அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 17

و حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ وَالْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ قَالا حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ شَيْبَانَ عَنْ الأعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ وَأَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ :‏

قَالَ النُّعْمَانُ بْنُ قَوْقَلٍ يَا رَسُولَ اللَّهِ بِمِثْلِهِ وَزَادَا فِيهِ وَلَمْ أَزِدْ عَلَى ذَلِكَ شَيْئًا

மேற்கண்ட (16ஆவது) ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் நுஅமான் பின் கவ்கல் (ரலி), “இதைவிட அதிகமாக வேறெதையும் நான் செய்யமாட்டேன்” என்று கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 16

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَاللَّفْظُ لأبِي كُرَيْبٍ قَالا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الأعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ :‏

أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النُّعْمَانُ بْنُ قَوْقَلٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِذَا صَلَّيْتُ الْمَكْتُوبَةَ وَحَرَّمْتُ الْحَرَامَ وَأَحْلَلْتُ الْحَلالَ أَأَدْخُلُ الْجَنَّةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ

நுஅமான் பின் கவ்கல் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையானத் தொழுகையை நிறைவேற்றி (மார்க்கத்தில்) விலக்கப் பட்டவற்றை விலக்கியும் அனுமதிக்கப்பட்டவற்றை ஏற்றும் வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபின் பின் அப்தில்லாஹ் (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 15

و حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ قَالَ تَعْبُدُ اللَّهَ لا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاةَ الْمَكْتُوبَةَ وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومُ رَمَضَانَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لا أَزِيدُ عَلَى هَذَا شَيْئًا أَبَدًا وَلا أَنْقُصُ مِنْهُ فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள். அதைச் செயல்படுத்தி நான் சொர்க்கம் செல்ல வேண்டும்” என்று வேண்டினார். நபி (ஸல்),  “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அவர், “என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! ஒருபோதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்க மாட்டேன்” என்று கூறினார்.

அவர் சென்றதும் நபி (ஸல்), “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்த்து மகிழ விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 14

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ أَخْبَرَنَا أَبُو الأحْوَصِ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الأحْوَصِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِي أَيُّوبَ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ أَعْمَلُهُ يُدْنِينِي مِنْ الْجَنَّةِ وَيُبَاعِدُنِي مِنْ النَّارِ قَالَ تَعْبُدُ اللَّهَ لا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ ذَا رَحِمِكَ فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ تَمَسَّكَ بِمَا أُمِرَ بِهِ دَخَلَ الْجَنَّةَ


وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ إِنْ تَمَسَّكَ بِهِ

ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “செயல்படுத்தினால் என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கக் கூடிய ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “அல்லாஹ்வை நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறினார்கள்.

அவர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இவருக்குக் கட்டளையிடப பட்டவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் சொர்க்கம் சென்றுவிடுவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி).


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “இதை அவர் கடைப்பிடித்தால் …” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 13

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ قَالا حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ وَأَبُوهُ عُثْمَانُ أَنَّهُمَا سَمِعَا مُوسَى بْنَ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ أَبِي أَيُّوبَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ هَذَا الْحَدِيثِ

மேற்கண்ட (12ஆவது) ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம்: 1, பாடம்: 1.04, ஹதீஸ் எண்: 12

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ حَدَّثَنَا مُوسَى بْنُ طَلْحَةَ قَالَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ :‏

أَنَّ أَعْرَابِيًّا عَرَضَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي سَفَرٍ فَأَخَذَ بِخِطَامِ نَاقَتِهِ أَوْ بِزِمَامِهَا ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَوْ يَا مُحَمَّدُ أَخْبِرْنِي بِمَا يُقَرِّبُنِي مِنْ الْجَنَّةِ وَمَا يُبَاعِدُنِي مِنْ النَّارِ قَالَ فَكَفَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ نَظَرَ فِي أَصْحَابِهِ ثُمَّ قَالَ لَقَدْ وُفِّقَ أَوْ لَقَدْ هُدِيَ قَالَ كَيْفَ قُلْتَ قَالَ فَأَعَادَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْبُدُ اللَّهَ لا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ دَعْ النَّاقَةَ

ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடைமறித்து அவர்களது ஒட்டகத்தின் ‘கடிவாளத்தை’ அல்லது ‘மூக்கணாங் கயிற்றைப்’ பிடித்துக் கொண்டார். பிறகு, “அல்லாஹ்வின் தூதரே” அல்லது “முஹம்மதே” என விளித்து, “என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்க வல்லதொரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு பதில் கூறாமல்) நிதானமாகத் தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் “நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்” என்றோ அல்லது “நேர்வழி நடத்தப்பட்டுவிட்டார்'” என்றோ கூறிவிட்டுப் பின்னர் அவரிடம் திரும்பி, “நீங்கள் என்ன கேட்டீர்கள்?” என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார்.

