அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1483

حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏جَاءَ ‏ ‏حَبَشٌ ‏ ‏يَزْفِنُونَ ‏ ‏فِي يَوْمِ عِيدٍ فِي الْمَسْجِدِ فَدَعَانِي النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَوَضَعْتُ رَأْسِي عَلَى ‏ ‏مَنْكِبِهِ ‏ ‏فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ حَتَّى كُنْتُ أَنَا الَّتِي أَنْصَرِفُ عَنْ النَّظَرِ إِلَيْهِمْ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرَا فِي الْمَسْجِدِ

ஒரு பெருநாள் தினத்தில் அபிசீனியர்கள் (ஆயுதங்களை வைத்து) குதித்து விளையாடிக் கொண்டு பள்ளி(வளாகத்து)க்கு வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் (வந்து) எனது தலையை நபி (ஸல்) அவர்களது தோள்மீது வைத்துக் கொண்டு அபிசீனியர்களின் விளையாட்டுகளைப் பார்க்க ஆரம்பித்தேன். இறுதியில் அவர்களை வேடிக்கை பார்ப்பதை நானாகவே முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள்:

இபுனு நுமைர் (ரஹ்) & முஹம்மதிப்னு பிஷ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் “பள்ளி(வளாகத்து)க்கு” எனும் சொல் இடம்பெறவில்லை.

அக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

Share this Hadith:

Leave a Comment