அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1484

و حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏وَعُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَاصِمٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعُقْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ بْنُ عُمَيْرٍ ‏ ‏أَخْبَرَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏

‏أَنَّهَا قَالَتْ لِلَعَّابِينَ وَدِدْتُ أَنِّي ‏ ‏أَرَاهُمْ قَالَتْ ‏ ‏فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقُمْتُ عَلَى الْبَابِ أَنْظُرُ بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ ‏

‏قَالَ ‏ ‏عَطَاءٌ ‏ ‏فُرْسٌ ‏ ‏أَوْ ‏ ‏حَبَشٌ ‏ ‏قَالَ وَقَالَ لِي ‏ ‏ابْنُ عَتِيقٍ ‏ ‏بَلْ ‏ ‏حَبَشٌ

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “நான் அந்த விளையாட்டு வீரர்களின் விளையாட்டைப் பார்க்க விரும்புவதாகக் கூறி(அனுப்பி)னேன். அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளையாடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (விளையாட்டைப் பார்த்துக் கொண்டு) நின்றார்கள்.

நான் (எனது அறை) வாசலில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுகளுக்கும் தோள்களுக்கும் இடையே (எனது முகத்தை வைத்து) அந்த வீரர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள்:

“(அந்த வீரர்கள்,) பாரசீகர்கள் அல்லது அபிசீனியர்களாக இருக்கக் கூடும்” என்று நான் சொன்னேன். ஆனால் இபுனு அதீக் (ரஹ்), “அல்ல; அவர்கள் அபிசீனியர்கள்தாம்” எனச் சொன்னார்கள் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அதாஉ (ரஹ்) கூறுகிறார்.

அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

Share this Hadith:

Leave a Comment