அப்போது நபி (ஸல்), “அல்லாஹ்வை (மட்டுமே) நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைபிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறிவிட்டு, “எனது ஒட்டகத்தை விடுங்கள் (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்).” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 11

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الْعَبْدِيُّ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ قَالَ قَالَ أَنَسٌ كُنَّا نُهِينَا فِي الْقُرْآنِ أَنْ نَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ

ஸாபித் அல்புனானி (ரஹ்) கூறியதாவது:

அனஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேவையில்லாக் கேள்விகள் கேட்க நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப்பெற்றிருந்தோம்” என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அறிவித்தார்கள்.

அத்தியாயம்: 1, பாடம்: 1.03, ஹதீஸ் எண்: 10

حَدَّثَنِي عَمْرُو بْنُ مُحَمَّدِ بْنِ بُكَيْرٍ النَّاقِدُ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ أَبُو النَّضْرِ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

نُهِينَا أَنْ نَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَيْءٍ فَكَانَ يُعْجِبُنَا أَنْ يَجِيءَ الرَّجُلُ مِنْ أَهْلِ الْبَادِيَةِ الْعَاقِلُ فَيَسْأَلَهُ وَنَحْنُ نَسْمَعُ فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ فَقَالَ يَا مُحَمَّدُ أَتَانَا رَسُولُكَ فَزَعَمَ لَنَا أَنَّكَ تَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَكَ قَالَ صَدَقَ قَالَ فَمَنْ خَلَقَ السَّمَاءَ قَالَ اللَّهُ قَالَ فَمَنْ خَلَقَ الأرْضَ قَالَ اللَّهُ قَالَ فَمَنْ نَصَبَ هَذِهِ الْجِبَالَ وَجَعَلَ فِيهَا مَا جَعَلَ قَالَ اللَّهُ قَالَ فَبِالَّذِي خَلَقَ السَّمَاءَ وَخَلَقَ الأرْضَ وَنَصَبَ هَذِهِ الْجِبَالَ آللَّهُ أَرْسَلَكَ قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِنَا وَلَيْلَتِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا زَكَاةً فِي أَمْوَالِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا صَوْمَ شَهْرِ رَمَضَانَ فِي سَنَتِنَا قَالَ صَدَقَ قَالَ فَبِالَّذِي أَرْسَلَكَ آللَّهُ أَمَرَكَ بِهَذَا قَالَ نَعَمْ قَالَ وَزَعَمَ رَسُولُكَ أَنَّ عَلَيْنَا حَجَّ الْبَيْتِ مَنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلا قَالَ صَدَقَ قَالَ ثُمَّ وَلَّى قَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لا أَزِيدُ عَلَيْهِنَّ وَلا أَنْقُصُ مِنْهُنَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَئِنْ صَدَقَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் தேவையில்லாக் கேள்விகள் கேட்கத் தடை விதிக்கப் பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) விபரமான கிராமத்தார் யாரேனும் ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்களின் உள்ளக் கிடக்கையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, “முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து அல்லாஹ் உங்களை(த் தூதராக) அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?” என்று கேட்டார். நபி (ஸல்), “உண்மைதான்” என்று கூறினார்கள்.

அந்தக் கிராமவாசி, “வானத்தைப் படைத்தவன் யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “அல்லாஹ்” என்று பதிலளித்தார்கள். “பூமியைப் படைத்தவன் யார்?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்), “அல்லாஹ்” என்றார்கள். “இந்த மலைகளை நட்டு வைத்தவனும் அவற்றில் உள்ளவற்றை உருவாக்கியவனும் யார்?” என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்), “அல்லாஹ்” என்றார்கள். “அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து, இந்த மலைகளை நட்டும் வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?” என்று அவர் கேட்டார், நபி (ஸல்), “ஆம்” என்று கூறினார்கள்.

அவர், “இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?” என்று கேட்டார். நபி (ஸல்), “உண்மைதான்” என்றார்கள். “உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்),  “ஆம்” என்றார்கள்.

