அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1443

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏رَأَى ‏ ‏بِشْرَ بْنَ مَرْوَانَ ‏ ‏عَلَى الْمِنْبَرِ رَافِعًا يَدَيْهِ فَقَالَ قَبَّحَ اللَّهُ هَاتَيْنِ الْيَدَيْنِ ‏

‏لَقَدْ ‏ ‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ بِيَدِهِ هَكَذَا وَأَشَارَ بِإِصْبَعِهِ ‏ ‏الْمُسَبِّحَةِ ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏قَالَ ‏ ‏رَأَيْتُ ‏ ‏بِشْرَ بْنَ مَرْوَانَ ‏ ‏يَوْمَ جُمُعَةٍ يَرْفَعُ يَدَيْهِ فَقَالَ ‏ ‏عُمَارَةُ بْنُ رُؤَيْبَةَ ‏ ‏فَذَكَرَ نَحْوَهُ

பிஷ்ரு பின் மர்வான் மிம்பர்மீது இருந்தபடி இரு கைகளையும் உயர்த்தி(ஜும்ஆ உரையாற்றி)யதை உமாரா பின் ருஅய்பா (ரலி) கண்டார்கள். எனவே, “இவ்விரு கைகளையும் அல்லாஹ் இழிவுபடுத்துவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஜும்ஆ நாளில் உரையாற்றும்போது) தமது சுட்டு விரலால் இவ்வாறு சைகை செய்வதைத் தவிர, கூடுதலாக வேறெதுவும் செய்து அவர்களை நான் பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமாரா பின் ருஅய்பா (ரலி) வழியாக ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

குறிப்பு : அபூஇவானா (ரஹ்) வழி அறிவிப்பில், ”பிஷ்ரு பின் மர்வான் தம் இரு கைகளையும் உயர்த்தி(ஜும்ஆ உரையாற்றி)யதை நான் பார்த்தேன். அப்போது மேற்காணும்(ஹதீஸ் 1443)படி உமாரா பின் ருஅய்பா (ரலி) கூறினார்” என்பதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1442

و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ إِسْحَقَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ الْأَنْصَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ هِشَامٍ بِنْتِ حَارِثَةَ بْنِ النُّعْمَانِ ‏ ‏قَالَتْ ‏

‏لَقَدْ كَانَ ‏ ‏تَنُّورُنَا ‏ ‏وَتَنُّورُ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاحِدًا سَنَتَيْنِ أَوْ سَنَةً وَبَعْضَ سَنَةٍ وَمَا أَخَذْتُ ‏ ‏ق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏إِلَّا عَنْ لِسَانِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَؤُهَا كُلَّ يَوْمِ جُمُعَةٍ عَلَى الْمِنْبَرِ إِذَا خَطَبَ النَّاسَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு அடுப்புதான் இரண்டு ஆண்டுகள் அல்லது ஓராண்டோடு சில மாதங்கள் பயன்பாட்டிலிருந்தது. நான் ‘காஃப். வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவிலிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் சொற்பொழிவு மேடையில் மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஹிஷாம் பின்த் ஹாரிஸா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1441

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏خُبَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ مَعْنٍ ‏ ‏عَنْ ‏ ‏بِنْتٍ لِحَارِثَةَ بْنِ النُّعْمَانِ ‏ ‏قَالَتْ ‏

‏مَا حَفِظْتُ ‏ ‏ق ‏ ‏إِلَّا مِنْ ‏ ‏فِي ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ بِهَا كُلَّ جُمُعَةٍ قَالَتْ وَكَانَ ‏ ‏تَنُّورُنَا ‏ ‏وَتَنُّورُ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاحِدًا

நான் ‘காஃப்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்தே (நேரடியாக) மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆ சொற்பொழிவிலும் அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (இல்லத்தின்) ஒரே அடுப்புதான் எங்களுக்கும் பயன்பாட்டிலிருந்தது.

அறிவிப்பாளர் : (உம்மு ஹிஷாம்) பின்த் ஹாரிஸா (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1440

و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أُخْتٍ لِعَمْرَةَ ‏ ‏قَالَتْ ‏

‏أَخَذْتُ ‏ ‏ق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏مِنْ ‏ ‏فِي ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْجُمُعَةِ وَهُوَ يَقْرَأُ بِهَا عَلَى الْمِنْبَرِ فِي كُلِّ جُمُعَةٍ ‏
‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أُخْتٍ لِعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏كَانَتْ أَكْبَرَ مِنْهَا ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سُلَيْمَانَ بْنِ بِلَالٍ

நான் வெள்ளிக்கிழமையன்று ‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒவ்வொரு ஜும்ஆ மேடையிலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) வழியாக அவர்களின் சகோதரி.

குறிப்பு : யஹ்யா இப்னு அய்யூப் (ரஹ்) வழி அறிவிப்பில், அம்ரா பின்த் அப்திர் ரஹ்மானின் சகோதரி என்பவர் அம்ராவுக்கு வயதால் மூத்தவர் (அக்கா) ஆவார் எனும் குறிப்புள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1439

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ الْحَنْظَلِيُّ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏سَمِعَ ‏ ‏عَطَاءً ‏ ‏يُخْبِرُ عَنْ ‏ ‏صَفْوَانَ بْنِ يَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّهُ ‏
‏سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ عَلَى الْمِنْبَرِ ‏‏”وَنَادَوْا يَا ‏ ‏مَالِكُ“

நபி (ஸல்), “(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) மாலிக்கே! என்று அழைப்பார்கள்” எனும் (43:77ஆவது) வசனத்தை சொற்பொழிவு மேடையில் ஓதியதை நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பாளர் : யஅலா பின் உமய்யா (ரலி) வழியாக ஸஃப்வான் பின் யஅலா.

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1438

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏تَمِيمِ بْنِ طَرَفَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ حَاتِمٍ ‏

‏أَنَّ رَجُلًا خَطَبَ عِنْدَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ مَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشَدَ وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ ‏ ‏غَوَى ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِئْسَ الْخَطِيبُ أَنْتَ قُلْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ قَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏فَقَدْ ‏ ‏غَوِيَ

நபி (ஸல்) அருகிலிருந்து சொற்பொழிவாற்றிய ஒருவர், “அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றவர் நேர்வழி அடைந்துவிட்டார். அவர்கள் இருவருக்கும் மாறு செய்கின்றவர் வழிதவறிவிட்டார்” என்று குறிப்பிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீர் ஒரு மோசமான சொற்பொழிவாளர். ‘அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கின்றவர்’ என்று (பிரித்துக்) கூறுவீராக!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹாத்திம் (ரலி).

குறிப்பு : ‘வழிதவறிவிட்டார்’ என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் ஆளப்பட்டுள்ள ‘ஃகவா’ எனும் சொல், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அறிவிப்பில் ‘ஃகவிய’ என்று உள்ளது.

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1437

حَدَّثَنِي ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبْجَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏وَاصِلِ بْنِ حَيَّانَ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو وَائِلٍ ‏ ‏خَطَبَنَا ‏ ‏عَمَّارٌ ‏ ‏فَأَوْجَزَ وَأَبْلَغَ فَلَمَّا نَزَلَ قُلْنَا يَا ‏ ‏أَبَا الْيَقْظَانِ ‏ ‏لَقَدْ أَبْلَغْتَ وَأَوْجَزْتَ فَلَوْ كُنْتَ تَنَفَّسْتَ ‏

‏فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّ طُولَ صَلَاةِ الرَّجُلِ وَقِصَرَ خُطْبَتِهِ ‏ ‏مَئِنَّةٌ ‏ ‏مِنْ فِقْهِهِ فَأَطِيلُوا الصَّلَاةَ وَاقْصُرُوا الْخُطْبَةَ وَإِنَّ مِنْ ‏ ‏الْبَيَانِ ‏ ‏سِحْرًا

எங்களுக்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) செறிவுடன் சுருக்கமாக (வெள்ளிக்கிழமை ஒன்றில்) உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது, “அபுல் யக்ளானே! செறிவுடன் சுருக்கமாக உரை நிகழ்த்தினீர்கள். இன்னும் சிறிது நீட்டியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?” என்று நாங்கள் வினவினோம். அதற்கு அவர்கள், “தொழுகையை நீட்டி, உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளமாகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் வசியம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸிர் (ரலி) வழியாக அபூவாயில் (ரஹ்)

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1436

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْأَعْلَى وَهُوَ أَبُو هَمَّامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّ ‏ ‏ضِمَادًا ‏ ‏قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏وَكَانَ مِنْ ‏ ‏أَزْدِ شَنُوءَةَ ‏ ‏وَكَانَ ‏ ‏يَرْقِي ‏ ‏مِنْ هَذِهِ ‏ ‏الرِّيحِ ‏ ‏فَسَمِعَ سُفَهَاءَ مِنْ أَهْلِ ‏ ‏مَكَّةَ ‏ ‏يَقُولُونَ إِنَّ ‏ ‏مُحَمَّدًا ‏ ‏مَجْنُونٌ فَقَالَ لَوْ أَنِّي رَأَيْتُ هَذَا الرَّجُلَ لَعَلَّ اللَّهَ ‏ ‏يَشْفِيهِ عَلَى يَدَيَّ قَالَ فَلَقِيَهُ فَقَالَ يَا ‏ ‏مُحَمَّدُ ‏ ‏إِنِّي ‏ ‏أَرْقِي ‏ ‏مِنْ هَذِهِ ‏ ‏الرِّيحِ ‏ ‏وَإِنَّ اللَّهَ ‏ ‏يَشْفِي عَلَى يَدِي مَنْ شَاءَ فَهَلْ لَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏ ‏أَمَّا بَعْدُ قَالَ فَقَالَ أَعِدْ عَلَيَّ كَلِمَاتِكَ هَؤُلَاءِ فَأَعَادَهُنَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثَ مَرَّاتٍ قَالَ فَقَالَ لَقَدْ سَمِعْتُ قَوْلَ ‏ ‏الْكَهَنَةِ ‏ ‏وَقَوْلَ السَّحَرَةِ وَقَوْلَ الشُّعَرَاءِ فَمَا سَمِعْتُ مِثْلَ كَلِمَاتِكَ هَؤُلَاءِ وَلَقَدْ بَلَغْنَ ‏ ‏نَاعُوسَ ‏ ‏الْبَحْرِ قَالَ فَقَالَ هَاتِ يَدَكَ أُبَايِعْكَ عَلَى الْإِسْلَامِ قَالَ فَبَايَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَلَى قَوْمِكَ قَالَ وَعَلَى قَوْمِي قَالَ فَبَعَثَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَرِيَّةً ‏ ‏فَمَرُّوا بِقَوْمِهِ فَقَالَ صَاحِبُ ‏ ‏السَّرِيَّةِ ‏ ‏لِلْجَيْشِ هَلْ أَصَبْتُمْ مِنْ هَؤُلَاءِ شَيْئًا فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أَصَبْتُ مِنْهُمْ ‏ ‏مِطْهَرَةً ‏ ‏فَقَالَ رُدُّوهَا فَإِنَّ هَؤُلَاءِ قَوْمُ ‏ ‏ضِمَادٍ

‘அஸ்து ஷனூஆ’ எனும் குலத்தைச் சோர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்று-கறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில மூடர்கள் “முஹம்மது, பித்துப்பிடித்த ஒருவர்” என்று கூறுவதை அவர் செவியுற்றார். “நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்” என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, “முஹம்மதே! காற்று-கறுப்புக்காக நான் ஓதிப்பார்ப்பவன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைப் போற்றுகின்றோம்; அவனிடமே உதவி கோருகின்றோம். அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் வழிகேட்டில் விட்டவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லையென்றும் முஹம்மது, அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவாரென்றும் நான் உறுதி கூறுகிறேன். இது நிற்க! …” என்று கூறி நிறுத்தினார்கள்.

(இதைக் கேட்ட) ளிமாத், “நீங்கள் (இப்போது) கூறிய சொற்களை மீண்டும் கூறுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்தச் சொற்களை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், “நான் சோதிடர்களின் கூற்றைச் செவியுற்றிருக்கின்றேன்; சூனியக்காரர்களின் கூற்றைச் செவியுற்றிருக்கின்றேன்; கவிஞர்களின் கூற்றைச் செவியுற்றிருக்கின்றேன். ஆனால், நீங்கள் கூறிய இந்தக் கூற்றைப் போன்று நான் செவியுற்றதேயில்லை. இச்சொற்கள் கடலின் ஆழத்தையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கின்றேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது “உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் “என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கின்றேன்)” என்று கூறினார்.

பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், “இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?” என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், “(ஆம்) நான் ஒரு தண்ணீர் குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்” என்றார். அதற்கு, “அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1435

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ وَيَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ ‏ ‏وَيَقْرُنُ ‏ ‏بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ ‏ ‏أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَشَرُّ الْأُمُورِ ‏ ‏مُحْدَثَاتُهَا ‏ ‏وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ ثُمَّ يَقُولُ أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ‏ ‏ضَيَاعًا ‏ ‏فَإِلَيَّ ‏ ‏وَعَلَيَّ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ مَخْلَدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُا ‏ ‏كَانَتْ خُطْبَةُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ الْجُمُعَةِ يَحْمَدُ اللَّهَ ‏ ‏وَيُثْنِي عَلَيْهِ ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِ ذَلِكَ وَقَدْ عَلَا صَوْتُهُ ثُمَّ ‏ ‏سَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَخْطُبُ النَّاسَ يَحْمَدُ اللَّهَ ‏ ‏وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ يَقُولُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَخَيْرُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏الثَّقَفِيِّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உரை நிகழ்த்தினால், அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்” என்று எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவதைப் பற்றி எச்சரிப்பவரைப் போன்றிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “நிற்க, உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள்.

பிறகு, “இறை நம்பிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான(உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) ஒருவர் (இறக்கும்போது) விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். (இறக்கும்போது) கடனையோ ஆதரவற்ற குடும்பத்தவரையோ ஒருவர் விட்டுச்சென்றால், (அவரது கடனை அடைப்பதும் அவர்தம் குடும்பத்தவரைப் பராமரிப்பதும்) என்மீதே பொறுப்பாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்புகள் :

ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) வெள்ளிக்கிழமை உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வார்கள். அதைத் தொடர்ந்து தமது குரலை உயர்த்(தி மேற்கண்ட 1435 ஹதீஸில் உள்ளதைப் போன்று உரை நிகழ்த்)துவார்கள்” என்று உள்ளது.

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஜும்ஆவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது. அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற புகழ்மொழிகள் கூறிப் போற்றிப் புகழ்வார்கள். பிறகு “அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் வழிகேட்டில் விட்டவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும்” என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட (1435) ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 7, பாடம்: 13, ஹதீஸ் எண்: 1434

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏سِمَاكُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ ‏

‏كُنْتُ ‏ ‏أُصَلِّي مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصَّلَوَاتِ فَكَانَتْ صَلَاتُهُ ‏ ‏قَصْدًا ‏ ‏وَخُطْبَتُهُ ‏ ‏قَصْدًا ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي بَكْرٍ زَكَرِيَّاءُ ‏ ‏عَنْ ‏ ‏سِمَاكٍ

நான் நபி (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கின்றேன். அவர்களது தொழுகையும் உரையும் நடுத்தரமாகவே அமைந்திருந்தன.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஸிமாக் (ரஹ்).