و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ حُصَيْنٍ عَنْ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ قَالَ رَأَى بِشْرَ بْنَ مَرْوَانَ عَلَى الْمِنْبَرِ رَافِعًا يَدَيْهِ فَقَالَ قَبَّحَ اللَّهُ هَاتَيْنِ الْيَدَيْنِ
لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَزِيدُ عَلَى أَنْ يَقُولَ بِيَدِهِ هَكَذَا وَأَشَارَ بِإِصْبَعِهِ الْمُسَبِّحَةِ
و حَدَّثَنَاه قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ رَأَيْتُ بِشْرَ بْنَ مَرْوَانَ يَوْمَ جُمُعَةٍ يَرْفَعُ يَدَيْهِ فَقَالَ عُمَارَةُ بْنُ رُؤَيْبَةَ فَذَكَرَ نَحْوَهُ
பிஷ்ரு பின் மர்வான் மிம்பர்மீது இருந்தபடி இரு கைகளையும் உயர்த்தி(ஜும்ஆ உரையாற்றி)யதை உமாரா பின் ருஅய்பா (ரலி) கண்டார்கள். எனவே, “இவ்விரு கைகளையும் அல்லாஹ் இழிவுபடுத்துவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஜும்ஆ நாளில் உரையாற்றும்போது) தமது சுட்டு விரலால் இவ்வாறு சைகை செய்வதைத் தவிர, கூடுதலாக வேறெதுவும் செய்து அவர்களை நான் பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உமாரா பின் ருஅய்பா (ரலி) வழியாக ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)
குறிப்பு : அபூஇவானா (ரஹ்) வழி அறிவிப்பில், ”பிஷ்ரு பின் மர்வான் தம் இரு கைகளையும் உயர்த்தி(ஜும்ஆ உரையாற்றி)யதை நான் பார்த்தேன். அப்போது மேற்காணும்(ஹதீஸ் 1443)படி உமாரா பின் ருஅய்பா (ரலி) கூறினார்” என்பதாக இடம்பெற்றுள்ளது.