தொடர்ந்து அவர், “நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து ‘ஜகாத்’ செலுத்துவது எங்கள் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), “உண்மைதான்” என்றார்கள். “உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?” என்று அந்தக் கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்), “ஆம்” என்றார்கள்.

அவர் “ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே” என்று கேட்க, அதற்கு நபி (ஸல்), “உண்மைதான்” என்றார்கள். “உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?” என்று கேட்டார். நபி (ஸல்), “ஆம்” என்றார்கள். “மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதி படைத்தோர் இறையில்லம் கஅபாவில் ‘ஹஜ்’ செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்), “உண்மைதான்” என்றார்கள்.

பிறகு அந்தக் கிராமவாசி, “உங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவும் மாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன்” என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்), “அவருடைய கூற்றை உண்மைப்படுத்திச் செயலாற்றினால் அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 1, பாடம்: 1.02, ஹதீஸ் எண்: 9

حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ نَحْوَ حَدِيثِ مَالِكٍ غَيْرَ أَنَّهُ قَالَ :‏

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ وَأَبِيهِ إِنْ صَدَقَ أَوْ دَخَلَ الْجَنَّةَ وَأَبِيهِ إِنْ صَدَقََ

மேற்கண்ட (எட்டாவது) ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

“அவருடைய கூற்றை உண்மைப் படுத்திச் செயலாற்றினால் – அவர் அப்பராணை, வெற்றியடைந்து விட்டார்” என்றோ “அவருடைய கூற்றை உண்மைப் படுத்திச் செயலாற்றினால் அவர் அப்பராணை, சுவனத்தில் நுழைந்து விட்டார்” என்றோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அதில் இடம் பெற்றுள்ளது.


குறிப்பு:

சில மொழிபெயர்ப்புகளில், “அவருடைய தந்தை மீது ஆணையாக!” என்று நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பிடப் படுகிறது. அக்கால அரபு மொழிப் பேச்சு வழக்கில், “அப்பராணை” என்ற சொல் சரளமாகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. “அப்பராணை” என்பது, சொல்ல வேண்டிய கருத்தை ஆழமாகச் சொல்வதற்கு அக்காலத்தில் இயல்பாக ஆளப்பட்ட சொல்லேயன்றி ஆணையிடும் சொல்லன்று. தமிழிலும் இதுபோல் வழக்குச் சொல் உண்டு.

அத்தியாயம்: 1, பாடம்: 1.02, ஹதீஸ் எண்: 8

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفِ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيُّ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ أَبِي سُهَيْلٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُا :‏

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرُ الرَّأْسِ نَسْمَعُ دَوِيَّ صَوْتِهِ وَلا نَفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الإسْلامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُنَّ قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَصِيَامُ شَهْرِ رَمَضَانَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ فَقَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لا إِلا أَنْ تَطَّوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لا أَزِيدُ عَلَى هَذَا وَلا أَنْقُصُ مِنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

நஜ்துவாசிகளில் ஒருவர் தலைமுடி கலைந்தவராக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கி வந்தபோதுதான் அவர் இஸ்லாத்(தின் அடிப்படைக் கடமைகள் யாவை என்ப)தைப் பற்றி வினவுகின்றார் என்று எங்களுக்குப் புரிந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஒரு நாளின்) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது)” என்று அவருக்கு பதிலளித்தார்கள். உடனே அவர் “இவற்றைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமைத் தொழுகைகள்) உள்ளதா?” என்று கேட்க “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அடுத்து, “ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது” என நபி (ஸல்) கூறினார்கள். அவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான நோன்புகள்) உள்ளனவா?” என்று கேட்க, “நீயாக விரும்பினாலேயன்றி(க் கூடுதலாகக் கடமை) ஏதுமில்லை” என்று நபி (ஸல்)  கூறினார்கள்.

மேலும், ‘ஜகாத்’ (செலுத்துவது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அதற்கவர், “இதைத் தவிர என் மீது வேறு ஏதேனும் (கடமையான தானம்) உண்டா?” எனக் கேட்க, “நீயாக விரும்பி(வழங்கி)டுவதைத் தவிரக் கூடுதலாக(க் கடமை) இல்லை” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதை (விடக்) குறைக்கவும் மாட்டேன்” என்று கூறித் திரும்பிச் சென்றார். “அவருடைய கூற்றை உண்மைப்படுத்திச் செயலாற்றினால் அவர் வெற்றியடைந்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)