அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1436

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْأَعْلَى وَهُوَ أَبُو هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ :‏

‏أَنَّ ‏ ‏ضِمَادًا ‏ ‏قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَكَانَ مِنْ ‏ ‏أَزْدِ شَنُوءَةَ ‏ ‏وَكَانَ ‏ ‏يَرْقِي ‏ ‏مِنْ هَذِهِ ‏ ‏الرِّيحِ ‏ ‏فَسَمِعَ سُفَهَاءَ مِنْ أَهْلِ ‏ ‏مَكَّةَ ‏ ‏يَقُولُونَ إِنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏مَجْنُونٌ فَقَالَ لَوْ أَنِّي رَأَيْتُ هَذَا الرَّجُلَ لَعَلَّ اللَّهَ ‏ ‏يَشْفِيهِ عَلَى يَدَيَّ قَالَ فَلَقِيَهُ فَقَالَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏إِنِّي ‏ ‏أَرْقِي ‏ ‏مِنْ هَذِهِ ‏ ‏الرِّيحِ ‏ ‏وَإِنَّ اللَّهَ ‏ ‏يَشْفِي عَلَى يَدِي مَنْ شَاءَ فَهَلْ لَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏ ‏أَمَّا بَعْدُ قَالَ فَقَالَ أَعِدْ عَلَيَّ كَلِمَاتِكَ هَؤُلَاءِ فَأَعَادَهُنَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثَ مَرَّاتٍ قَالَ فَقَالَ لَقَدْ سَمِعْتُ قَوْلَ ‏ ‏الْكَهَنَةِ ‏ ‏وَقَوْلَ السَّحَرَةِ وَقَوْلَ الشُّعَرَاءِ فَمَا سَمِعْتُ مِثْلَ كَلِمَاتِكَ هَؤُلَاءِ وَلَقَدْ بَلَغْنَ ‏ ‏نَاعُوسَ ‏ ‏الْبَحْرِ قَالَ فَقَالَ هَاتِ يَدَكَ أُبَايِعْكَ عَلَى الْإِسْلَامِ قَالَ فَبَايَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَلَى قَوْمِكَ قَالَ وَعَلَى قَوْمِي قَالَ فَبَعَثَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَرِيَّةً ‏ ‏فَمَرُّوا بِقَوْمِهِ فَقَالَ صَاحِبُ ‏ ‏السَّرِيَّةِ ‏ ‏لِلْجَيْشِ هَلْ أَصَبْتُمْ مِنْ هَؤُلَاءِ شَيْئًا فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أَصَبْتُ مِنْهُمْ ‏ ‏مِطْهَرَةً ‏ ‏فَقَالَ رُدُّوهَا فَإِنَّ هَؤُلَاءِ قَوْمُ ‏ ‏ضِمَادٍ

‘அஸ்து ஷனூஆ’ எனும் குலத்தைச் சோர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்று-கறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில மூடர்கள் “முஹம்மது, பித்துப்பிடித்த ஒருவர்” என்று கூறுவதை அவர் செவியுற்றார். “நான் அவரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்” என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மது (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, “முஹம்மதே! காற்று-கறுப்புக்காக நான் ஓதிப்பார்ப்பவன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கின்றான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைப் போற்றுகின்றோம்; அவனிடமே உதவி கோருகின்றோம். அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் வழிகேட்டில் விட்டவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லையென்றும் முஹம்மது, அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவாரென்றும் நான் உறுதி கூறுகிறேன். இது நிற்க! …” என்று கூறி நிறுத்தினார்கள்.

(இதைக் கேட்ட) ளிமாத், “நீங்கள் (இப்போது) கூறிய சொற்களை மீண்டும் கூறுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தச் சொற்களை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், “நான் சோதிடர்களின் கூற்றைச் செவியுற்றிருக்கின்றேன்; சூனியக்காரர்களின் கூற்றைச் செவியுற்றிருக்கின்றேன்; கவிஞர்களின் கூற்றைச் செவியுற்றிருக்கின்றேன். ஆனால், நீங்கள் கூறிய இந்தக் கூற்றைப் போன்று நான் செவியுற்றதேயில்லை. இச்சொற்கள் கடலின் ஆழத்தையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கின்றேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது “உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் “என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கின்றேன்)” என்று கூறினார்.

பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், “இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?” என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், “(ஆம்) நான் ஒரு தண்ணீர் குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்” என்றார். அதற்கு, “அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment