Comment